what food to avoid when pregnancy:பெண் கர்ப்பம் தரித்து விட்டாலே வீட்டில் உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவில்லை.கர்ப்பிணி பெண்ணின் மேல் உள்ள கவனமும் பல மடங்கு அதிகரிக்கும்.அதுமட்டுமல்லாமல் இந்த காலகட்டத்தில் மனதிற்கு பிடித்தவற்றை சாப்பிட வேண்டுமென்று அனைவரும் சொல்வது வழக்கம்.அதே சமயம் எந்தெந்த உணவுகளை சாப்பிட கூடாது என்பதிலும் அதீத கவனம் தேவை.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
நம் மூலமாக இந்த உலகத்திற்கு வரும் குழந்தைகளை ஆரோக்கியமாக பெற்றெடுக்க வேண்டியது அவசியம்.கர்ப்பகாலத்தின் பொழுது பொதுவாக ஆரோக்யமான உணவுகளை உட்கொள்ள வேண்டுமென்பது அனைவரும் சொல்வதே.அதே சமயம் எந்தெந்த உணவுகளை உட்கொள்ள கூடாதென்பதை காண்போம்.
what food to avoid when pregnancy
பச்சை முட்டை
கர்ப்பகாலத்தின் பொழுது பச்சை முட்டை மற்றும் பாதி வேகவைத்த முட்டை உண்பதை தவிர்க்க வேண்டும்.முட்டையில் உள்ள சால்மோனெல்லா என்னும் பாக்டீரியா கர்ப்பிணி பெண்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றை ஏற்படுத்த கூடும்.அதற்கு பதிலாக நன்கு வேகவைத்த முட்டைகளை உண்ணலாம்.
மெர்க்குரி நிறைந்த மீன்கள்
கர்ப்பிணி பெண்கள் மெர்க்குரி நிறைந்த மீன்கள் உண்பதை தவிர்க்க வேண்டும்.சுறா, வாள் மீன், கானாங்கெளுத்தி, டைல் எனும் ஓடு மீன் போன்றவை அதிக அளவில் மெர்க்குரியை கொண்ட மீன்கள் ஆகும்.இவற்றை கட்டாயம் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும்.
மீன்களில் நிறைந்துள்ள மெத்தில் மெர்க்குரி குழந்தைகளின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்த கூடும்.மேலும் குழந்தையின் மூளை வளர்ச்சியையும் பாதிக்கக்கூடும்.மருத்துவரின் ஆலோசனைக்கு பின் மீன்வகைகளை உட்கொள்வது நல்லது.
இதையும் படிங்க : வயிற்று போக்கிற்கான எளிய வீட்டு வைத்தியம்
சரியாக சமைக்கப்படாத இறைச்சி
முழுமையாக சமைக்கப்படாத இறைச்சியில் டாக்சோபிளாஸ்மா பாரசைட் மற்றும் சால்மோனெல்லாபாக்டீரியா நிறைந்திருக்கும்.இது புட் பாய்சன் எனப்படும் ஒவ்வாமையை ஏற்படுத்த கூடும்.சில நேரங்களில் இவை கருக்கலைப்பு போன்ற பாதிப்பையும் ஏற்படுத்த கூடும்.இறைச்சி போன்றவற்றை உண்ணும்பொழுது நன்கு சமைத்து மற்றும் வேகவைத்து உண்பதே நல்லது.
வீட்டில் தயாரிக்கப்படாத பழச்சாறுகள்
கடைகளில் தயாரிக்கப்படும் பழச்சாறுகள் மற்றும் குளிர் பானங்கள் போன்றவற்றை பருகக்கூடாது.அவை சுகாதாரமற்ற தண்ணீரில் தயாரிக்கப்படலாம்.வீட்டில் சுத்தமான முறையில், தூய்மையான பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்பட்ட சாறுகளை அருந்துவது நல்லது.
காஃபைன்
குறிப்பாக முதல் மூன்று மாதங்களுக்கு அதிகப்படியான காஃபைன் கலந்த உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும்.இது கருக்கலைப்பு மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தகூடும்.
