Kesar Pista Milk: பள்ளி முடித்து களைப்பாக வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு தினமும் சாதாரணமான பால்தான் கொடுக்கின்றீர்களா? அப்படி என்றால் ஒரு முறை இந்த கேசர் பிஸ்தா மில்க்கை கொடுத்துப்பாருங்கள்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
பெரும்பாலான குழந்தைகள் வெறும் பாலினை கொடுப்பதை விட அதில் மார்க்கெட்டுகளில் வலம் வரும் விதவிதமான பொடிகளை சேர்த்து குடிப்பதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஆனால் அவற்றில் உள்ளது என்று உண்மையில் கூறப்பட்டிருக்கும் பொருட்களை காட்டிலும் இனிப்பு சுவை தான் பல மடங்கு உள்ளது என்பதால் வீட்டிலேயே இது போன்று ஆரோக்கியமான பாலினை கொடுக்கலாம்.
இந்த பாலில் குழந்தைகளுக்கு பிடித்த பிஸ்தாவுடன் தேன் மற்றும் குங்குமப்பூ சேர்த்து உள்ளதால் குழந்தைகளுக்கு விருப்பமான பிளேவரில் இது இருக்கும்.

குழந்தைகளுக்கு இந்த பால் கொடுப்பதற்கு முன்னால் இதில் நிறைந்துள்ள நன்மைகளை பார்க்கலாம்:
- எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு கால்சியம் என்பது மிக மிக முக்கியமானதாகும். கால்சியம் சத்துக்கு ஒரே ஒரு சிறந்த வழி பால் நன்றாக கொடுப்பதாகும்.
- பாலில் கால்சியம் மட்டும் அல்லாமல் பாஸ்பரஸ் சத்தும் இருப்பதால் இது குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிக அத்தியாவசியமான ஒன்றாகும்.
- மேலும் பாலில் உள்ள புரத சத்துக்கள் குழந்தைகளின் தசைகள் நன்கு வலுவாக வளர்வதற்கு உதவுகின்றது.
- மேலும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் வைட்டமின் ஏ, சிங்க் மற்றும் செலினியம் போன்றவை உதவும் என்பதால் அவையும் இந்த பிஸ்தா பாலில் நிறைந்துள்ளன.
- மேலும் பாலில் நிறைந்துள்ள வைட்டமின் பி12 மற்றும் அயோடின் போன்றவை குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுவதாகும்.
- பாலில் இயற்கையாகவே நிறைந்துள்ள கார்போஹைட்ரேட் குழந்தைகளின் உடல் இயக்கத்திற்கு தேவையான கார்போஹைட்ரேட்டை வழங்குகின்றது.
- பொதுவாகவே எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு ஆரோக்கியமான எடை வேண்டுமென்று நினைத்தால் நல்ல கொழுப்பு சத்து, புரோட்டின் மற்றும் கலோரிகள் இணைந்த இந்த வகையான பாலை கொடுப்பது சிறந்ததாகும்.
- பாலில் உள்ள தண்ணீர் சத்துக்கள் குழந்தைகளின் உடலில் உள்ள நீர்ச்சத்தினை தக்க வைப்பதற்கு உதவுகின்றது.
Kesar Pista Milk:
- பால்- ஒரு கப் (காய்ச்சி ஆற வைத்தது)
- பிஸ்தா- 8-10
- தேன்-1 டீ ஸ்பூன்
- ஏலக்காய்-1
- குங்குமப்பூ இதழ்கள்
Kesar Pista Milk
செய்முறை
1.பிஸ்தாவினை சுடு தண்ணீரில் 15 முதல் 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின்பு பிஸ்தாவின் மேல் தோலினை நீக்கவும்.
2.குங்குமப்பூ இதழ்கள் இம்மியளவு மட்டும் எடுத்து ஒரு டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் ஊற வைக்கவும்.
3.மிக்ஸி ஜாரில் பால், தோல் நீக்கிய பிஸ்தா, ஏலக்காய், தேன், மற்றும் குங்குமப்பூ பால் சேர்த்து நன்கு அரைக்கவும்.
4.டம்ளரில் ஊற்றி மேலே நறுக்கிய பிஸ்தா தூவி பரிமாறவும்.
5.உங்கள் குழந்தைகளுக்கான சுவையான கேசர் பாதாம் பால் ரெடி.
பள்ளி முடிந்து குழந்தைகள் வீட்டிற்கு வந்ததும் ஒரு மணி நேர இடைவெளியில் மீண்டும் விளையாடுவதற்கும் மற்றும் ஹோம் ஒர்க் செய்வதற்கும் தேவையான எனர்ஜியை இந்த பிஸ்தாபால் அளிக்கும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Kesar Pista Milk:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
எத்தனை வயதிலிருந்து இந்த பிஸ்தாபாலினை கொடுக்கலாம்?
பால் பொதுவாக ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு மட்டும் ஏற்றது என்பதால் இதனை ஒரு வயதிற்கு மேல் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
பாலினை சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ கொடுக்கலாமா?
சீசனுக்கு ஏற்றார் போல் வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும், மழைக்காலத்தில் வெதுவெதுப்பாகவும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
தேனுக்கு பதிலாக நாட்டு சக்கரை போன்றவை சேர்த்து கொடுக்கலாமா?
தாராளமாக உங்கள் குழந்தைகளுக்கு எந்த சுவை பிடிக்குமோ அதை கொடுக்கலாம்.
Leave a Reply