throat pain home remedy : குளிர்காலம் வந்தாலே குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகளும் சேர்ந்தே வந்துவிடும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அதில் ஒன்றுதான் சளிக்கு முன்னால் வரும் தொண்டை கரகரப்பு. பெரியவர்களுக்கு தொண்டை கரகரப்பு வந்தால் தொண்டை பகுதியில் அரிப்பு போன்று நமச்சல் ஏற்படும். மேலும் சிலருக்கு எச்சில் விழுங்க முடியாத அளவிற்கு வலி ஏற்படும்.
அதே போன்று தான் குழந்தைகளுக்கும். தொண்டை கரகரப்பு வந்தால் அவர்களால் தாங்க முடியாது. எனவே ஆரம்ப கட்டத்தில் லேசாக இருக்கும் பொழுது வீட்டில் சிறு சிறு வைத்தியங்கள் செய்வதன் மூலம் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரலாம்.
throat pain home remedy :

பொதுவாக தொண்டை கரகரப்பு என்பது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளால் ஏற்படும் பிரச்சனை தான் என்றாலும் சில நேரம் அலர்ஜிகளும் காரணமாக இருக்கலாம்.
குளிரான சூழ்நிலை இருந்தாலும் சில நேரம் தொண்டை கரகரப்பு ஏற்படும். இது மட்டுமல்லாமல் சில சமயம் காரம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் பொழுதும் வயிற்றில் அமிலத்தன்மை அதிகரித்தால் தொண்டை கரகரப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.
எனவே குழந்தைகளுக்கு என்ன காரணத்திற்காக தொண்டை கரகரப்பு ஏற்பட்டுள்ளது என்பதை சரி செய்து ஆரம்ப கட்டத்திலேயே வீட்டு வைத்தியத்தை கொடுத்தால் பலன் பெறலாம்.
எனினும் காய்ச்சல் அதிகமாக இருந்தாலும் கிருமி தொற்று கட்டுக்கடங்காமல் இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். குழந்தைகளுக்கு வீட்டிலேயே செய்யக்கூடிய எளிதான வீட்டு வைத்தியங்களை பார்க்கலாம்:
throat pain home remedy :
தேன்
தேனில் அதிகமாக பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் தொண்டை கரகரப்புக்கு இது ஒரு நல்ல வைத்தியமாகும்.
தேனை சிறிதளவு சுடு தண்ணீரில் சேர்த்து குழந்தைகளுக்கு ஒரு ஸ்பூன் கொடுக்கலாம். எலுமிச்சை சாற்றுடன் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் தேன் சேர்த்து கொடுக்க நல்ல பலன் கிடைக்கும். ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு தேன் கொடுக்கக் கூடாது என்பதால் இதனை முயற்சி செய்யக் கூடாது.
உப்பு தண்ணீர் கொப்பளிப்பு
தொண்டை கரகரப்புக்கு ஆரம்ப கால முதலே பயன்படுத்தக்கூடிய மிகவும் எளிதான வீட்டு வைத்தியம் இதுவாகும். வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு கலந்து குழந்தைகளை கொப்பளிக்க வைத்து அதனை துப்ப வைக்கும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.
மருத்துவரிடம் சென்றால் கூட மருந்துகள் கொடுப்பதுடன் இந்த வீட்டு வைத்தியத்தையும் சேர்த்து செய்யச் சொல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இஞ்சி
தொண்டை கரகரப்புக்கு நாம் காலங்காலமாக பயன்படுத்தி வரும் வீட்டு வைத்தியங்களில் இஞ்சியும் ஒன்று. பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் நோய் எதிர்ப்பு பண்புகள் அதிகமாக இருப்பதால் இது கிருமிகளுக்கு எதிராக போராடும் தன்மை உடையது.
குழந்தைகளுக்கு இஞ்சியை பாலுடன் கலந்து கொடுக்கலாம் அல்லது இஞ்சி சாற்றினை தேனுடன் கலந்து கொடுக்கலாம்.
ஓமம்
ஓமத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகமாக இருப்பதால் நோய் கிருமிகளுக்கு எதிராக போராட இது உதவுகின்றது. நெஞ்சு சளி இருக்கும் பொழுது ஓமத்தை ஒத்தடம் ஆக கொடுக்கலாம் என்பதை நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கின்றோம்.
தொண்டை கரகரப்பு இருக்கும் பொழுது ஓமத்தை தண்ணீருடன் சேர்ந்து கொதிக்க வைத்து அந்த தண்ணீரை வெதுவெதுப்பாக அருந்த கொடுக்கலாம்.
ஹோம் மேட் இருமல் மிட்டாய்
கடைகளில் விற்கும் விதவிதமான மிட்டாய்களை வாங்கி கொடுப்பதை காட்டிலும் வீட்டிலேயே இஞ்சி எலுமிச்சை தேன் ஏலக்காய் மற்றும் கிராம்பு ஆகியவற்றை சேர்த்து மிட்டாயாக செய்து கொடுக்கலாம்.
இதை எப்படி செய்ய வேண்டும் என்ற விரிவான பதிவிற்கு இங்கே நீங்கள் கிளிக் செய்தால் உங்களுக்கு தெளிவான தகவல் கிடைக்கும்.
கடைகளில் விற்கப்படும் சீனி கலந்திருப்பதால் இவ்வாறு செய்து கொடுப்பது நன்கு பலன் கொடுக்கும்.
சிக்கன் சூப்
குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் இருக்கும் போது சிக்கன் சூப் நல்ல பலன் கொடுக்கும். சிக்கனுடன் இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி போன்றவை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அதனை சூப்பராக கொடுக்க நன்கு பலன் கிடைக்கும்.
புதினா இலைகள்
புதினா இலைகளில் இயற்கையாகவே மென்தால் எனப்படும் வேதிப்பொருள் கலந்துள்ளதால் இது தொண்டை கரகரப்பை குணமாக்கும் தன்மையுடையது.
புதினா இலைகளை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக குழந்தைகளுக்கு கொடுக்க நல்ல பலன் கிடைக்கும்.
ஈரப்பத மூட்டி
குளிர்காலங்களில் அறைகளில் இருக்கும் காற்றானது உலர்வாக இருப்பதால் தொண்டையை கரகரப்பாக அது எளிதாக இருக்கும். சில நேரம் குழந்தைகள் ஏசியில் உறங்கினாலும் அவ்வாறு இருக்கும்.
இதை போக்குவதற்கு ஈரப்பத மூட்டியை அறையில் வைக்க நல்ல பலன் கிடைக்கும்.
மேற்கண்ட வீட்டு வைத்தியங்களை நான் கூறினாலும் கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவர் அணிய வேண்டும்:
- வலி அதிகமாக உள்ளது மற்றும் தொடர்ச்சியாக உள்ளது
- ஒரு வாரத்திற்கு மேலாக வழி இருந்தால்
- மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால்
- எச்சில் விழுங்குவது கடினமாக இருந்தால்
- காய்ச்சல்
- தொண்டையில் வீக்கம் இருந்தால்
- சளியுடன் ரத்தம் வந்தால்
வருமுன் காப்பது நலம் என்ற பழமொழிக்கு இணங்க ஆரம்ப காலத்தில் இந்த வீட்டு வைத்தியங்களை வைத்துக் கொள்ளுங்கள். தொந்தரவு அதிகரித்தால் கண்டிப்பாக குழந்தைகள் நல மருத்துவர் அணுகி பலன் பெறுங்கள்.
throat pain home remedy :
throat pain home remedy :
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply