லட்டு செய்வது எப்படி: குழந்தைகளுக்கு இனிப்பு என்றால் அலாதி பிரியம்தான் அதிலும் லட்டு என்றால் சொல்லவா வேண்டும் ஆனால் கடைகளில் அடிக்கடி இனிப்பு வாங்கி தருவது என்பது அம்மாக்களுக்கு பிடிக்காத ஒன்று.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அப்படியானால் இனிப்பை விரும்பி சாப்பிடும் குழந்தைகளுக்கு வேறு என்ன செய்து தருவது என்று யோசிக்கும் அம்மாக்களா நீங்கள் ? உங்களுக்கான அருமையான சாய்ஸ்தான் இந்த இன்ஸ்டன்ட் லட்டு மிக்ஸஸ்.
இதுவரை நாம் ரவா லட்டு செய்வது எப்படி,ஜவ்வரிசி லட்டு செய்வது எப்படி, திருப்பதி லட்டு செய்வது எப்படி, பூந்தி லட்டு செய்வது எப்படி என நாம் பல வீடியோக்களை பார்த்திருப்போம்.ஆனால் இன்று நாம் பார்க்கவிருக்கும் லட்டு சற்றே வித்தியாசமானது.
ஆம் உளுந்து லட்டு, சோயா கோதுமை லட்டு மற்றும் டேட்ஸ் எனர்ஜி லட்டு என்று உங்கள் குழந்தைளின் உடல் நலத்திற்கு ஆரோக்கியமளிக்கும் அசத்தலான மூன்று பிளேவர்களில் இந்த இன்ஸ்டன்ட் லட்டு மிக்ஸ்கள் கிடைக்கின்றன.
லட்டுகளில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து மூலபொருட்களும் குழந்தைகளின் உடலுக்கு நன்மை பயப்பன. உளுந்து குழந்தைகளின் ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு உதவுகின்றது.
மேலும் உளுந்து,சோயா மற்றும் கோதுமை மாவு இவை மூன்றுமே குழந்தைகளுக்கு தேவையான புரோட்டீனை அள்ளித்தருவன. மேலும் இதில் முந்திரி பாதாம் மற்றும் பிஸ்தா ஆகிய நட்ஸ்களும் சேர்ந்துள்ளதால் குழந்தைகளின் ஆரோக்கியமான மூளைவளர்ச்சிக்கு உதவுகின்றது.
மேலும் இதில் இயற்கை இனிப்பு சுவையூட்டியான ஆர்கானிக் வெல்லத்தூள் மட்டுமே சேர்த்துள்ளதால் குழந்தைகளின் உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்காது.
மேலும் இதில் எவ்விதமான கெமிக்கல்ஸ் மற்றும் பிரசெர்வேட்டிவ்ஸ் சேர்க்கப்படாததே இதன் சிறப்பம்சம்.இதை தயார் செய்வதற்கு ஐந்து நிமிடங்களுக்கும் குறைவான நேரமே தேவைப்படுமென்பதே நமக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒன்று .இதன் செய்முறையினை இப்பொழுது நாம் காணலாம்.
சோயா கோதுமை லட்டு மற்றும் உளுந்து லட்டில் கலந்துள்ளவை
- லட்டு மிக்ஸ் ( சோயா கோதுமை லட்டு மிக்ஸ் மற்றும் உளுந்து லட்டு மிக்ஸ் )- 100 கிராம்
- வெல்லம் -75 கிராம்
- நெய் -கால் கப்
லட்டு செய்முறை
- லட்டு மிக்ஸ் மற்றும் வெல்லத்தூளினை ஒன்றாக கலக்கவும்.
2.பானில் நெய் ஊற்றி சூடாக்கவும்.
3.உருக்கிய நெய்யினை லட்டு மிக்சினில் ஊற்றி நன்றாக பிசையவும்.
4.லட்டு போன்று உருண்டையாக அல்லது தேவையான வடிவத்திற்கு பிடித்து கொள்ளவும்.
டேட்ஸ் எனெர்ஜி பாலினை தயார் செய்வது எப்படி?
பொதுவாகவே டேட்ஸில் உடல் நலத்திற்கு நன்மை அளிக்கும் இரும்பு சத்து, புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் ஆகியவை அடங்கியுள்ளன என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே.
