Vegetable Nuggets in Tamil: குழந்தைகளுக்கான டேஸ்டியான ஆரோக்கியமான மொறு மொறு வெஜிடபிள் நக்கட்ஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கு பிடித்தவாறு ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என்பது அம்மாக்களுக்கு சவாலான விஷயம்தான். நாம் என்னதான் வீட்டில் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தாலும் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ஸ்னாக்சினைத்தான் குழந்தைகள் விரும்பி சுவைப்பார்கள்.
ஆனால் அதே சுவையில் ஸ்னாக்சினை நாம் வீட்டில் செய்து கொடுத்தால் டபுள் சந்தோஷம்தானே! ஆம் …இன்று நாம் பார்க்க இருக்கும் ரெசிபி டேஸ்டியான ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி. குழந்தைகளுக்கு பிடித்தமான சுவையில் அதேசமயம் காய்கறிகளும் கலந்து இருப்பதால் ஆரோக்கியமானதாக இருக்கும்.
Vegetable Nuggets in Tamil
Vegetable Nuggets in Tamil:
தேவையானவை
- முட்டைக்கோஸ் நறுக்கியது -1 ½ கப்
- கேரட் நறுக்கியது -1 கப்
- பீன்ஸ் நறுக்கியது- 1 கப்
- கார்ன் பிளவர் மாவு- 2 டே.ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது -1 டீ.ஸ்பூன்
- கோதுமை மாவு -1 டே.ஸ்பூன்
- ரஸ்க் தூள்
- தக்காளி சாஸ் -1 டே.ஸ்பூன்
- பப்ரிக்கா-1 டீ.ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
Vegetable Nuggets in Tamil
Vegetable Nuggets in Tamil
செய்முறை
1.நறுக்கி வைத்த காய்கறிகளை மிக்ஸி ஜாரில் போட்டுக்கொள்ளவும்.
2.அரைத்த பேஸ்டினை ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளவும்.
3.அதனுடன் சிறிதளவு ரஸ்க் தூள், இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.
4.கார்ன் ஃப்ளவர் மாவில் தண்ணீர் சேர்த்து சேர்த்து பேஸ்ட் போல் கரைத்துக்கொள்ளவும்.
5.வெஜிடபிள் மிக்சினை தேவையான வடிவத்திற்கு உருட்டிக் கொள்ளவும்.
6.கான்பிளவர் பேஸ்டில் முக்கி எடுக்கவும்.
7.ரஸ்க் தூளில் புரட்டி எடுக்கவும்.
8.விருப்பப்பட்டால் அரை மணி நேரத்திற்கு ஃப்ரீசரில் வைக்கவும்.
9.கடாயில் எண்ணெய் சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் செய்து கொடுப்பதற்கு ஏற்ற ரெசிபியாகும்.மேலும் இதில் கலந்துள்ள முட்டைகோஸ்,கேரட் மற்றும் பீன்ஸ் போன்றவை குழந்தைகளுக்கான வைட்டமின் சி மற்றும் ஏ ஆகியவற்றைத் தருவதோடு பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்சிடென்ட்கள்,நார்ச்சத்துக்கள் ஆகியவற்றையும் அளிக்கவல்லது.
இதில் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தவாறு வேறு காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இது ஏற்ற ரெசிபி ஆகும். குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் மாலை நேரத்தில் டீயுடன் சேர்த்து சுவைக்க ஏற்ற ரெசிபி தான் இந்த வெஜிடபிள் நக்கட்ஸ்.
Vegetable Nuggets in Tamil
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்- FAQ
குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதா?
இதில் காய்கறிகள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது தான். எனினும் எண்ணெயில் பொரித்து எடுக்கும் உணவு என்பதால் வாரம் ஒரு முறை கொடுப்பதுதான் சிறந்தது.
இதில் வேறு காய்கறிகள் சேர்க்கலாமா?
ஆம் இதனுடன் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு, பட்டாணி போன்ற மற்ற காய்கறிகளையும் சேர்த்து செய்து கொடுக்கலாம்
மொறு மொறு வெஜிடபிள் நக்கெட்ஸ்
Ingredients
- 1 ½ கப் முட்டைக்கோஸ் நறுக்கியது
- 1 கப் கேரட் நறுக்கியது
- 1 கப் பீன்ஸ் நறுக்கியது
- 2 டே.ஸ்பூன் கார்ன் பிளவர் மாவு
- 1 டீ.ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 டே.ஸ்பூன் கோதுமை மாவு
- ரஸ்க்தூள்
- 1 டே.ஸ்பூன் தக்காளி சாஸ்
- 1 டீ.ஸ்பூன் பப்ரிக்கா
- தேவையான அளவு உப்பு
Notes
- நறுக்கி வைத்த காய்கறிகளை மிக்ஸி ஜாரில் போட்டுக்கொள்ளவும்.
- அரைத்த பேஸ்டினை ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளவும்.
- அதனுடன் சிறிதளவு ரஸ்க் தூள், இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.
- கார்ன் ஃப்ளவர் மாவில் தண்ணீர் சேர்த்து சேர்த்து பேஸ்ட் போல் கரைத்துக்கொள்ளவும்.
- வெஜிடபிள் மிக்சினை தேவையான வடிவத்திற்கு உருட்டிக் கொள்ளவும்.
- கான்பிளவர் பேஸ்டில் முக்கி எடுக்கவும்.
- ரஸ்க் தூளில் புரட்டி எடுக்கவும்.
- விருப்பப்பட்டால் அரை மணி நேரத்திற்கு ஃப்ரீசரில் வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
Leave a Reply