Paal Sadham for babies in Tamil: நாம் குழந்தைகளுக்கு வீட்டினில் அடிக்கடி கொடுக்கும் உணவுகளில் பால் சாதமும் ஒன்று.குழந்தைகளுக்கு செரிமானம் ஆகக்கூடிய எளிமையான உணவாகும்.பால் சாதத்தில் என்ன விசேஷம்?இது வீட்டினில் அடிக்கடி செய்யும் ஒன்றுதானே என்றுதானே யோசிக்கின்றீர்கள்.இது குழந்தைகள் உண்பதற்கு ஏற்றவாறு பக்குவமாய் ஆரோக்கியமாய் சுவையாய் எப்படி செய்வது என்றுதான் இப்பொழுது நாம் பார்க்கப்போகின்றோம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
சீனி உடலுக்கு கேடு என்பதால் நாட்டு சர்க்கரை சேர்த்துள்ளேன்.குழந்தைகள் உண்பதற்கு ஏற்ப சுவையினை கூட நெய் சேர்த்துள்ளேன்.எளிதில் செரிமானம் ஆக ஏலக்காய் சேர்த்துள்ளேன். ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு மாட்டுப்பால் கொடுக்கக்கூடாது என்பதால் இந்த பால் சாதத்தை ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.
Paal Sadham for babies in Tamil
- அரிசி -6 டே.ஸ்பூன்
- காய்ச்சிய பால்- 2 டே.ஸ்பூன்
- நாட்டு சர்க்கரை – 2 டே.ஸ்பூன்
- நெய்-1/4 டீ.ஸ்பூன்
- சீரகத்தூள் -இம்மியளவு
குழந்தைகளுக்கான பால் சாதம்
Paal Sadham for babies in Tamil:
செய்முறை
1.அரிசியை குக்கரில் போடவும்.
2.தண்ணீர் ஊற்றவும்.
3. 3-4 விசில் வரும்வரை அடுப்பில் வைக்கவும்.
4.சமைத்த சாதத்தை நன்கு மசிக்கவும்.
5.மிதமான சூட்டுடன் பால் சேர்த்து கிளறி பின்பு சர்க்கரை சேர்க்கவும்.
6.நன்றாக கிளறவும்.
7.தேவைப்பட்டால் பால் சேர்க்கவும்.
8.நெய் சேர்த்து ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.
9.இதமாக பரிமாறவும்.
சில குழந்தைகள் பால் குடிக்க அடம் பிடிப்பர்.அக்குழந்தைகளுக்கு சாதத்துடன் பிசைந்து பால் சாதமாக கொடுத்தால் தேவையான கால்சியம் சத்து கிடைக்கும்.பால் சாதம் குழந்தைக்ளுக்கு இரவு நேரங்களில் கடுப்பதற்கேற்ற எளிமையான உணவாகும்.சுவையாக உள்ளதால் குழந்தைகளும் விரும்பி உண்பர்.நீங்களும் இதை செய்து ஒருங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply