குழந்தைகளுக்கான சீரக தண்ணீர் நன்மைகள்: குழந்தைகளுக்கு கிரைப் வாட்டர் போன்றவை கொடுப்பதற்கு முன்பாகவே நம் முன்னோர்கள் செரிமானத்திற்காக பயன்படுத்தியது சீரகத் தண்ணீர் தான்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அதன் பின்னரே குழந்தைகளுக்கு கிரைப் வாட்டர் கொடுக்கும் பழக்கம் நம்மிடையே வந்தது. ஆனால் தற்பொழுது அவை எல்லாம் பயன்படுத்த வேண்டாம் என்று மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர்.
குழந்தைகளுக்கு இயற்கையிலேயே செரிமானத்திற்கான வரப்பிரசாதம் இருக்கும் பொழுது நாம் செயற்கையான வழியினை தேர்ந்தெடுப்பது அனாவசியம் தானே.
குழந்தைகளுக்கான சீரக தண்ணீர் நன்மைகள்
நம் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கவும், உணவு நன்கு செரிமானம் ஆவதற்கு, மேலும் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பழக்க வழக்கங்களில் ஒன்று தான் குழந்தைகளுக்கு சீரக தண்ணீர் கொடுப்பது.நமக்கு அதனை எவ்வாறு கொடுப்பது என்ற சந்தேகம் இருக்கலாம். வாருங்கள் அதனைப் பற்றி தெளிவாக காணலாம்.
இரவில் ஜீரா தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
- சீரகத்தில் இரும்புச்சத்து அதிக அளவில் இருப்பதால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வல்லது.
- சீரகத்தில் நார்ச்சத்துக்கள் அதிகளவு இருப்பதால் இரவில் சீரகத் தண்ணீரை குடிக்கும் போது உடலில் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கலாம்.
- சீரகமானது நம் சுவாசக்குழாயில் உள்ள சளியை வெளியேற்ற வல்லது.
- மேலும் இது ஞாபக சக்தியை அதிகரிக்க வல்லது.
- நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கக்கூடியது.
- சீரக தண்ணீரானது அமைதியான ஆழ்ந்த உறக்கத்திற்கு துணைபுரிகின்றது.எனவே இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான சீரகத் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நன்மை அளிக்கும்.
- சீரகத்தில் உள்ள வைட்டமின் ஈ சருமத்தினை பளிச்சிட செய்ய கூடியது.எனவே சீரகத்தண்ணீர் அடிக்கடி குடிப்பது தோலினை மினுமினுக்க செய்யும்.
- உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்க வல்லது.எனவே உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் சீரகத்தண்ணீரினை எடுத்து கொள்ளலாம்.
குழந்தைகளுக்கான சீரக தண்ணீர்
தேவையானவை
- சீரகம் -1 டீஸ்பூன்
- வெல்லத் தூள் -1 டீஸ்பூன் (தேவைப்பட்டால்)
- தண்ணீர் ஒரு கப்.
குழந்தைகளு க்கான சீரக தண்ணீர்
<p
>செய்முறை
1.ஒரு பவுலில் சீரகத்தையும் தண்ணீரையும் சேர்த்து கலக்கி ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
2.ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த சீரகத் தண்ணீரையும் மீதமுள்ள அரை கப் தண்ணீரையும் ஊற்றி நன்கு சூடாக்கவும்.
3.அடுப்பினை மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
4.வடிகட்டவும்.
5.ஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு தேவைப்பட்டால் வெல்லத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
6.குழந்தைகளுக்கு இதமாக பரிமாறவும்.
ஆறு மாதத்திற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு முதன்முதலில் கொடுக்கும்போது 2 முதல் 3 டீஸ்பூன் அளவிற்கு ஒரு வாரத்திற்கு இரண்டு தடவை கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு எட்டு மாதத்திற்குப் பிறகு சீரகத்தின் சுவை பழகிய பின்னர் அளவை கொஞ்சம் அதிகரித்து ஒரு வாரத்திற்கு மூன்று முறை வரை கொடுக்கலாம்.
ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு கால் கப் அளவிற்கு வாரத்திற்கு 3-4 முறை கொடுக்கலாம். சீரகமானது குழந்தைகளுக்கு உணவினை நன்கு ஜீரணமடைய செய்வதோடு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு பசியையும் தூண்டி உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கவல்லது.
சீரக தண்ணீர் குடிப்பதால் தீமைகள்
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே . இதுவரை சீரகத் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி நாம் பார்த்தோம் அதேசமயம் அதனை அதிகப்படியாக உட்கொண்டால் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் நாம் இப்பொழுது காணலாம்.
- சீரக தண்ணீர் அல்சர் இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று எப்பொழுதும் ஒட்டாது. எனவே ஏற்கனவே அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் சீரக தண்ணீரை அதிகமாக உட்கொண்டால் நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றெரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும்.
- சீரக தண்ணீரானது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது எனவே குறைந்த இரத்த அழுத்தம் உடையவர்கள் சீரகத் தண்ணீரை உட்கொள்ளும்போது மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் உட்கொள்வது நல்லது.
- சீரகமானது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கக்கூடியது எனவே சர்க்கரையின் அளவு உடலில் குறைவாக இருப்பவர்கள் இதனை உட்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
- கர்ப்பிணி பெண்கள் சீரகத்தை எடுத்துக்கொள்ளும்போது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எந்த மாதத்தில் இருந்து எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கவனமாக தெரிந்து கொண்டு அதனை எடுத்துக்கொள்வது சேர்ந்தது.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
1.வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடிக்கலாமா ?
தாராளமாக வெறும்வயிற்றில் சீரகத் தண்ணீரை குடிக்கலாம். வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீரை குடிப்பது உடலுக்கு பல வகையில் நன்மை அளிக்கக் கூடியது. எனினும் அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் சீரகத்தண்ணீர் அதனை உட்கொள்வது நல்லது.
2.தினமும் சீரகத் தண்ணீரைக் குடிக்கலாமா ?
சீரக தண்ணீரானது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கும் தன்மை கொண்டது. எனவே உடல் பருமனை குறைக்க விரும்புவர்கள் மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க விரும்புவர்கள் தினமும் சீரகத் தண்ணீரை உட்கொள்ளலாம்.
3.சீரகத்தண்ணீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா?
சீரகத்தில் உள்ள இரும்பு சத்தானது உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வல்லது. மேலும் இது உடலில் சளி இருமல் போன்றவை இருந்தாலும் நல்ல நிவாரணம் அளிக்கக்கூடியது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க வல்லது.
4.சீரகத்தண்ணீர் சருமத்திற்கு அழகினை அளிக்குமா?
சீரகத்தில் வைட்டமின் ஈ அதிக அளவில் இருப்பதால் சீரக தண்ணீரானது தோலினை மிளிர செய்து சருமத்திற்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடியத. இதுவே கேரள பெண்களின் அழகிற்கு முக்கிய காரணமாகும்.
5.இரவு வேளைகளில் சீரகத் தண்ணீர் குடிக்கலாமா ?
சீரக தண்ணீரானது அமைதியான ஆழ்ந்த உறக்கத்திற்கு துணைபுரிகின்றது.எனவே இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான சீரகத் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நன்மை அளிக்கும்.
குழந்தைகளுக்கான சீரக தண்ணீர்
Ingredients
- 1 டீ.ஸ்பூன் சீரகம்
- 1 டீ.ஸ்பூன்(தேவைப்பட்டால்) வெல்லத் தூள்
- 1 கப் தண்ணீர்
Leave a Reply