6 months Baby food in Tamil: நம் வீடுகளில் பொதுவாக பச்சைப்பயிரினை மாலை நேர சிற்றுண்டியாக அவித்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் அதை கொண்டு குழந்தைகளுக்கு கஞ்சியாக செய்து கொடுக்க முடியும் என்பது ஆச்சரியமாக உள்ளதல்லவா? அதுவும் இன்ஸ்டன்ட் கஞ்சி.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
நம் குழந்தைகளுடன் வெளியில் செல்லும்போது அவர்களுக்கு என்ன உணவு வாங்கி கொடுப்பது என்று குழப்பமாக இருக்கும். மேலும் வாங்கி கொடுக்கும் உணவானது குழந்தைகளின் உடல் நலத்திற்கு ஒத்துக் கொள்ளுமா என்ற கவலையும் நம்மில் இருக்கும்.
ஆனால் இந்த இன்ஸ்டன்ட் கஞ்சி பவுடர் உங்களுடன் இருந்தால் நீங்கள் குழந்தைகளுடன் எந்த இடத்திற்கும் தைரியமாக வெளியே செல்லலாம். இதனை வைத்து கஞ்சி செய்வதற்கு பிளாஸ்கில் சுடுதண்ணீர் எடுத்துச் சென்றால் போதுமானது குழந்தைகளுக்கான உணவினை ஒரே நிமிடத்தில் தயார் செய்துவிடலாம்.
பச்சைபயிரில் வைட்டமின் ஏ, பி, ஈ போன்றவை நிறைந்துள்ளது. மேலும் கால்சியம் ,மெக்னீசியம் மற்றும் இரும்புச் சத்தும் அதிகளவில் உள்ளது. மேலும் பச்சை பயிரில் நார்ச்சத்துக்களும் அதிகளவில் உள்ளதால் குழந்தைகளுக்கு உணவினை எளிதில் செரிமானம் அடையச் செய்யும்.
இதையும் படிங்க :குழந்தைகளுக்கான பூசணி ஓட்ஸ் மசியல்
பச்சைப்பயறு கோதுமை கஞ்சி
6 months Baby food in Tamil
• கோதுமை 3 டே.ஸ்பூன்
• பச்சை பயறு 2 டே.ஸ்பூன்
இதையும் படிங்க: குழந்தைகளுக்கான பேரிக்காய் கூழ்
செய்முறை
1. பாத்திரத்தை சூடாக்கவும்.
2. எண்ணெய் சேர்க்காமல் கோதுமையை வறுக்கவும்.
3. பச்சை பயறை வறுக்கவும்.
4. கோதுமையை நன்றாக மிக்சியில் அரைக்கவும்.
5. வேறொரு பவுலிற்கு மாற்றவும்.
6. பச்சைப் பயிறினை அரைக்கவும்.
7. பவுலில் போட்டு நன்றாக கலக்கவும்.
8. மாவினை சலித்து எடுக்கவும்.
9. காற்று புகாத டப்பாவில் அடைத்து ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
பச்சைப்பயறு கோதுமை கஞ்சி செய்வது எப்படி ?
• ஒரு பவுலில் 2 டே.ஸ்பூன் கஞ்சி பவுடரை சேர்க்கவும்.
• கொதிக்க வைத்த சூடான தண்ணீரை ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்றாக கரைக்கவும்.
• பயணங்களின் போது கொண்டு செல்வதற்கு ஏற்ற இன்ஸ்டன்ட் கஞ்சி ரெடி.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply