ஜவ்வரிசி கஞ்சி செய்வது எப்படி: குழந்தைகளின் தசை மற்றும் எலும்புகளின் வளர்ச்சியினை சீராக்கும் இயற்கையான இனிப்பு சுவை நிறைந்த கஞ்சி.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு உணவில் நாம் சர்க்கரை எனப்படும் சீனியினை அறவே சேர்க்கக்கூடாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.அப்படியென்றால் நாட்டுச்சர்க்கரை,பனங்கற்கண்டு,தேன்,கருப்பட்டி போன்றவை சேர்க்கலாமா என்ற கேள்வி உங்களுள் எழலாம்.
உண்மை என்னவென்றால் இயற்கையான இனிப்பு சுவையினை தவிர வேறு எதுவும் குழந்தைகளுக்கு சேர்க்கக்கூடாது என்பதே உண்மை.அப்படி என்றால் இனிப்பினை விரும்பி உண்ணும் குழந்தைகளுக்கு வேறு என்ன உணவு தரலாம் என்று யோசிக்கிறீர்களா? அதற்கேற்ற ரெசிபி தான் இது.
ஆம்! இயற்கையாகவே பேரிச்சம்பழத்தில் இருக்கும் இனிப்புச் சுவை நிறைந்தது தான் இந்த ஜவ்வரிசி கஞ்சி.இதனை குழந்தைகளுக்கு முதல் உணவு கொடுக்க ஆரம்பித்த பின் இரண்டாம் கட்ட உணவாக 8 மாதத்திற்கு மேல் கொடுக்கலாம்.
ஜவ்வரிசி கஞ்சி பயன்கள்:
1.ஜவ்வரிசி வயிற்று புண் எனப்படும் அல்சரை குணமாக்க வல்லது.
2.ஜவ்வரிசியில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் சத்துகள் அதிகமுள்ளது.
3.குழந்தைகள் விளையாட தேவையான எனெர்ஜியை அளிக்க வல்லது.
4.ரத்தசோகை குணமாக்க வல்லது.
5.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
6.ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு தேய்மானம் நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

ஜவ்வரிசி கஞ்சி செய்வது எப்படி?
- ஜவ்வரிசி- 2 டேபிள்ஸ்பூன்
- பேரிச்சை- 2 அல்லது 3
- ஏலக்காய்த்தூள் -இம்மியளவு

ஜவ்வரிசி கஞ்சி செய்வது எப்படி?
செய்முறை
1.ஜவ்வரிசியை நன்கு கழுவி தண்ணீரில் 5 மணி நேரங்களுக்கு ஊற வைக்கவும்.

2.மற்றொரு பவுலில் பேரிச்சபழத்தினை கொட்டைகளை நீக்கி தண்ணீரில் ஊற வைக்கவும்.

3.பேரிச்சம்பழம் ஊறியவுடன் மிக்சி ஜாரில் ஊறவைத்த தண்ணீரோடு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைக்கவும்.


4.பானில் அரைத்த பேரிச்சம் பேஸ்ட்,ஊறவைத்த ஜவ்வரிசி சேர்த்து அரை டம்ளர் தண்ணீரையும் சேர்க்கவும்.


5. 7 முதல் 10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் ஜவ்வரிசி நன்றாக வேகும் வரை சூடாக்கவும்.

6.ஜவ்வரிசி பானில் அடி பிடிக்காத அளவிற்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.
7.அடுப்பினை அணைத்தபின் ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.குழந்தைகளுக்கு இதமாக பரிமாறவும்.

ஜவ்வரிசியை நாம் வழக்கமாக பாயாசத்தில் சேர்ப்பது தான் வழக்கம். ஆனால் இது குழந்தைகளின் எலும்பு மற்றும் தசை வளர்ச்சிக்கும் நல்லது என்பதால் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை இந்த ஜவ்வரிசி பேரிச்சம்பழம் கஞ்சியை செய்து கொடுப்பது உடல்நலத்திற்கு நன்மை அளிக்கும்.

உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
ஜவ்வரிசி பேரிச்சம்பழம் கஞ்சி
Ingredients
- 2 ஜவ்வரிசி
- 2 அல்லது 3 பேரிச்சை
- இம்மியளவு ஏலக்காய்த்தூள்
Notes
- ஜவ்வரிசியை நன்கு கழுவி தண்ணீரில் 5 மணி நேரங்களுக்கு ஊற வைக்கவும்.
- மற்றொரு பவுலில் பேரிச்சபழத்தினை கொட்டைகளை நீக்கி தண்ணீரில் ஊற வைக்கவும்.
- பேரிச்சம்பழம் ஊறியவுடன் மிக்சி ஜாரில் ஊறவைத்த தண்ணீரோடு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைக்கவும்.
- பானில் அரைத்த பேரிச்சம் பேஸ்ட்,ஊறவைத்த ஜவ்வரிசி சேர்த்து அரை டம்ளர் தண்ணீரையும் சேர்க்கவும்.
- 7 முதல் 10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் ஜவ்வரிசி நன்றாக வேகும் வரை சூடாக்கவும்.
- ஜவ்வரிசி பானில் அடி பிடிக்காத அளவிற்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.
- அடுப்பினை அணைத்தபின் ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.
- குழந்தைகளுக்கு இதமாக பரிமாறவும்.
Leave a Reply