Parangikkai kootu/kool for babies
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
வேகவைத்து மசித்த பரங்கிக்காய் அல்லது பரங்கிக்காய் கூழ்
(குழந்தையின் 5வது மாதத்தில் இருந்து தரலாம்)
- பரங்கிக்காய் – ஒரு துண்டு
செய்முறை:
பரங்கிக்காயை நன்றாக கழுவி அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
இதனை ஆவியில் வேகவைக்கலாம் அல்லது நெருப்பில் வாட்டிக் கொள்ளலாம். ஆனால் வேகவைக்கும் முறை தான் குழந்தைகளுக்கு ஏற்றது என்பதுடன் சத்துகளையும் நிரம்ப பெற்றிருக்கும்.
வெட்டிய துண்டுகளை ஒரு பாத்திரத்தில் வைத்து பிரஷர் குக்கரில் தண்ணீர் நிரப்பி அதனுள் வைத்து ஒரு விசில் விடவும்.
வேகவைத்த துண்டுகளை எடுத்து அதை மசித்துக் கொள்ளவும். தேவையெனில் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள்.
கலவை திக்காக இருக்கிறது என நினைத்தால் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் சேர்த்துக் கொள்ளலாம்.
தெரிந்து கொள்ள வேண்டியது:
கடைகளில் பரங்கிக்காய் வாங்கும் போது ஏற்கனவே வெட்டி வைத்ததை வாங்க வேண்டாம்.
அலர்ஜியை ஏற்படுத்தாத உணவு என்பதால் குழந்தைக்கு முதல் முறையாக கொடுக்கும் உணவாக இதை நீங்கள் தேர்வு செய்யலாம்.
இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குழந்தைகளின் மலச்சிக்கலுக்கு தீர்வு கொடுக்கும்.
பரங்கிக்காயில் அதிகளவிலான நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, இ போன்ற சத்துகள் உள்ளன.
“அதிகளவிலான நார்ச்சத்து பரங்கிக்காயில் இருப்பதால் குழந்தையின் மலச்சிக்கல் பிரச்சினைக்கு இது தீர்வாக இருக்கும்”
மேலும் சூப் வகைகளுக்கு இங்கு க்ளிக் செய்யுங்கள்
மற்ற கூழ் வகைகளுக்கு இங்கு க்ளிக் செய்யுங்கள்
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply