Aval Chapathi: வழக்கமாக வீட்டில் செய்யப்படும் இட்லி, தோசை, சப்பாத்தி ,பூரி ஆகியவற்றை சாப்பிட்டு போர் அடித்த குழந்தைகளுக்கு சற்று புத்துணர்ச்சி ஊட்ட ஏதேனும் வித்தியாசமான ரெசிபி செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அவல் சப்பாத்தியை நீங்கள் செய்து கொடுக்கலாம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
இதுவரை விதவிதமான சப்பாத்தி ரெசிபிகளை நாம் பார்த்திருந்தாலும் இந்த அவல் சப்பாத்தி சற்றே வித்தியாசமான ஒன்றாகும். பொதுவாக நாம் அவலினை ஊற வைத்து அதில் சர்க்கரை, தேங்காய் பூ துருவி சாப்பிடுவதுண்டு.
ஆனால் அதை வைத்து சப்பாத்தி செய்வது என்பது சற்று வித்தியாசமாக உள்ளதல்லவா. உண்மையில் இந்த ரெசிபி உங்கள் குழந்தைகள் விரும்பும் வண்ணம் சுவையாகவும் இருக்கும். அரிசி அவலினை ஆறு மாத காலம் முதலே நாம் கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு முதல் உணவாக கொடுக்கும் பொழுது அரிசி அவலினை வறுத்து,பொடித்து கஞ்சியாக கொடுத்தால் குழந்தைகளுக்கு எளிதில் செரிமானமாக கூடிய சத்தான ரெசிபியாக அது அமையும். எனவேதான் நாமும் ஆறு மாத குழந்தைகளுக்கு வேண்டிய உணவு பட்டியலில் அவல் கஞ்சியை சேர்த்திருப்போம்.
அதே அவலினை வைத்து சிறுவர்களுக்கு செய்து தரக்கூடிய வித்தியாசமான டிபன் ரெசிபி தான் நாம் இப்பொழுது பார்க்கப் போகின்றோம் .வழக்கமாக நான் சப்பாத்தி செய்ய பயன்படுத்தும் கோதுமை மாவுடன் அவலையும் சேர்த்து செய்தால் அதன் சுவையே சற்று வித்தியாசமாக இருக்கும்.
அதனுடன் குழந்தைகளுக்கு விருப்பமான காய்கறிகளும் சேர்த்துள்ளதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலில் இந்த அவல் சப்பாத்தியும் இருக்கும். இந்த ரெசிபி பார்ப்பதற்கு முன்னால் அவலில் அடங்கி இருக்கக்கூடிய நன்மைகளை நாம் பார்க்கலாம்:
Aval Chapathi
- குழந்தைகளுக்கு எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுப் பொருட்களில் அரிசி அவலும் ஒன்று. இது குழந்தைகளுக்கு வாயு தொந்தரவையும் ஏற்படுத்தாமல் உணவினை எளிதில் செரிமானமடைய செய்கின்றது.
- இரும்பு சத்துகள் அதிகம் என்பதால் குழந்தைகளின் மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றது. ரத்தசோகை ஏற்படாமல் தடுக்கக் கூடியது.
- கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் என்பதால் உடலுக்கு தேவையான எனர்ஜியை அளிக்க வல்லது. குழந்தைகளுக்கு மிகச் சிறந்த காலை உணவாக இது அமையும்.
- அரிசி அவலில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் உடல் எடை அதிகரிக்காமல் சத்தான காலை உணவாக இது அமையும்.
- மேலும் இதில் உங்கள் குழந்தைகளுக்கு நன்மை அளிக்கக்கூடிய வைட்டமின் பி1, மினர்ஸ்கள் மற்றும் பல வைட்டமின்களும் அடங்கியுள்ளது. எனவே உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கக் கூடியது.
- இது இல்லாத உணவு என்பதால் லி ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற உணவாகும்.
- இதில் ப்ரோ பயோடிக்குகள் எனப்படும் சத்துக்கள் அதிகம் என்பதால் உடலுக்கு நன்மை அளிக்கக் கூடியது.
Aval Chapathi:
Aval Chapathi:
- அவல்- 1 கப்
- கோதுமை மாவு – 1 கப்
- கேரட் சிறியது- 1
- உருளைக்கிழங்கு வேக வைத்து மசித்தது- 1
- நறுக்கிய கொத்தமல்லி இலைகள்- 2 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள்-. கால் டீஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
- நெய் அல்லது பட்டர்
செய்முறை
- அரிசி அவலினை குளிர்ந்த நீரில் நன்றாக கழுவி ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். அவலில் உள்ள தண்ணீரை வடிகட்டி அப்படியே வைக்கவும்.
- பெரிய பவுலில் ஊற வைத்த அவல், கோதுமை மாவு, துருவிய கேரட், மசித்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி இலைகள் ,மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
- தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். சேர்க்கப்பட்டுள்ள காய்கறிகள் தண்ணீர் விடும் என்பதால் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசையவும்.
- மாவினை சிறு சிறு உருண்டைகளாக சப்பாத்திக்கு உருட்டுவது போன்ற உருட்டவும்.
- தோசை கல்லை வைத்து சப்பாத்தி போன்ற தேய்த்து கல்லில் போடவும்.
- பொன்னிறமானதும் அடுத்த பக்கம் திருப்பி போடவும். நெய் அல்லது பட்டர் சேர்த்து சப்பாத்தி சுடலாம்.
- குழந்தைகளுக்கான ஆரோக்கியமான சப்பாத்தி ரெடி.
இதனுடன் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த மற்ற காய்கறிகளையும் சேர்த்து செய்யலாம். குழந்தைகளுக்கு காலை நேரம், இரவு நேரம் கொடுக்கக்கூடிய ஆரோக்கியமான டிபன் ஆக இது இருக்கும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Aval Chapathi
Aval Chapathi
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
குழந்தைகளுக்கு அவல் கொடுக்கலாமா?
இது எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவு என்பதால் ஆறு மாத காலம் முடிந்த உடனே குழந்தைகளுக்கு அவல் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
அவல் சப்பாத்தியை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
இதில் உப்பு சேர்த்துள்ளதால் ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு அவல் சப்பாத்தியை நன்கு ஊற வைத்துக் கொடுக்கலாம்.
வேறு காய்கறிகள் சேர்க்கலாமா?
உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த காய்கறிகளை சேர்த்து இந்த சப்பாத்தி செய்து கொடுக்கலாம்.
ஆரோக்கியமான அவல் சப்பாத்தி
Ingredients
- அவல்- 1 கப்
- கோதுமை மாவு - 1 கப்
- கேரட் சிறியது- 1
- உருளைக்கிழங்கு வேக வைத்து மசித்தது- 1
- நறுக்கிய கொத்தமல்லி இலைகள்- 2 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள்-. கால் டீஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
- நெய் அல்லது பட்டர்
Notes
செய்முறை
- அரிசி அவலினை குளிர்ந்த நீரில் நன்றாக கழுவி ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். அவலில் உள்ள தண்ணீரை வடிகட்டி அப்படியே வைக்கவும்.
- பெரிய பவுலில் ஊற வைத்த அவல், கோதுமை மாவு, துருவிய கேரட், மசித்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி இலைகள் ,மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
- தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். சேர்க்கப்பட்டுள்ள காய்கறிகள் தண்ணீர் விடும் என்பதால் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசையவும்.
- மாவினை சிறு சிறு உருண்டைகளாக சப்பாத்திக்கு உருட்டுவது போன்ற உருட்டவும்.
- தோசை கல்லை வைத்து சப்பாத்தி போன்ற தேய்த்து கல்லில் போடவும்.
- பொன்னிறமானதும் அடுத்த பக்கம் திருப்பி போடவும். நெய் அல்லது பட்டர் சேர்த்து சப்பாத்தி சுடலாம்.
- குழந்தைகளுக்கான ஆரோக்கியமான சப்பாத்தி ரெடி.
Leave a Reply