Breastfeeding increasing food: பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை…மற்றும் தவிர்க்க வேண்டியவை…
Breastfeeding increasing food:
பால் சுரப்பை அதிகரிக்க
பேரீச்சம், அத்தி போன்ற இரும்புச்சத்து நிறைந்த பழங்கள் தாய்ப்பாலின் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகமாக்கும்.
 
 நீர்ச்சத்துகள் அதிகம் உள்ள காய்கறிகளான முள்ளங்கி, சுரைக்காய் போன்றவை பால் சுரப்பை அதிகரிக்கும். 
 கல்யாண முருங்கை இலையைத் தேங்காய் எண்ணெயில் வதக்கி சாப்பிடலாம். 
 மெர்க்குரி அதிகம் உள்ள  சில மீன் வகைகளைத் தவிர்த்து சுறா  போன்ற பால் சுரப்பைக் கூட்டும் மீன்களைச் சாப்பிடலாம். 
 பப்பாளிக் காயின் தோலை நீக்கிவிட்டுச் சிறுசிறு துண்டுகளாக்கி லேசாக வேகவைத்துச் சாப்பிடலாம். இதில் குழந்தைக்குத் தேவையான வைட்டமின் ‘ ஏ’ சத்தும் அடங்கியுள்ளது. 
 வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அல்லது வெந்தயக்கஞ்சி வைத்து குடிக்க பால் சுரப்பு அதிகரிப்பதோடு, கருப்பையைச் சுருங்கச் செய்து கருப்பையின் அழுக்குகளையும் நீக்கும். 
 பூண்டு, வெங்காயத்தை  உணவில் சேர்த்துக்கொள்வதால் பால் சுரப்பை அதிகமாக்கி உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் குறைக்கும்.நெய்யில் பூண்டை  தோலுடன் நன்கு வதக்கி, பின் தோலை நீக்கி அதை சாப்பிட்டு வர தாய்ப்பால் நன்கு ஊறும். 
 
 கேழ்வரகால் தயாரித்த உணவுகளைச் சாப்பிட்டாலும் தாய்ப்பால் நன்கு சுரக்கும். 
 முளைகட்டிய பயறு வகைகள் மற்றும் சிறுதானியங்களை சிற்றுண்டிகளாக சாப்பிடலாம். இது தாய் மற்றும் குழந்தைக்கும் தேவையான சரிவிகித சத்துள்ள உணவாக அமையும்.
 நார்ச்சத்து நிறைந்த கீரை வகைகள் மற்றும் காய்கறிகளான கேரட், முருங்கைக்காய் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் பால் சுரப்பு சீராக இருக்கும். மலச்சிக்கல் பிரச்னையையும் தடுக்கலாம். இதனால் குழந்தைகளுக்கும் செரிமானப் பிரச்னைகள் ஏற்படாது. 
 what to drink to increase breast milk:குழந்தைக்கு ஒவ்வொருமுறை பால் கொடுக்கும் முன்பும் சுத்தமான நீர் ஆகாரங்களை அதிகமாக குடிக்க வேண்டும். இதனால் பால் கட்டுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படாது. 
How to thicken breast milk naturally:
தாய்ப்பாலை அதிகரிக்க செய்யும் பொடி
எங்களது லேக்டோ பூஸ்டர் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு தாய்ப்பாலை அதிகரிக்க செய்கிறது.பால் சுரப்பை அதிகரிக்க உதவும் அனைத்து பொருட்களும் இதில் அடங்கி இருக்கிறது. பால் சுரப்பை அதிகரிக்க செய்யும் ஹார்மோனை தூண்டும் தன்மை கொண்ட புரோ லாக்டின் சத்துகளை கொண்ட ஓட்ஸ் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
மேலும் இதில் சம்பா கோதுமை, ப்ரெளன் ரைஸ் போன்ற பொருட்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இது அதிக கால்சியம் சத்து கொண்டது என்பதால் பால் சுரக்க உதவும் பீட்டா குளூக்கேனை சுரக்கும். மேலும் இதில் பால் சுரக்க உதவும் எள், வைட்டமின் , சத்துகள் நிரம்பிய முந்திரி, பாதாம் போன்றவையும் சேர்க்கப்பட்டுள்ளன.
how to increase breast milk by indian food
எங்களிடம் கிடைக்கும் இயற்கையான முறையில் சுத்தமாக தயாரிக்கப்பட்ட அதிக சத்துகள் நிரம்பிய இந்த லாக்டோ பூஸ்டர் பொடியை வாங்கி பயன்படுத்துங்கள்…
எங்களது லாக்டோ பூஸ்டர் மற்றும் குழந்தைகளுக்கான வெயிட் கெய்னிங் புட்ஸை 10% தள்ளுபடியில் பெற இங்கே கிளிக் செய்யவும்.Breastfeeding increasing food:
தவிர்க்க வேண்டியவை
அதிக காரமான உணவுகளை உட்கொண்டால் குழந்தைகளுக்கு செரிமானப் பிரச்னை ஏற்படும்.
 பிராய்லர் கோழி மற்றும் துரித உணவுகளைக் கட்டாயமாகத் தவிர்க்கவும். 
 பசும்பால் பொருள்களில் உள்ள பால் புரதம் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே பால், தயிர், பாலாடைக்கட்டி போன்ற உணவுகள் உண்பதை தாய்மார்கள் குறைத்துக்கொள்ள வேண்டும். 
 அதிக அளவு காபி குடித்தால் அதிலுள்ள ‘கெஃபைன்’ என்னும் வேதிப்பொருள் தாய்ப்பாலில் கலந்து குழந்தையின் உறக்கத்தைக் கெடுக்கும். 
 எண்ணெயில் பொரித்த  உணவுகள் குழந்தைளுக்கு மந்ததன்மையை ஏற்படுத்துவதோடு, தாயின் உடல் எடையையும்  கூட்டி விடும். 
 கார்போனைட்டட் பானங்களைத் தவிர்க்க வேண்டும். 
 முக்கியமாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் முன்னரும் மருத்துவரை ஆலோசிக்க வேண்டியது முக்கியம். ஏனெனில் குழந்தைகளுக்கு தாய்ப்பாலே உணவும் மருந்தும் என்பதை மறந்துவிட கூடாது. 
Image Credit: Kratom IQ
Breastfeeding increasing food:
குழந்தைக்கான உணவு அட்டவனைகள் காண இங்கு க்ளிக் செய்யவும். உங்கள் குழந்தையின் வயதுக்கேற்றபடி 6 மாசத்தில் இருந்து 12 மாதங்கள் வரை எல்லா வித உணவு முறைகளும் கொடுக்கப்படும். உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள். உங்கள் கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்படும்.







Leave a Reply