Carrot Egg Chapathi Roll in Tamil:வீடுகளில் நாம் வழக்கமாக செய்யும் டிபன் வகைகளில் ஒன்றுதான் சப்பாத்தி.ஆனால் அதே டேஸ்டில் நாம் திரும்ப திரும்ப செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகள் விரும்ப மாட்டார்கள்.அவர்களை சாப்பிட வைக்க நாம் ஏதாவது முயற்சி செய்துதான் ஆகவேண்டும்.அதே நேரம் ரெசிபி எளிமையாகவும் இருக்க வேண்டுமல்லவா.இதோ உங்களுக்கான கேரட் எக் சப்பாத்தி ரோல்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
கேரட் எக் சப்பாத்தி ரோல்
- கேரட் -2
- நறுக்கிய வெங்காயம் -2
- நறுக்கிய தக்காளி -1
- இஞ்சி பூண்டு விழுது – 1 டீ.ஸ்பூன்
- பச்சை மிளகாய் -1
- பொரிகடலை – 1 டீ.ஸ்பூன்
- உளுந்தம்பருப்பு – ½ டீ.ஸ்பூன்
- கடுகு – ½ டீ.ஸ்பூன்
- முட்டை – 2
- சப்பாத்தி- 1
இதையும் படிங்க: சோளம் குழி பணியாரம்
Carrot Egg Chapathi Roll in Tamil:
செய்முறை
1.வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் உளுந்தம் பருப்பை போடவும்.நன்றாக பொரிய விடவும்.
2.வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும்.
3.இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
4.தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வதக்கவும்.
5.கேரட்டை துருவி வதக்கிய வெங்காயத்தில் சேர்த்து நன்கு வதக்கவும்.
6.தேவையானளவு உப்பு சேர்க்கவும்.
7.முட்டையினை உடைத்து ஊற்றவும்.காய்கறி கலவையுடன் சேருமாறு நன்றாக வதக்கவும்.
8.காய்கறி கலவையினை சப்பாத்திக்குள் வைத்து ரோல் செய்யவும்.
கேரட்டிற்கு பதிலாக உங்கள் குழந்தைகளுக்கு விருப்பமான காய்கறிகளை சேர்த்து கொடுக்கலாம்.குழந்தைகளுக்கு காலை நேர உணவாக கொடுக்கலாம்.அசத்தலான லன்ச் பாக்ஸ் ரெசிபியாகவும் கொடுக்கலாம்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply