Bread Halwa Recipe in Tamil: குழந்தைகளுக்கு வழக்கமாக செய்து கொடுக்கும் ஸ்னாக்சினை விட வித்யாசமாக செய்து கொடுத்தால் குஷியாகி விரும்பி உண்பார்கள் .அதே சமயம் அந்த ஸ்னாக்ஸ் செய்வதற்கு எளிதாக இருக்க வேண்டுமல்லவா அதற்கேற்ற ரெசிபிதான் இந்த பிரெட் அல்வா. நம் வீட்டில் வழக்கமாக இருக்கும் பிரெட் துண்டுகள் மற்றும் பால் மட்டும் போதுமானது.ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு இந்த ஸ்னாக்ஸ் ரெசிபியினை கொடுக்கலாம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
பிரெட் அல்வா
Bread Halwa Recipe in Tamil:
- கோதுமை பிரெட்- 4
- பால் – 1 கப்
- நாட்டு சர்க்கரை -1/2 கப்
- நெய்- 4 டே ஸ்பூன்
- ஏலக்காய்த்தூள்-1/4 டீ .ஸ்பூன்
- முந்திரி பருப்பு-5
- உலர்திராட்சை-5
இதையும் படிங்க: குழந்தைகளுக்கான ஆரோக்கியமான அல்வா ரெசிபிகள்.
Bread Halwa Recipe in Tamil:
செய்முறை
1.தேவையான பொருட்களை தயாராக வைத்து கொள்ளவும். பிரெட்டினை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.
2.கனமான பாத்திரத்தை சூடாக்கி 2 டே.ஸ்பூன் நெய்யினை ஊற்றவும்.
3.முந்திரி மற்றும் உலர்திராட்சையினை வறுத்து எடுத்து கொள்ளவும்.
4.அதே கடாயில் பிரெட் துண்டுகளை போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
5.சிறிது சிறிதாக பாலை ஊற்றவும். மிதமான தீயில் 10-12 நிமிடங்களுக்கு இடை விடாமல் கிளறவும்.
6.பிரெட் துண்டுகள் பாலை முழுவதுமாக உறிஞ்சியதும் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும். நன்றாக கிளறவும்.
7.சர்க்கரை சேர்த்ததும் கலவை சிறிது நீர்த்து திரும்ப கெட்டியாகும். சிறிது சிறிதாக நெய் சேர்த்து கலவையை நன்றாக கிளறவும்.
8.கலவை கடாயில் ஒட்டவில்லை எனில் அல்வா ரெடி.
9.வறுத்து வைத்த முந்திரி மற்றும் பாதாமை உடன் சேர்க்கவும். அல்வாவை பரிமாறவும்.
இதையும் படிங்க: மல்டி மில்லட் பன்னீர் பரோட்டா
நான் சீனிக்கு பதிலாக நாட்டு சர்க்கரை சேர்த்துள்ளேன். இன்னும் ஆரோக்கியமாக கொடுக்க நினைத்தால் ட்ரை டேட்ஸ் பவுடர் கொடுக்கலாம். அல்வாவுக்கு இன்னும் சுவை மற்றும் ஆரோக்கியம் கூட்ட ட்ரை புரூட்ஸ் பவுடர் சேர்க்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply