6 month old learning activities: குழந்தைகளுக்கு ஆறாவது மாதம் என்பது அவர்களின் வளர்ச்சியில் முக்கியமான காலகட்டமாகும். ஏனென்றால் இந்த கால கட்டத்தில் தான் குழந்தைகளின் மூளைத்திறனானது நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அப்பொழுது அவர்களின் மூளைத்திறனின் சீரான வளர்ச்சிக்கு நாமும் துணைபுரிய வேண்டும். அதாவது அவர்களின் மூளையினையும், உடல்நிலையும் சுறுசுறுப்பாக வைத்திருக்க அவர்களுக்கு நாம் உதவ வேண்டும்.
அது எப்படி என்று தானே யோசிக்கிறீர்கள்? வேறு ஒன்றுமில்லை குழந்தைகளுடன் நாம் விளையாடும் சிறு சிறு விளையாட்டுகள் மற்றும் சிறு சிறு செயல்களின் மூலம் அவர்களை நாம் சுறுசுறுப்பாகவும், அதிக செயல்பாடுடனும் வைத்திருக்க முடியும்.
இவை நம் வீட்டில் குழந்தைகளுடன் அடிக்கடி விளையாடும் விளையாட்டுகள் தான் என்றாலும் இவையெல்லாம் குழந்தைகளுக்கு இவ்வளவு நன்மை அளிக்குமா என்பது நமக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்.
மேலும் இவற்றையெல்லாம் இதுவரைக்கும் அலட்சியம் செய்திருக்கும் பெற்றோர்களுக்கும் இந்த பதிவானது உபயோகமாக இருக்கும்.
கதை சொல்லுதல்
நாம் வீட்டில் காலம் காலமாக பின்பற்றி வரும் முறைதான் குழந்தைகளுக்கு கதை சொல்வது ஆனால் ஆறு மாத காலத்தில் இருந்தே நாம் இதை கடைபிடிப்போமா என்று தெரியாது.
பொதுவாக குழந்தைகளுக்கு தூங்கும் நேரத்தில் விதவிதமான கதை சொல்லி தூங்க வைப்பது வழக்கம் .
ஆனால் குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முதலே வண்ணமயமான புத்தகத்தினை காண்பித்து அதன் மூலம் கதையை சொல்ல ஆரம்பிக்கலாம்.
பயன்கள்:கதை சொல்வதன் மூலம் குழந்தைகளின் பார்க்கும் திறன் மற்றும் கேட்கும் திறன் மேம்படும்.
குதித்து விளையாடுதல்
குழந்தைகளின் உடல்லினை நாம் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மெத்தை போன்ற மென்மையான இடத்தில குதிக்க வைக்கலாம். இவ்வாறு செய்வது கால்களுக்கு நல்ல உடற்பயிற்சியாக இருக்கும்.
பயன்கள்: இது இந்த உடற்பயிற்சியானது குழந்தைகளின் காலில் உள்ள தசைகளின் சீரான வளர்ச்சிக்கு உதவுகின்றது.
புதிர்
புதிர் என்ற உடனே பயப்பட வேண்டாம். குழந்தைகள் எளிதில் கண்டுபிடிக்குமாறு மரத்தாலான சிறுசிறு புதிர்கள், வளையங்களை ஒன்று கோர்த்தல், வண்ணங்களை ஒன்று சேர்த்தல் போன்றவற்றினை விளையாட கொடுக்கலாம்.
பயன்கள்: இது குழந்தைகளின் ப்ராப்ளம் சால்விங் எனப்படும் கேள்விக்கான பதிலை கண்டறியும் செயல் திறனை அதிகரிப்பதோடு உற்றுநோக்கும் திறனையும் வளர்கின்றது.
கண்ணாமூச்சி
பொதுவாக நம் வீடுகளில் குழந்தைகளுடன் விளையாடும் விளையாட்டு தான் இது. ஒரு துணியினை நம் முகத்தில் வைத்துக்கொண்டு குழந்தைகளிடம் எடுத்து எடுத்து விளையாடுவது உண்டு.
இந்த விளையாட்டு உண்மையில் குழந்தைகளின் மனதில் பிம்பம் பற்றிய அறிவினை ஏற்படுத்தும்.
பயன்கள்: குழந்தைகளின் தேடல் திறனை வளர்க்கும்.
கை தட்டுதல்
இதுவும் நம் வீடுகளில் விளையாடும் சாதாரமான விளையாட்டுக்களில் ஒன்றுதான். குழந்தைகளின் முன் கைகளை
தட்டி விளையாடும் போது அவர்களுக்கு ஏற்படும் சந்தோஷத்துக்கு அளவே இருக்காது. இது குழந்தைகளின் மனதிற்கு குதூகலத்தை அளிக்கும் விளையாட்டு.
பயன்கள்:குழந்தைகளின் ஒருமுகப்படுத்தும் திறனை அதிகரிக்கும். மேலும் குழந்தைகளின் மனதுக்கு உற்சாகத்தையும்,தன்னம்பிக்கையும் ஏற்படுத்தும்.
6 month old learning activities
ஓட்டப்பந்தயம்
குழந்தைகள் 6 மாத காலத்தில் நடக்க மாட்டார்கள்.எனவே ஓட்டப்பந்தயம் என்பது அவர்களை வீடு முழுவதும் தவள வைப்பதாகும்.
குழந்தைகளுக்கு பிடித்தமான விளையாட்டுப் பொருட்களை ஒளித்து வைப்பதன் மூலம் குழந்தைகள் அதனை ஆர்வத்துடன் எடுக்க வருவார்கள். எனவே அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் விளையாட்டு இது.
பயன்கள் : குழந்தைகளுக்கு இதில் நல்ல உடற்பயிற்சி ஆகும்.சுறுப்பாக வைத்திருக்க உதவும்.
தண்ணீர் விளையாட்டு
ஒரு சிறிய பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி குழந்தைகளை அதில் உட்கார வைத்து தண்ணீரை எடுத்து விளையாட செய்யலாம்.
ஆனால் இந்த விளையாட்டை விளையாடும் போதும் குழந்தைகளின்அருகில் நாம் இருக்க வேண்டும். இது குழந்தைகளுக்கு மிகவும் குதூகலமளிக்கும் விளையாட்டு.
பயன்கள்: குழந்தைகளின் மனதில் ஒருவித சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி அவர்களை சுறுசுறுப்பாக வைக்கும்.
கிளுகிளுப்பை
குழந்தைகளுக்கு விளையாட கொடுக்கும் பரம்பரை விளையாட்டுப் பொருட்களில் கிளுகிளுப்பையும் ஒன்று.
தற்பொழுது விதவிதமாக இவை கிடைக்கின்றன. குழந்தைகளுக்கு அவ்வப்போது இதனை விளையாட கொடுக்கலாம்.
பயன்கள் :குழந்தைகளுக்கு கேட்கும் திறனையும் மனதை ஒருமுகப்படுத்தும் திறனையும் அதிகரிக்கும்.
சைக்கிள் ஓட்டுதல்
குழந்தைகளை படுக்க வைத்து அவர்களின் கால்களை சைக்கிள் ஓட்டுவது போன்று முன்னும் பின்னுமாக அசைக்க செய்யவேண்டும்.
இவ்வாறு செய்வது குழந்தைகளின் கால்களுக்கு நல்ல உடற்பயிற்சியாக அமையும்.
பயன்கள்: இது குழந்தைகளின் வயிற்றில் வாயுகோளாறு இருந்தாலும் வெளியேற்ற உதவும்.
மசாஜ்
எண்ணெய் கொண்டு குழந்தைகளின் உடல் முழுவதும் மசாஜ் செய்வது அவர்களின் உடல் உறுப்புகள் சீராக வளர்வதற்கு உதவும். மேலும் குழந்தைகள் நன்றாகவும் தூங்குவர்.