ஆனால் அதனை அப்படியே சாப்பிட கொடுக்கும்பொழுது குழந்தைகள் சாப்பிட மறுப்பர் . ஆனால் இப்படி டேட்ஸ் மற்றும் நட்ஸ் ஆகியவை கலந்து குழந்தைகளுக்கு பிடித்தவாறு செய்து கொடுக்கும்போது குழந்தைகள் கண்டிப்பாக சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள்.
மேலும் இதில் செயற்கை இனிப்பூட்டிகள், உப்பு மற்றும் ப்ரெசெர்வேட்டிவ்ஸ் போன்றவை சேர்க்கப்படாததால் குழந்தைகளுக்கு தைரியமாக நாம் கொடுக்கலாம்.ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்றது.
கலந்துள்ளவை
- இன்ஸ்டன்ட் டேட்ஸ் எனெர்ஜி பால் மிக்ஸ் – 100 கிராம்
- நெய் – கால் கப்
இந்த சுவையான லட்டு மிக்ஸுகளை உங்களுக்கும் வாங்க விருப்பமா ? கீழ்கண்ட பட்டனை கிளிக் செய்யவும். Buy Now
டேட்ஸ் எனெர்ஜி பால் செய்முறை
1.கடாயில் நெய்யினை ஊற்றி சூடாக்கவும்.
2.உருக்கிய நெய்யினை இன்ஸ்டன்ட் மிக்சினில் ஊற்றி நன்றாக கலக்கவும்
3.தேவையான வடிவத்திற்கு உருண்டை பிடிக்கவும்.
இந்த லட்டு மிக்சினை சிறியவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் சுவைக்கலாம் மேலும் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஹெல்தியான ஸ்னாக்சினை நாம் நிமிடத்தில் செய்துவிடலாம்.
ஒரு வயதுக்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு இந்த லட்டு மிக்ஸ் வகைகள் ஏற்றது. நீங்களும் வீட்டில் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுக்கு கமெண்டில் பதிவுசெய்யவும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
லட்டுவினை எத்தனை வயது குழந்தைகளுக்கு கொடுக்கலாம்?
ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இந்த லட்டு மிக்சினை கொடுக்கலாம்.
லட்டு மிக்சினை எத்தனை நாட்களுக்கு பயன்படுத்தலாம் ?
நீங்கள் ஆர்டர் செய்ததும் பிரெஷ்ஷாக தயாரித்து அனுப்புவதால் இதனை இரண்டு மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.
இதில் ப்ரெசெர்வேட்டிவ்ஸ் சேர்க்கப்பட்டுள்ளதா?
ப்ரெசெர்வேட்டிவ்ஸ்,கெமிக்கல்ஸ்,செயற்கை நிறமூட்டிகள்,இனிப்பு மற்றும் உப்பு ஆகியவை சேர்ப்படாததே இதன் சிறப்பம்சம்.
இன்ஸ்டன்ட் உளுந்து லட்டில் என்னென்ன பொருட்கள் கலந்துள்ளன?
இதில் உளுந்து,முந்திரி,பாதம்,பிஸ்தா மற்றும் ஏலக்காய் கலந்துள்ளன.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
குழந்தைகளுக்கான சுவையான, ஆரோக்கியமான இன்ஸ்டன்ட் லட்டு மிக்ஸஸ்
Notes
- லட்டு மிக்ஸ் ( சோயா கோதுமை லட்டு மிக்ஸ் மற்றும் உளுந்து லட்டு மிக்ஸ் )- 100 கிராம்
- வெல்லம் -75 கிராம்
- நெய் -கால் கப்
- லட்டு மிக்ஸ் மற்றும் வெல்லத்தூளினை ஒன்றாக கலக்கவும்.
- பானில் நெய் ஊற்றி சூடாக்கவும்.
- உருக்கிய நெய்யினை லட்டு மிக்சினில் ஊற்றி நன்றாக பிசையவும்.
- லட்டு போன்று உருண்டையாக அல்லது தேவையான வடிவத்திற்கு பிடித்து கொள்ளவும்.
- இன்ஸ்டன்ட் டேட்ஸ் எனெர்ஜி பால் மிக்ஸ் – 100 கிராம்
- நெய் – கால் கப்
Leave a Reply