Aval Broccoli Upma: நாம் நாள் முழுவதும் சிறப்பாக சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என்றால் ஆரோக்கியமான காலை உணவு அருந்துவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
நமக்கு எப்படி என்றால் நாள் முழுவதும் ஓடியாடி விளையாடும் குழந்தைகளுக்கு இன்னும் ஒரு படி மேலாக அல்லவா கொடுக்க வேண்டும்? வழக்கமாக நாம் வீடுகளில் செய்வது இட்லியும் தோசையும் தான்.
ஆனால், அதையே ஆரோக்கியமாக சிறுதானியங்களை வைத்து எப்படி செய்யலாம் அதே நேரம் குழந்தைகளுக்கு ஏற்றவாறு சுவையாக எப்படி செய்யலாம் என்பதை பற்றி பல வகையான சுவையான ரெசிபிகளை நாம் பார்த்து விட்டோம்.
அதேபோன்று இன்று நாம் பார்க்கவிருக்கும் ரெசிப்பியானது குழந்தைகளுக்கு ஆரோக்கியமான காலை சிற்றுண்டியான ப்ரோக்கோலி அவல் உப்புமா. பொதுவாக உப்புமா என்றாலே குழந்தைகள் தெறித்து ஓடுவர்.
ஏராளமான பெரியோர்களுக்கும் உப்புமா ஆனது பிடிக்காது. ஆனால் நீங்கள் இப்படி செய்து கொடுத்துப் பாருங்கள் குழந்தைகள் மறுக்காமல் வாங்கி உண்பார்கள்.
இதில் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடிய காய்கறிகளான அவுல், பிரக்கோலி, கேரட், பச்சை பட்டாணி போன்றவை சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கான சத்தான காலை உணவாக இது இருக்கும்.
Aval Broccoli Upma:
Aval Broccoli Upma:
இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் அடங்கி இருக்கக்கூடிய நன்மைகளை பார்க்கலாம்:
ப்ரோக்கோலி:
- ப்ரோக்கோலியில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி ஆகியவை நிறைந்துள்ளன. எனவே நோய் எதிர்ப்பு சக்தி, எலும்புகளுக்கு தேவையான சத்துக்கள், கண் பார்வை போன்றவற்றை அதிகரிக்கிறது.
- இதில் நார் சத்துக்கள் நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது.
- ப்ரோக்கோலியில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் செல்கள் சிதைவடையாமல் தடுக்க கூடியது.
- ப்ரோக்கோலியில் நிறைந்துள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் கே போன்றவை குழந்தைகளின் எலும்புகளுக்கு வலிமை தர கூடியது.
- மேலும் ப்ரோக்கோலியில் நிறைந்துள்ள வைட்டமின் மற்றும் மினரல்ஸ் போன்றவை நோய் ஏற்ப மண்டலத்தை வலுவாக்கி, அடிக்கடி நோய்கள் வருவதை தடுக்கின்றது.
அவுல்:
- அவுல் என்பது இயற்கையிலேயே எளிதில் செரிமானம் ஆகக்கூடிய ஒன்று என்பதால் குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம்.
- மேலும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு தேவையான எனர்ஜியை தரவல்லது.
- அவலில் இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளதால் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்து அனிமியா வராமல் தடுக்க கூடியது.
- அவலில் க்ளூட்டின் சத்து இல்லை என்பதால், க்ளூட்டின் ஒவ்வாமை உள்ளவர்களும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
Aval Broccoli Upma:
- அவுல் – ஒரு கப்
- ப்ரோக்கோலி இதழ்கள்- அரை கப்
- கேரட்( துருவியது)-1
- பச்சை பட்டாணி- கால் கப்
- பொடியாக நறுக்கிய வெங்காயம்-1
- கடுகு- அரை டீஸ்பூன்
- சீரகம்- அரை டீஸ்பூன
- பச்சை மிளகாய்1-2
- கருவேப்பிலை
- மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
- உப்பு தேவையான அளவு
- கடலை எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சைச்சாறு( தேவைப்பட்டால்)
- கொத்தமல்லி இலைகள்- சிறிதளவு
Aval Broccoli Upma:
செய்முறை
- அவளை தண்ணீரில் நன்றாக கழுவி, தண்ணீரை வடிகட்டி ஒரு ஓரமாக வைக்கவும்.
- கடாயினை சூடாக்கி எண்ணெய் ஊற்றவும்.
- கடுகு சேர்த்து தாளிக்கவும். சீரகம் சேர்க்கவும்.
- பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- துருவிய கேரட், பச்சை பட்டாணி மற்றும் நறுக்கிய ப்ரோக்கோலி சேர்த்து காய்கறிகள் நன்கு வேகம் வரை ஐந்து நிமிடங்கள் வரை வதக்கவும்.
- சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- ஏற்கனவே கழுவி எடுத்து வைத்திருந்த அவுலை சேர்த்து, நன்கு கிளறவும். இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு
- மசாலா பொருட்கள் மற்றும் காய்கறிகள் அவலில் நன்கு கலக்கும் வரை பிரட்டி எடுக்கவும்.
- அடுப்பை அணைத்து சிறிதளவு லெமன் ஜூஸ் ஊற்றவும்.
- கொத்தமல்லி தலைகளை மேலே தூவி பரிமாறவும்.
ஆரோக்கியமான ரெசிபியாக மட்டுமல்லாமல் செய்வதற்கும் மிகவும் எளிது என்பதால் சிறிது நேரத்தில் குழந்தைகளுக்கு எளிதான டிபன் செய்ய வேண்டுமென்றால் இந்த ப்ரோக்கோலி அவல் உப்புமாவை செய்து கொடுக்கலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ப்ரோக்கோலி உப்புமாவை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
குழந்தைகளுக்கு ப்ரோக்கோலியை 8-10 மாதங்களுக்குள் அறிமுகம் செய்யலாம் என்பதால் 10 மாதங்களுக்கு மேல் நன்கு மசித்து குழந்தைகளுக்கு ஊட்டலாம்.
வேறு காய்கறிகள் சேர்க்கலாமா?
உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த காய்கறிகளான கேரட், பச்சை பட்டாணி, குடைமிளகாய், ஸ்வீட் கான் போன்றவற்றை சேர்த்து செய்யலாம்.
வெங்காயம் அல்லது பூண்டு சேர்க்காமல் செய்யலாமா?
உங்கள் குழந்தைகளுக்கு பிடிக்கவில்லை என்றால் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்காமல் மற்ற காய்கறிகள் சேர்த்து செய்யலாம்.
Leave a Reply