பயன்கள் : குழந்தைகளின் உடல் உறுப்புகள் சீராக வளர்வதற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு திறனையும் அதிகரிக்கும்.
ரைம்ஸ் டைம்
குழந்தைகளிடம் அவ்வப்பொழுது நாம் பாடல்களை பாடிக் காட்டுவது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்.நம் முன்னோர்கள் தாலாட்டு எனும் பெயரில் இதை செய்வர்.
பயன்கள்: குழந்தைகளுக்கு இசையை பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்தும்.மனதிற்கு அமைதி அளிக்கும்.
மத்தளம் கொட்டுதல்
குழந்தைகளுக்கு நம் சமையலறையில் இருக்கும் சிறு கிண்ணங்கள் மற்றும் கரண்டி ஆகியவற்றை கொடுத்து மேளம் கொட்ட செய்யலாம்.
இது குழந்தைகளுக்கு உற்சாகமளிக்கும் விளையாட்டு.
பயன்கள்: குழந்தைகளின் கைகளையும்,கண்களையும் ஒருமுகப்படுத்தும் விளையாட்டு இது.
நம் வீடுகளில் பெரும்பாலானோர் குழந்தைகளுக்கு உணவினை சாப்பிட கொடுப்பதற்கு விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் குழந்தைகள் வீடு முழுவதையும் அழுக்காக்கி விடுவார்கள் என்று எண்ணுவோம்.
ஆனால் உண்மையில் உணவினை அவர்களாகவே உண்ண செய்வது குழந்தைகளின் சுவைக்கும் திறன்,நுகரும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும்.
பயன்கள்: குழந்தைகளுக்கு உணவினை பற்றிய புரிதலையும்,சுவை பற்றிய புரிதலையும் ஏற்படுத்தும்.
விளக்கு (லைட் )
குழந்தைகள் வெளிச்சம் என்றாலே ஆச்சரியத்துடன் பார்ப்பார். டார்ச் அல்லது எல்.ஈடி மூலம் சுவற்றில் ஒளியை ஏற்படுத்தி அவற்றை குழந்தைகளின் கண்களை பின்தொடருமாறு செய்யலாம்.
பயன்கள்: குழந்தைகளின் ஒருமுகப்படுத்தும் திறனை அதிகரிக்க உதவும்.
பபுள்ஸ் விளையாட்டு
பபுள்ஸ் எனப்படும் முட்டை விடும் விளையாட்டானது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த விளையாட்டுகளில் ஒன்று.சோப்பு நுரையினில் முட்டை இடும் பொழுது அதை பிடிக்க குழந்தைகள் பின்னாலே வருவது பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.
இந்த விளையாட்டு குழந்தைகளுக்கு நல்ல உடற்பயிற்சியாக அமையும்.
பயன்கள்: குழந்தைகளுக்கு ஒருமுகப்படுத்தும் திறனை அதிகரிப்பதோடு குழந்தைகளை சுறுசுறுப்பாக வைக்க உதவும்.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு வித்திடும் முக்கியமான இந்த ஆறாவது மாத காலகட்டத்தில் குழந்தைகளுக்கு சிறு சிறு பயிற்சியின் மூலம் அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைவது பெற்றோராகிய நமது கடமையாகும்.
மேலும் இது குழந்தைகளுக்கு பெற்றோர்கள் நம் அருகிலேயே இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தும். நம் வீடுகளில் பொதுவாக விளையாடும் விளையாட்டுகளின் பயன்களையும் அறிந்தோம்.
உங்கள் குழந்தைகளுடன் முன்பைவிட முனைப்புடன் விளையாட இந்த தகவல்கள் உறுதுணையாக அமையும் என்று நாங்கள் நம்புகின்றோம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply