குழந்தைகளுக்கான காய்கறிகள் சூப்
Table of Contents
hide
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
காய்கறிகள் வேக வைத்த தண்ணீர்
Vegetable Stock
- வெங்காயம் – ஒன்று
- கேரட் – 2
- வெங்காயத் தழை – ஒரு கொத்து
- பூண்டு – 8 பல் நசுக்கியது
- இஞ்சி – சிறிது துருவியது
- உப்பு – சிறிது
- கறிவேப்பிலை – சிறிது
- எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை :
- காய்கறிகளை சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.
- பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு 5 நிமிடங்கள் காய்கறிகளை நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
- பின் அதில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரை மணி நேரம் வரை மிதமான தீயில் வேக விடவும்.
- இதன்பிறகு தண்ணீரை நன்றாக வடித்து விடவும். காய்கறிகளை நன்றாக அழுத்தி தண்ணீரை பிழிந்து எடுக்கவும்.
- இந்த தண்ணீரை நீங்கள் ஐஸ் ட்ரேயில் ஊற்றிவைத்து கட்டிகளான பிறகு காற்றுப்புகாத பையில் போட்டு வைத்து விடலாம். அதன்பிறகு நீங்கள் தயாரிக்கும் கஞ்சி, கூழ் ஆகியவற்றில் இந்த காய்கறி வேக வைத்த நீரை சேர்த்து கொள்ளவும்.
தெரிந்து கொள்ள வேண்டியது:
காய்கறிகள் வேகவைத்த நீரில் அதிகமான சத்துகள் இருப்பதால் குழந்தைகளுக்கு ஏற்றது இது.
அனைத்து உணவு வகைகளுடனும் இதனை சேர்த்து குழந்தைகளுக்கு தரலாம்.
இதனை உறையவைத்து தேவையான போது பயன்படுத்திக் கொள்ளலாம்…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply