Breast milk increasing food in tamil: தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டம் என்பது அனைத்து அம்மாக்களுக்கும் மறக்க முடியாத அற்புதமான தருணம். குழந்தைகளுக்கும் நமக்கும் இருக்கும் அன்பினை ஸ்பரிசத்தால் பலமடங்கு அதிகரிக்கும் அற்புதமான உணர்வு தான் தாய்ப்பால் கொடுப்பது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
மேலும் குழந்தைகளுக்கு இதுதான் நம் தாய் என்பதை உணர வைப்பதில் அன்னையின் ஸ்பரிசம் முக்கிய பங்கு வகிக்கும். குழந்தை எப்பொழுதும் நம்முடன் இருப்பது போன்ற உணர்வை தருவதால் அம்மாக்களுக்கும் தாய்ப்பால் கொடுக்கும் தருணம் என்பது அலாதியான ஒன்று தான்.
ஆனால் தாய்ப்பால் சுரக்கவில்லை, குழந்தைகளுக்கு தாய்ப்பால் போதவில்லை என்று சொல்லும் அம்மாக்கள் நம்மில் இன்று ஏராளம். பொதுவாக தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதற்கான உணவினை நம் வீட்டில் உள்ள பெரியோர்கள் பார்த்து பார்த்து கொடுப்பர்.
அவர்களுக்கென தனி உணவு பட்டியலே நம் வீட்டில் இருக்கும். அவற்றின் வரிசையில் இன்று நாம் பார்க்க விருப்பது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தாய்ப்பாலினை அதிகரிக்கும் ஒரு சிறப்பான எனர்ஜி ட்ரின்க்.
இதை இரண்டே நிமிடத்தில் செய்துவிடலாம் என்பதால் அம்மாகளுக்கு எளிதான ஒன்றாக இருக்கும். மேலும் சுவையும் அதிகமாக இருப்பதால் இதனை விரும்பி உண்பர்.
Breast milk increasing food in tamil:
தாய்ப்பால் கொடுப்பது அம்மாவிற்கும் குழந்தைகளுக்கும் பலவகையான நன்மைகளை அளிக்கக் கூடியது:
- குழந்தைகளுக்கு டயரியா,நிமோனியா போன்ற தொற்றுகள் வராமல் தடுக்ககூடியது.
- குழந்தைகளுக்கு எடை,நீளம் மற்றும் தலை சுற்றளவு தசை போன்றவற்றினை ஆரோக்கியமாக அதிகரிக்கக்கூடியது.
- தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் வரக்கூடிய மன அழுத்தம் வராமல் தடுக்கக்கூடியது.
- தாய்ப்பாலில் ஆக்சிடோசின் நிறைந்திருப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான பந்தத்தை அதிகரிக்கக்கூடியது.
- தாய்மார்களை மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்ப காலத்திற்கு பிறகு வரும் உயர் மன அழுத்தம் ஆகியவற்றில் இருந்து விடுவிக்க கூடியது.
- குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் அலர்ஜி போன்றவை வராமல் தடுக்கக்கூடியது.
- குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பதற்கான ஒரு சிறந்த துவக்கத்தை தருவதில் தாய்ப்பால் முக்கியத்துவம் அளிக்கின்றது.
- குழந்தைகளின் மூளைத் திறனை அதிகரிக்க கூடியது .
- குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் தாய்ப்பாலானது முக்கிய பங்கு வகிக்கின்றது.
Breast milk increasing food in tamil:
- பால் -100 மி.லி
- பேரிச்சை 3-4
- பாதாம் 3-4
- முந்திரி 3-4
- உலர் திராட்சை 3-4
- பிஸ்தா 3-4
- பூசணி விதைகள் 10 -12
செய்முறை
1.மிக்ஸி ஜாரில் காய்ச்சி ஆற வைத்த பாலுடன் மேலே கொடுக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் சேர்த்துக் கொள்ளவும்.
2.பேஸ்ட் பதத்திற்கு வருமளவிற்கு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
3.இதனை தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்களுக்கு இதமாக கொடுக்கலாம்.
மேலே கொடுக்கப்பட்ட பொருட்களை வைத்து பாலூட்டும் தாய்மார்களுக்கான ட்ரிங்கினை எளிதாக மற்றும் சுவையாக எப்படி செய்யலாம் என்பதை நாம் பார்த்தோம். மேலும் உங்களின் பணியை எளிதாக்க விரும்பினால் பால்கொடுக்கும் தாய்மார்களுக்கான எங்களது லேக்டோ பூஸ்டரினை நீங்கள் வாங்கிக் கொடுக்கலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் எங்களை அணுகலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
தாய்ப்பாலை அதிகரிப்பதற்கான வழிகள் என்னென்ன?
நல்ல ஆரோக்கியமான உணவினை உட்கொண்டு , தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொண்டு,குழந்தைகளுக்கு தாய்ப்பால் அடிக்கடி கொடுத்தாலே போதும் தாய்ப்பால் சுரப்பது படிப்படியாக அதிகரிக்கும்.
தாய்ப்பால் சுரப்பினை வேகமாக அதிகரிப்பது எப்படி ?
குழந்தைகளுக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுத்துக் கொண்டே இருப்பதே சிறந்த வழி. மேலும் அதிகப்படியான தண்ணீரை நாம் குடிக்க வேண்டும். மேலும் நம் மனதினை தளர்வாக வைப்பதற்கான யோகா போன்றவை செய்யலாம்.
தாய்ப்பால் சுரப்பு குறைவதற்கான காரணங்கள் என்னென்ன ?
தாய்ப்பால் சுரப்பு குறைவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றுள் சில; குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்காமல் தாய்ப்பால் கொடுப்பதற்கு நீண்ட இடைவெளி விடுவது, அதிகப்படியான மன அழுத்தம்,தாய்க்கு ஓய்வு இல்லாமை, ஆரோக்கியமான உணவினை உண்ணாமை, குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பொழுது அவர்களை சரியான நிலையில் வைக்காமல் இருப்பது அதாவது குழந்தையின் வாயானது தாய்ப்பால் அருந்துவதற்கு ஏதுவாக வைக்க வேண்டும் மற்றும் பல்வேறு உடல்நிலை காரணங்களாக இருக்கலாம்.
தாயின் தூக்கமின்மை தாய்ப்பால் சுரப்பினை பாதிக்குமா?
கண்டிப்பாக தூக்கமின்மையானது ஹார்மோன் சுழற்சியில் பாதிப்பினை ஏற்படுத்தும்.எனவே தாய்ப்பால் சுரப்பு குறையலாம்.
லாக்டோ பூஸ்டர் ட்ரிங்கினை செய்வதற்கு நேரம் இல்லையா? கவலை வேண்டாம்.நாங்களே செய்து உங்கள் வீடு தேடி கொடுக்கின்றோம்.
தாய்ப்பாலை அதிகரிக்கும் எனர்ஜி டிரிங்க்
Ingredients
- · பால்-100 மி.லி
- · பேரிச்சை-3-4
- · பாதாம்-3-4
- · முந்திரி-3-4
- · உலர்திராட்சை- 3-4
- · பிஸ்தா-3-4
- · பூசணிவிதைகள் 10 -12
Instructions
- மிக்ஸிஜாரில் காய்ச்சி ஆற வைத்த பாலுடன்மேலே கொடுக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் சேர்த்துக் கொள்ளவும்.
- பேஸ்ட் பதத்திற்கு வருமளவிற்கு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
- இதனைதாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்களுக்கு இதமாக கொடுக்கலாம்.
Leave a Reply