Sweet Potato Cutlet Recipe: பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகள் ஏதாவது வித்தியாசமான ஸ்நாக்ஸ் இருந்தால் குதூகலம் ஆகி விடுவார்கள் தானே? அப்படி குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற வித்தியாசமான, ஆரோக்கியமான ரெசிபி தான் இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லட். இதுவரை எத்தனையோ ஸ்நாக்ஸ் ரெசிபிகளை நாம் பார்த்திருந்தாலும் இந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆனது மிகவும் வித்தியாசமான ரெசிபி ஆகும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஏனென்றால் சர்க்கரவள்ளிக்கிழங்கினை பொதுவாக நாம் அவித்து அப்படியே சாப்பிடுவது தான் வழக்கம். இதற்கு முன்பாக நாம் சர்க்கரைவள்ளி கிழங்கு தோசையை குழந்தைகளுக்கு சத்தான காலை உணவாக கொடுப்பது எப்படி என்பது பற்றி பார்த்திருப்போம். ஆனால் இந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு கட்லெட்டை பார்த்தாலே குழந்தைகள் குஷியாகி விடுவார்கள். இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் சர்க்கரைவள்ளிக்கிழங்கின் நன்மைகளை நாம் பார்க்கலாம்.
Sweet Potato Cutlet Recipe:
Sweet Potato Cutlet Recipe
சர்க்கரைவள்ளி கிழங்கின் நன்மைகள்
சர்க்கரைவள்ளி கிழங்கில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் ஏராளம். முக்கியமாக சொல்லப்போனால் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, பொட்டாசியம் சத்துக்கள் இதில் அதிகம். இவை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், கண் பார்வை மற்றும் தோல் வளர்ச்சிக்கும் ஏற்றது.
சர்க்கரைவள்ளி கிழங்கில் நார்ச்சத்துக்கள் ஏராளம் என்பதால் குழந்தைகளுக்கு உணவு எளிதில் ஜீரணம் ஆவதோடு மட்டுமல்லாமல் குழந்தைகளின் உடல் எடை ஆரோக்கியமாக அதிகரிக்க வல்லது. மேலும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் தடுக்கக்கூடியது.
இதில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் பீட்டா கரோட்டீன்கள் அதிகம். எனவே செல்களை சிதைவடையாமல் பாதுகாப்பதற்கு உதவுகின்றது. இதன் மூலம் சருமம் மினுமினுப்பாக இருக்கும்
சர்க்கரைவள்ளி கிழங்கில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாடில் வைக்க உதவுகின்றது. மேலும் சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள நார் சத்துக்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற வல்லது. எனவே பொதுவாக இதயத்தை ஆரோக்கியமாக வைப்பதற்கு சர்க்கரைவளி கிழங்கு துணையாக இருக்கின்றது.
சர்க்கரைவள்ளி கிழங்கில் இயற்கையாகவே கால்சியம் மற்றும் மாங்கனிஸ் போன்ற மினரல்ஸ் அதிகமாக உள்ளதால் சீரான எலும்பு வளர்ச்சிக்கு உதவுகின்றது.
Sweet Potato Cutlet Recipe
- சர்க்கரைவள்ளி கிழங்கு- 2
- பிரெட் தூள்- கால் கப்
- சீரகத்தூள் -அரை டீஸ்பூன்
- மல்லித்தூள் -அரை டீஸ்பூன்
- மஞ்சள் தூள் -கால் டீஸ்பூன்
- உப்பு- சுவைக்கு ஏற்ப
- சமையல் எண்ணெய்- தேவைக்கேற்ப
Sweet Potato Cutlet Recipe
செய்முறை
- சர்க்கரைவள்ளி கிழங்கின் தோலை உரித்து சீவவும்.
- கடாயினை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றவும்.
- சீவிய சர்க்கரைசக்கரவள்ளி கிழங்கினை சேர்த்து ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்கு வதக்கவும். கிழங்கு லேசாக பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
- மல்லித்தூள் சீரகத்தூள், மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
- அடுப்பை அணைத்து சில நிமிடங்களுக்கு ஆற வைக்கவும்.
- சிறிதளவு சூடு ஆறியதும் பிரட் தூளை அதனுடன் சேர்த்து நன்கு கிளறவும்.
- சிறு உருண்டைகளாக உருட்டி கட்லெட் ஷேப்பில் தட்டி எடுக்கவும்.
- மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
- இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு பொன்னிறமாகும் வரை புரட்டி வறுத்து எடுக்கவும்.
- டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய் உறிஞ்சிய பிறகு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற ஆரோக்கியமான கட்லெட் ரெசிபி தான் இந்த சர்க்கரைவள்ளி கிழங்கு கட்லெட். நீங்கள் விருப்பப்பட்டால் பட்டாணி, கேரட் போன்ற காய்கறிகளையும் குழந்தைகளையும் விருப்பத்திற்கு ஏற்றார் போல் சேர்த்து கொடுக்கலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
குழந்தைகளுக்கு சர்க்கரைவள்ளி கிழங்கு கொடுக்கலாமா?
குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்கு பின்பு நீங்கள் திட உணவு கொடுக்க ஆரம்பித்த பின் சர்க்கரைவள்ளி கிழங்கினை வேக வைத்து மசித்து குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பிக்கலாம்.
சர்க்கரைவள்ளி கிழங்கு உடலுக்கு ஆரோக்கியமானதா?
சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின்ஸ்கள், மினரல்கள் ஆகியவை நிறைந்துள்ளதால் கண்டிப்பாக உடலுக்கு ஆரோக்கியமானது தான்.
குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க சர்க்கரைவள்ளி கிழங்கு உதவுமா?
சர்க்கரைவள்ளி கிழங்கினை கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கலாம். மேலும்,கலோரிகள் அதிகம் என்பதால் உடல் எடை அதிகரிக்க உதவும்.
சர்க்கரைவள்ளி கிழங்கு கட்லெட்
Ingredients
- சர்க்கரைவள்ளிகிழங்கு- 2
- பிரெட்தூள்- கால் கப்
- சீரகத்தூள்-அரை டீஸ்பூன்
- மல்லித்தூள்-அரை டீஸ்பூன்
- மஞ்சள்தூள் -கால் டீஸ்பூன்
- உப்பு-சுவைக்கு ஏற்ப
- சமையல்எண்ணெய்- தேவைக்கேற்ப
Notes
- சர்க்கரைவள்ளி கிழங்கின் தோலை உரித்து சீவவும்.
- கடாயினை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றவும்.
- சீவிய சர்க்கரைசக்கரவள்ளி கிழங்கினை சேர்த்து ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்கு வதக்கவும். கிழங்கு லேசாக பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
- மல்லித்தூள் சீரகத்தூள், மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
- அடுப்பை அணைத்து சில நிமிடங்களுக்கு ஆற வைக்கவும்.
- சிறிதளவு சூடு ஆறியதும் பிரட் தூளை அதனுடன் சேர்த்து நன்கு கிளறவும்.
- சிறு உருண்டைகளாக உருட்டி கட்லெட் ஷேப்பில் தட்டி எடுக்கவும்.
- மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
- இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு பொன்னிறமாகும் வரை புரட்டி வறுத்து எடுக்கவும்.
- டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய் உறிஞ்சிய பிறகு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
Leave a Reply