Tips to Keep Babies Cool in Summer
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
கோடை காலத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது என்று நாம் அனைவரும் அறிந்ததே. இன்னும் சில நாட்களில் கத்தரி வெயிலும் தொடங்கி விடும்.எனவே,கோடை காலத்தில் குழந்தைகளை பராமரிப்பதற்கான எளிய வழிகளை காணலாம்.
குளிர் காலத்தில் குழந்தையை பராமரிப்பதுதான் கடினம் குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் பாதுகாப்பாக கவனிக்க வேண்டும் என்று நாம் பெரும்பாலானோர் நினைத்திருப்போம். உண்மையில் வெயில் காலத்தில பராமரிப்பது அதை விட கடினம். ஏனென்றால் குழந்தைகளின் சருமம் மிகவும் சென்ஸிடிவாக இருப்பதால் அதிகப்படியான வெப்பத்தை தாங்க முடியாது. சில குழந்தைகளுக்கு வெளியில் சென்றால் ‘சன் பர்ன்’ ‘ராஷஸ்’ ஆகியவை ஏற்படும். குழந்தைகளின் உடலுக்கு வெப்ப சமநிலை படுத்தும் திறன் இல்லாததால் விரைவில் நீர்ச்சத்தை இழக்கும். ஆகவே, இது சில நேரம் அபாயகரமானதாக ஆக வாய்ப்புள்ளது.
எனவே, குழந்தைகளுக்கு என்ன வேண்டும் என்பதை ஆராய்ந்து சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.இப்பொழுது குழந்தையை எப்படி பராமரிப்பது என்ற சந்தேகம் உங்களுக்குள் எழுந்திருக்கும் அப்படித்தானே? கவலை வேண்டாம்.கோடை காலத்தில குழந்தைகளை பராமரிப்பதற்கான சில எளிய வழிகளை நாம் பார்க்கலாம்.
கோடை காலத்தில் குழந்தைகளை பராமரிக்க எளிய வழிகள்
1.வெயிலில் செல்வதை தவிர்த்திடுங்கள்
குழந்தையை வெப்பத்திலிருந்து பாதுகாக்க இதுவே மிக எளிமையான வழியாகும். குறிப்பாக வெப்பத்தின் தாக்கம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அதிகமாக இருக்கும். எனவே,அந்த நேரத்தில் குழந்தைகளை வெளியில் அழைத்து செல்வதை தவிர்க்கலாம்.ஆறு மாதத்திற்கு கீழ் உள்ள குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லாமல் இருப்பதே சிறந்தது. ஏ.சி அறை என்றால், குளிர் 24 டிகிரி அளவில் இருப்பது போல் வைக்க வேண்டும். எப்போதும் ஏ.சி அறையிலேயே வைத்திருப்பதும் கூடாது.
2.மெல்லிய பருத்தி துணிகள் அணிய வேண்டும்
வெயில் காலத்தில் குழந்தைகளை அதிகமான துணிகள் கொண்டு சுற்றினால் உடலின் வெப்பநிலை அதிகரிக்ககூடும். எனவே, குழந்தைகளுக்கு மெல்லிய பருத்தி ஆடைகளை உபயோகிப்பதே நல்லது.மிக மிருதுவான ஒரு பருத்தித் துணியால் போர்த்தினால் போதும். குழந்தைகளின் உடலுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் கனமான கவுன் முதலியவைகளை அணிய கூடாது.இரவு நேரத்தில் இன்னும் கூடுதலாக கவனம் தேவை.
3.குழந்தைக்கு பெரிய தொப்பியை அணியுங்கள்
குழந்தைகள் தோட்டத்தில் விளையாடும்பொழுதும், பால்கனியில் இருக்கும் பொழுதும் முகத்தை மறைக்கும் வண்ணம் தொப்பியை அணிவிப்பது நல்லது.உபயோகிக்கும் தொப்பியும் பருத்தி துணியில் இருப்பது நல்லது.ஏனென்றால் மற்ற துணிகளை உபயோகிக்கும் பொழுது உடலின் வெப்பநிலை அதிகரித்து குழந்தைக்கு எரிச்சலூட்டக்கூடும்.
4.துணியாலான டயாஃபரை உபயோகிங்கள்
கோடை காலத்தில் எப்பொழுதும் உபயோகிக்கும் டிப்போசபிள் டயாஃபர் உபயோகிப்பது நல்லதல்ல. ஏனென்றால், அதை உபயோகிக்கும் பொழுது குழந்தைகளுக்கு ராஷஸ் வர வாய்ப்புள்ளது. எனவே, பருத்தி துணியினாலான டயாஃபரை உபயோகிப்பது நல்லது.
5.தாய்ப்பால் அடிக்கடி கொடுங்கள்
தாய்ப்பாலில் 80% நீர்ச்சத்து இருப்பதால் 6 மாதத்திற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தண்ணீர் தர தேவையில்லை. ஆனால், குழந்தைகளுக்கு அடிக்கடி தாய்ப்பால் தர வேண்டும். ஏனெனில், குழந்தைகள் தாகத்தை தணிப்பதற்கு குறுகிய கால இடைவெளியில் அடிக்கடி தாய்ப்பால் குடிப்பதை விரும்புவர். எனவே நாமும் கவனமாக குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க வேண்டும்.
6.தாய்ப்பால் குச்சி ஐஸ்
தாய்ப்பால் மற்றும் பழங்களால் ஆன குச்சி ஐஸினை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.புதிதாக பல் முளைக்கும் குழந்தைகளுக்கு இது இதமாகவும் இருக்கும்.கடைகளில் கிடைக்கும்.ஐஸினை கொடுக்க வேண்டாம்.குழந்தைகளுக்கு வேண்டுமானால் வீட்டிலேயே செய்து கொடுங்கள்.
கோடை காலத்தில் குளிர்ச்சியான உணவுபொருட்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். ராகி, கம்பு,பார்லி போன்ற உணவு பொருட்கள் கோடை காலத்தில் உண்பதற்கு ஏற்றவை.அதே போல சீரகம், கொத்துமல்லி முதலியவற்றையும் சாப்பிடலாம்.குழந்தைகளுக்கு 6 மாதத்திற்கு பின் திட உணவு கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது மேற்க்கண்ட பொருட்களை உணவுடன் சேர்த்து பார்லி வாட்டர், ராகி கஞ்சி,பஜ்ரா மூங் தால் கஞ்சி போன்ற வித விதமாவிதமான ரெசிபிக்களை சமைத்து கொடுக்கலாம்.அதே போல் தண்ணீர்ச்சத்து அதிகமுள்ள, பழங்களையும் சாப்பிட அடிக்கடி கொடுக்க வேண்டும்.
8.மசாஜ் ஆயிலை கவனமாக தேர்ந்தெடுங்கள்
கோடை காலத்தில் ஏற்கனவே குழந்தைகளின் சருமம் பிசு பிசுப்பாக இருப்பதால் அதற்கு ஏற்றவாறு ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற மசாஜ் ஆயிலை உபயோகிக்க வேண்டும். குழந்தையின் சருமம் எண்ணெய் பசையுடன் இருந்தால் கோடை காலம் முடியும் வரை மசாஜ் ஆயில் உபயோகிப்பதை தவிர்க்கவும்.
9.பால் புகட்டும் முறையை மாற்றுங்கள்
பால் புகட்டும் பொழுது தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான அதிகபட்ச நெருக்கம் குழந்தைக்கு வெட்கையாக இருக்கலாம்.எனவே, குழந்தைக்கு பால் புகட்டு பொழுது சருமம் உரசாமல் இருக்க பருத்தி துணியினை பயன்படுத்தலாம்.இல்லையெனில் படுத்துக்கொண்டு குழந்தையின் சருமம் ஒட்டாதவாறு பால் புகட்டலாம்.
10.தண்ணீரில் நனைத்த துணியினால் ஒத்தி எடுக்கவும்
மிருதுவான பருத்தி டவலை எடுத்து கொள்ளுங்கள். டவலை குளிர்ந்த தண்ணீரில் நனைத்து குழந்தையின் சருமத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் ஒத்திஎடுங்கள்.
11.காற்றோட்டமான இடத்தில் தூங்க செய்யுங்கள்
கோடை காலத்தில் குழந்தைகள் நீண்ட நேரம் மெத்தையில் தூங்குவது நல்லதல்ல. எனவே பருத்தி துணிகளை மெத்தை போல தரையில் விரித்து தூங்க செய்யலாம்.ஏ.சி அறை என்றால், குளிர் 27 டிகிரி அளவில் இருப்பது போல் வைக்க வேண்டும். எப்போதும் ஏ.சி அறையிலேயே வைத்திருப்பதும் கூடாது.
12.குழந்தையை சுற்றியுள்ள இடங்களை குளுமையாக்குங்கள்
குழந்தை தூங்கும் தொட்டிலை சுற்றியோ அல்லது தூங்கும் இடத்தை சுற்றியோ ஈரமான துணியை நீரில் நனைத்து தொங்க விடலாம். அது குளிர்ந்த சூழ்நிலையை ஏற்படுத்தும். இது இயற்கை ஏ.சி போன்று இருக்கும்.
13.வாட்டர் ப்ரூஃப் விரிப்பானை தவிர்த்துடுங்கள்
குழந்தைகள் படுக்கும் பொழுது வாட்டர் ப்ரூஃப் விரிப்பான் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள்.மெல்லிய பருத்தி விரிப்பானே நல்லது.
14.ஜன்னலை திரையிடுங்கள்
ஜன்னல் வழியே நேராக வரும் வெயில் குழந்தையின் சருமத்தினை பாதிக்கக்கூடும்.எனவே, ஜன்னலை திரையிடுவது நல்லது.
15.பக்கெட் குளியல்
குழந்தைகள் பொதுவாக தண்ணீரில் உற்சாகமாக விளையாடுவார்கள். அவர்களின் ஆசையை நிறைவேற்ற கோடையே சரியான காலம்.சிறிய பக்கெட்டில் தண்ணீர் பிடித்து குழந்தைகளை சிறிது நேரம் விளையாட செய்யலாம். இது குழந்தைகளின் உடலை குளிர்விக்கும். குழந்தைகள் தண்ணீரில் விளையாடும்பொழுது நாம் அருகில் இருப்பது அவசியம்
கோடை காலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியவை
1.ஆறு மாதத்திற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுப்பதை தவிர்க்கவும்.
2.குழந்தைகளை குளிர்ந்த நீரில் குளிப்பாட்ட வேண்டாம்.
3.காரில் செல்லும் பொழுது குழந்தைகளை தனியாக விட்டு விட்டு எங்கும் செல்ல வேண்டாம்.
4.மின்விசிறி, சுவிட்ச் போன்ற மின்சாதன பொருட்களின் அருகில் குழந்தைகளை விட வேண்டாம்.
5.குழந்தைகளை குளித்த உடனே ஏ.சி அரைக்கு அழைத்து செல்ல வேண்டாம்.
6.ஏ.சி வெப்பநிலையை 240 செல்சியஸிற்கு கீழே வைக்க வேண்டாம். முக்கியமாக இரவில்.
7.நான் முன்னரே கூறியபடி தண்ணீர் குறைவாக இருந்தாலும் கூட குழந்தைகள் குளிக்கும் பொழுது தனியே விடக்கூடாது.
8.வெளியே செல்ல நேர்ந்தால் மறக்காமல் சன் ஸ்கிரீன் உபயோகிக்கவும்.
Leave a Reply