Kerala Banana Ghee Fry in Tamil: குழந்தைகளின் உடல் எடையினை ஆரோக்கியமாக அதிகரிக்கும் சிறப்பம்சம் வாய்ந்தது கேரளா நேந்திரம்பழம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பை எடுத்து கொண்டாலே குழந்தைகளின் உடல் எடை அதில் முக்கிய அங்கம் வகிக்கும்.தன் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக இருந்தாலும் கொழு கொழுவென இருந்தால் நன்றாக இருக்குமே என நினைக்காத தாய்மார்கள் இல்லை.குழந்தைகள் உடல் எடையினை இயற்கையான முறையில் நாம் உண்ணும் உணவின் வாயிலாக அதிகரிப்பதே சிறந்தது.குழந்தைகளின் உடல் எடையினை ஆரோக்கியமாக அதிகரிக்கும் 20 உணவு பொருட்களை நாம் ஏற்கனவே பார்த்து விட்டோம்.அதில் கேரளா நேந்திரம்பழத்திற்கு தனியிடம் உண்டு.கேரளா நேந்திரம்பழத்தை வைத்து செய்யக்கூடிய எளிமையான ரெசிபிதான் நேந்திரம்பழ நெய் வறுவல்.இந்த நேந்திரம்பழ வறுவலை 8 மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பிங்கர் புட்ஸாக கொடுக்கலாம்.பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாகவும் கொடுக்கலாம்.
Kerala Banana Ghee Fry in Tamil:
- தோல் நீக்கிய நேந்திரம்பழம்- 1
- நெய்- 1 டே.ஸ்பூன்
- ஏலக்காய்த்தூள்-இம்மியளவு
இதையும் படிங்க:மொறு மொறு முட்டை ரெசிபி
குழந்தைகளின் உடல் எடையினை ஆரோக்கியமாக அதிகரிக்கும் கேரளா நேந்திரம் பழ பொடி.ஆர்டர் செய்தால் போதும் பிரெஷாக தயாரித்து உங்கள் வீட்டிற்கே தருகின்றோம்.
நேந்திரம் பழம் நெய் வறுவல்
செய்முறை
1.வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.
2.பானை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்றவும்.
3.வாழைப்பழ துண்டுகளை அதில் போடவும்.
4.ஒரு புறம் பொன்னிறமானதும் துண்டுகளை புரட்டி பாடவும்.
5.இரு புறமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
6.ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.
7.நேந்திரம் பழம் நெய் வறுவல் ரெடி.
ஆறு மற்றும் ஏழு மாத குழந்தைக்கு நேந்திரம் பழத்தை மசித்து கொடுக்கலாம்.கேரளா நேந்திரம் பழத்தை பொடியாகவும் செய்து வைத்து கொள்ளலாம்.நாம் விருப்பப்படும் பொழுது அதனை கஞ்சியாக சமைத்து குழந்தைகளுக்கு கொடுக்க ஆரோக்கியம் மேம்படும்.
இதையும் படிங்க: சளி இருமலை போக்கும் மிட்டாய்
குழந்தைகளின் உடல் எடையினை ஆரோக்கியமாக அதிகரிக்கும் கேரளா நேந்திரம் பழ பொடி.ஆர்டர் செய்தால் போதும் பிரெஷாக தயாரித்து உங்கள் வீட்டிற்கே தருகின்றோம்.
Leave a Reply