Keerai Poori: இட்லி,தோசைக்கு நோ சொல்லும் குழந்தைகள் நம்மிடம் விரும்பி வாங்கி சாப்பிடும் உணவு வகை உண்டு என்றால் அது பூரி தான். குழந்தைகளுக்கு எண்ணெயில் வார்த்த உணவுப் பொருட்களை அடிக்கடி தரக்கூடாது என்றாலும் கோதுமை மாவில் வீட்டிலேயே செய்த பூரியை வாரம் ஒரு முறை அல்லது இரு முறை குழந்தைகளுக்கு தரலாம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
எனவே குழந்தைகளுக்கு கொடுக்கும் பூரியை ஆரோக்கியமாக எப்படி கொடுக்கலாம் என்று சிந்தித்தபோது கிடைத்த ரெசிபி தான் இந்த பாலக்கீரை பூரி. கீரையில் உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் நிறைந்துள்ளது என்பதை நாம் அறிந்தாலும் அதனை சாப்பிட வைப்பதற்குள் வீட்டில் ஒரு பெரிய போராட்டமே நடக்கும்.
ஏனென்றால் பெரும்பாலான குழந்தைகளுக்கு கீரையின் சுவையானது பிடிக்காது. அப்படி என்றால் குழந்தைகளுக்கு தெரியாமலேயே அவர்களுக்கு பிடித்த உணவில் கலந்து கொடுக்கும் பொழுது நமக்கும் வேலை மிச்சம் தானே!
அது மட்டுமல்லாமல் சாதாரண பூரியினை விட நிறமும் வித்தியாசமாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். இந்த பூரியை எப்படி செய்வது என்பதை பார்ப்பதற்கு முன்னால் பாலக்கீரையில் உள்ள நன்மைகளை பார்க்கலாம்.
Keerai Poori:
- பச்சையம் அதிகம் உள்ள கீரைகள் பொதுவாகவே உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சதுக்களையும் அள்ளித் தர வல்லது.
- குறிப்பாக சொல்ல போனால் பாலக்கீரையில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகிய சத்துக்கள் அதிகம். அவை மட்டுமல்லாமல் மெக்னீசியம், இரும்பு சத்து மற்றும் மாங்கனிசு போன்றவை நிறைந்துள்ளன.
- இந்தக் கீரையில் நிறைந்துள்ள வைட்டமின் ஏ ஆரோக்கியமான பார்வைக்கு உதவுகின்றது.
- வைட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க வல்லது.
- எலும்புகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இதில் நிறைந்துள்ள வைட்டமின் கே துணை புரிகின்றது.
- பாலக்கீரையில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன. இயற்கையாகவே ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் களை உற்பத்தி செய்யும் வேதிப்பொருட்கள் இந்தக் கீரையில் நிறைந்திருப்பதே அதற்கு காரணம்.
- இந்தக் கீரையானது மலச்சிக்கல் வராமல் தடுக்கவல்லது.
- குழந்தைகளின் மூளை வளர்ச்சியினை ஆரோக்கியமாக அதிகரிக்க தேவையான சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன.
- இதில் நிறைந்துள்ள வைட்டமின் கே எலும்புகளில் கால்சியம் மற்றும் புரோட்டின் போன்றவற்றை உற்பத்தி செய்து எலும்புகள் திடமாக வளர்வதற்கு உதவுகின்றது.
Keerai Poori
- கோதுமை மாவு -2 கப்
- பாலக்கீரை -1 கப்
- கொத்தமல்லி தலைகள்- 2 டேபிள் ஸ்பூன்
- பச்சை மிளகாய்-1-2 (சுவைக்கு ஏற்றவாறு)
- சீரகம் – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர்- (மாவு பிசைய தேவையான அளவு)
- ரீஃபைண்ட் ஆயில்-( பொரிப்பதற்கு தேவையான அளவு)
Keerai Poori
செய்முறை
- கீரை மற்றும் கொத்தமல்லி தளைகளை நன்றாக கழுவி மிக்ஸி ஜாரில் அவை இரண்டையும் சேர்த்து அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் சரியான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பெரிய பவுலில் கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு, சீரகம் மற்றும் அரைத்து வைத்த கீரை ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 15 முதல் 20 நிமிடங்களுக்கு மாவினை வைத்து பின்பு எப்பொழுதும் பூரிக்கு உருட்டுவது போன்று உருட்டி தேய்த்து எண்ணெயில் பொறுத்து எடுக்கவும்.
- குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற சுவையான ஆரோக்கியமான பாலக்கீரை பூரி ரெடி.
- குழந்தைகளுக்கு சிறு வயது முதலே கீரைகளை உணவில் சேர்த்துக் கொண்டால்தான் அவர்களுக்கு கீரை மற்றும் காய்கறிகளை உண்பதற்கு உடல் பழக்கப்படும். அவர்கள் அதனை விரும்பாவிட்டால் வேறு ஏதாவது வழியில் எப்படி கொடுக்கலாம் என்பதை யோசித்து நாம் கொடுத்து பழக்க வேண்டும்.
- குழந்தைகள் பூரியை தவிர சப்பாத்தி நன்றாக சாப்பிடுகிறார்கள் என்றால் நீங்கள் சப்பாத்தியிலும் கீரையை சேர்த்து பிசைந்து கொடுக்கலாம்.
Keerai Poori
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பாலக் கீரையை பூரி தவிர வேறு ஏதாவது வடிவில் குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
ஆம். பூரியை தவிர நீங்கள் சப்பாத்தி, இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்தும் கொடுக்கலாம்.
பூரியுடன் கீரையைத் தவிர வேறு ஏதேனும் காய்கறிகள் சேர்த்து கொடுக்கலாமா?
கீரையை தவிர பீட்ரூட், கேரட், போன்ற காய்கறிகளை அரைத்து மாவில் பிசைந்து குழந்தைகளுக்கு இதேபோன்று பூரியாக சுட்டுத் தரலாம்.
பாலக்கீரை பூரி குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதா?
கீரையில் உள்ள அனைத்து வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் என்பதால் சாதாரணமாக நாம் வீட்டில் சுட்டு தரும் பூரியை விட பாலக்கீரை பூரி பல மடங்கு ஆரோக்கியமானது.
ஹெல்தியான கீரை பூரி
Ingredients
- கோதுமை மாவு -இரண்டு கப்
- பாலக்கீரை -ஒரு கப்
- கொத்தமல்லி தலைகள்- இரண்டு டேபிள் ஸ்பூன்
- பச்சை மிளகாய்-1-2 சுவைக்கு ஏற்றவாறு
- சீரகம் -ஒரு டீஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
- தண்ணீர்- மாவு பிசைய தேவையான அளவு
- ரீஃபைண்ட் ஆயில்- தேவையான அளவு
Leave a Reply