காஃபைன் டீ,காபி போன்றவற்றில் மட்டுமல்லாமல் சாக்லேட் மற்றும் சாப்ட் ட்ரிங்க்ஸ் போன்றவற்றிலும் கலந்துள்ளது.ஒரு நாளைக்கு இரண்டு கப் காபி அல்லது டீ மட்டும் எடுத்து கொள்வது போதுமானது.
முளைகட்டிய தானியங்கள்
சமைக்கப்படாமல் பச்சையாக முளைகட்டிய தானியங்களை கர்ப்ப காலத்தில் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.இதில் உள்ள லிஸ்தீரியா, சால்மோனெல்லா, இ-கோலை போன்ற பாக்டீரியாக்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கு நல்லதல்ல.தானியங்களை வேகவைத்து உட்கொள்ளவது மிகவும் சிறந்தது.
ஆல்கஹால்
கர்ப்ப காலத்தில் ஆல்கஹால் மற்றும் ஆல்கஹால் கலந்த பானங்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
பச்சையான பால்
கர்ப்ப காலத்தில் பச்சையான பால் மற்றும் பதப்படுத்தப்படாத பால் போன்றவற்றை பருகுவது நல்லதல்ல.சமைக்கப்படாத பச்சையான பாலை உட்கொண்டால், அதனால் தொற்று நோய்கள் ஏற்படும் பாதிப்பு உண்டு.
கழுவப்படாத பழங்கள் மற்றும் காய்கறிகள் கழுவப்படாத பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றில் டாக்ஸோபிளாஸ்மா பாரசைட் எனும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா உள்ளது; இது குழந்தையின் வளர்ச்சியை தடுத்து பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை நன்கு, தெளிவான நீரில் கழுவிய பின்னர் பயன்படுத்தவும்; தோலுரிந்த, வீங்கிய அல்லது வெட்டுக்கள் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
what food to avoid when pregnancy
துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ப்ரெசெர்வேட்டிவ்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் கலந்துள்ளதால் அவற்றை தவிர்ப்பது நல்லது.கர்ப்ப காலம் முழுவதும் வீட்டிலேயே சமைக்கப்பட்ட உணவுகளை உண்பதே ஆரோக்கியமானது.
அதிமதுரம்
கர்ப்ப காலத்தில் அதிமதுரம் அல்லது அதிமதுரம் சேர்த்த உணவுகளை தவிர்க்க வேண்டும்; இதன் ஒரு பகுதியான கிளைசிரின் கரு வளர்ச்சியை பல வழிகளில் பாதிக்கும் தன்மை கொண்டது ஆகும். குறிப்பிட்ட சில மூலிகைகளை உட்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு உட்கொள்வதே சிறந்தது.
பப்பாளி
பப்பாளி காய் அல்லது முழுவதும் பழுக்காத பப்பாளியை கர்ப்ப காலத்தில் உட்கொள்வது முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டியது. அப்படியென்றால் பப்பாளி பழத்தை கர்ப்ப காலத்தில் சாப்பிடலாமா என்ற ஒரு கேள்வி எழுகிறது. மிதமான அளவு எடுத்துக் கொள்ளும்போது பப்பாளி பழம் தாய் மார்களுக்கும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் எந்த ஒரு கெடுதலையும் செய்வதில்லை.
அன்னாசி பழம்
அன்னாசி பழம், வைட்டமின், புரதம், மினரல், போன்றவை அதிகம் உள்ள ஒரு பழம். ஆனால் கர்ப்பகாலத்தில் ஆரம்ப கட்டத்தில் இந்த பழத்தை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. இந்த பழத்தை அதிகம் உட்கொள்வதால் கர்ப்பப்பை வாய் தளர்ந்து விடும் வாய்ப்புகள் உண்டு.
இதையும் படிங்க : ஆரோக்கியமளிக்கும் உளுந்து ராகி கஞ்சி
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply