Tomato Soup for Babies in Tamil: குழந்தைகளுக்கு பிடித்தமான ஹெல்த்தியான டேஸ்டியான தக்காளி க்ரீம் சூப்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கு பொதுவாக சூப் என்றாலே பிடிக்காது.அவர்களை நாம் காய்கறி சூப் செய்து சாப்பிட வைப்பதற்குள் ஒரு வழி ஆகி விடுவோம். ஆனால் நோய் தொற்று பரவல் அதிகம் உள்ள இந்த கால கட்டத்தில் பெரும்பாலானோர் அருந்த சொல்வது சூப் தான்..
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதற்கு மருத்துவர்கள் கூட பரிந்துரைப்பது சூப் வகைகள் தான். ஆனால் நம் குழந்தைகள் சூப் என்ற வார்த்தையை கேட்டாலே அலறியடித்து ஓடுவது வழக்கம்.அதிலும் தக்காளி சூப் எப்படி சுவையாக இருக்கும் என்று தானே யோசிக்கிறீர்கள்?
ஆனால் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி ரெஸ்டாரன்ட் டைப்பில் இந்த தக்காளி சூப்பினை செய்து கொடுத்தால் மறுக்காமல் வாங்கி அருந்துவர்.இதற்கு தேவையான பொருட்கள் இரண்டே தான் தக்காளி மற்றும் பட்டர். சூப்பிற்கான செய்முறையை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
தக்காளியில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.மேலும் பல்வேறு விதமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது தக்காளி.குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் தடுக்கக்கூடியது.குழந்தைகளின் கண்களுக்கு நன்மை அளிப்பது.புற்றுநோய் வராமல் தடுக்கக் கூடிய ஆற்றலும் அதற்கு உண்டு.எனவேதான் தக்காளியை நாம் ஆறு மாதத்தில் இருந்தே குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
Tomato Soup for Babies in Tamil:
Tomato Soup for Babies in Tamil:
தேவையானவை
- தக்காளி மூன்று
- வெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
- மிளகுத்தூள் இம்மியளவு
- சீரகத்தூள் அரை டீஸ்பூன்
- மஞ்சள் தூள் இம்மியளவு
குழந்தைகளுக்கான தக்காளி க்ரீம் சூப்
செய்முறை
1.தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
2.ஒரு பாத்திரத்தில் தக்காளியுடன் தண்ணீர் சேர்த்து 5 முதல் 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
3.தக்காளியை ஆறவிடவும்.
4.தக்காளியின் தோல் மற்றும் விதைகளை நீக்கவும்.
5.மிக்ஸியில் தக்காளியை விழுதாக அரைக்கவும்.
6.அரைத்த தக்காளியை பாத்திரத்தில் ஊற்றி 2 முதல் 3 நிமிடங்களுக்கு வேகவிடவும்.
7.சீரகத்தூள்,மிளகுத்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்க்கவும்.
8.நன்றாக கலக்கவும்.
9.வெண்ணெய் சேர்த்து மூன்று நிமிடங்களுக்கு வேகவிடவும்.
10.குழந்தைகளுக்கான க்ரீமி டோமடோ சூப் ரெடி.
தக்காளி க்ரீமி சூப்பினை குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முதல் கொடுக்கலாம்.ஆனால் குழந்தைகளுக்கு ஒரு வயது வரை உணவில் உப்பு சேர்க்கக் கூடாது என்பதால் உப்பு கலக்காத பட்டரை நாம் உபயோகிக்க வேண்டும்.நீங்கள் ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது உப்பு சேர்த்து கொடுக்கலாம். ஆறு மாத குழந்தைகளுக்கு முதன்முதலில் கொடுக்கும் பொழுதுர சிறிய அளவு கொடுத்து ஏதேனும் அலர்ஜி ஏற்படுகிறதா என்று சரிபார்த்துக் கொள்ளவும்.
Tomato Soup for Babies in Tamil:
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
குழந்தைகளுக்கான தக்காளி க்ரீம் சூப்
Ingredients
- 3 தக்காளி ·
- 1 டே.ஸ்பூன் வெண்ணெய்
- இம்மியளவு மிளகுத்தூள்
- 1/2 டீ.ஸ்பூன் சீரகத்தூள்
- இம்மியளவு மஞ்சள்தூள்
Notes
- தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் தக்காளியுடன் தண்ணீர் சேர்த்து 5 முதல் 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
- தக்காளியை ஆறவிடவும்.
- தக்காளியின் தோல் மற்றும் விதைகளை நீக்கவும்.
- மிக்ஸியில் தக்காளியை விழுதாக அரைக்கவும்.
- அரைத்த தக்காளியை பாத்திரத்தில் ஊற்றி 2 முதல் 3 நிமிடங்களுக்கு வேகவிடவும்.
- சீரகத்தூள்,மிளகுத்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்க்கவும்.
- நன்றாக கலக்கவும்.
- வெண்ணெய் சேர்த்து மூன்று நிமிடங்களுக்கு வேகவிடவும்.
- குழந்தைகளுக்கான க்ரீமி டோமடோ சூப் ரெடி.
Leave a Reply