sweet potato recipe in tamil: இப்பொழுதெல்லாம் பேக்கரிகளில் விற்கப்படும் விதவிதமான ஸ்வீட் வகைகள் மற்றும் கேக் வகைகள் தான் குழந்தைகளை கவருகின்றன. அவற்றையெல்லாம் சாப்பிடுவது உடல் நலனுக்கு நல்லதல்ல என்று நாம் எடுத்துக் கூறினாலும் நம் குட்டிகள் கேட்கவா போகின்றனர்?
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
மாறாக நாம் எதை வேண்டாம் என்று சொல்கிறோமோ அதை தான் முதலில் கேட்பார்கள்.
அப்படி என்றால் அவர்களுக்கு ஏற்றவாறு அவர்கள் வழியில் நாம் சென்றால் தானே அவர்களது உடல் நலனை பாதுகாக்க முடியும்.
அதனால் தான் பேக்கரி ஸ்டைலிலேயே ஆரோக்கியமான குக்கீஸ் எப்படி செய்வது என்பதற்கான ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. என்று நாம் பார்க்க போகும் ரெசிபி சர்க்கரை வள்ளி கிழங்கு குக்கீஸ்.
சர்க்கரைவள்ளி கிழங்கினை அவித்து சாப்பிடலாம் என்பது நம் அனைவருக்கும் தெரியும் ஆனால் அதனை வைத்து பிஸ்கட் செய்யலாம் என்று சொன்னால் வித்தியாசமாக உள்ளதல்லவா?
sweet potato recipe in tamil:

பள்ளி முடித்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஏற்ற வித்தியாசமான ஸ்னாக்ஸ் ஆக மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான அத்தனை நன்மைகளையும் கொண்டது சர்க்கரைவள்ளிக்கிழங்கு. எனவே இதனை வைத்து பிஸ்கட் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்பதற்கு முன்னால் சர்க்கரைவள்ளி கிழங்கில் அடங்கியுள்ள நன்மைகளை பார்க்கலாம்:
- சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மட்டுமல்லாமல் ஆரோக்கியமான பார்வை திறனுக்கும் உதவுகின்றது.
- இதில் நார் சத்துக்கள் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு உணவு எளிதில் செரிமானமாக செய்கின்றது.
- குழந்தைகள் சுறுசுறுப்புடன் விளையாடுவதற்கு தேவையான எனர்ஜியை தருகின்றது.
- ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட்கள் அதிகம் உள்ளதால் செல்கள் சிதைவடையாமல் தடுக்க வல்லது.
- இரும்பு சத்து மற்றும் மெக்னீசியம் அதிகம் உள்ளதால் ஆரோக்கியமான எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- இயற்கையாகவே இதில் நிறைந்துள்ள இனிப்பு சுவை நிறைந்துள்ளதால் மற்ற இனிப்புகளுக்கு தேவை இருக்காது.
sweet potato recipe in tamil:
- வேகவைத்து மசித்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு- அரை கப்
- கோதுமை மாவு-1 கப்
- நாட்டு சர்க்கரை அல்லது டேட்ஸ் பவுடர்- கால் கப்
- நெய் அல்லது தேங்காய் எண்ணெய்- 2 டேபிள்ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- கால் டீஸ்பூன்.
sweet potato recipe in tamil:
செய்முறை
- சக்கரைவள்ளி கிழங்கினை நன்கு மசிக்கும் அளவிற்கு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு பவுலில் மைதா, நாட்டு சர்க்கரை அல்லது டேட்ஸ் பவுடர் மற்றும் ஏலக்காய் தூள் எடுத்துக் கொள்ளவும்.
- அதனுடன் மசித்த சக்கரவல்லி கிழங்கு மற்றும் நெய் சேர்த்துக் கொள்ளவும். நன்கு மாவு போன்று பிசைந்து கொள்ளவும்.
- தேவைப்பட்டால் ஒன்று முதல் இரண்டு டீஸ்பூன் வரை தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
- சிறு சிறு உருண்டைகளாக பிடித்து குக்கீஸ் வடிவத்திற்கு தட்டிக் கொள்ளவும்.
- மைக்ரோ ஓவனை ப்ரீஹீட் செய்து அதில் 170 டிகிரி செல்சியஸ் அளவிற்கு 15 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் மாவினை வைக்கவும்.
- மொரு மொருப்பாகும் வரை காத்திருக்கவும்.
- ஆறவிடவும்.
மற்ற பிஸ்கட்டுகளை விட சர்க்கரைவள்ளி கிழங்கு பிஸ்கட்டில் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்றதாகும்.
மேலும் இந்த பிஸ்கட்டுகளுக்கு தனியாக எந்த இனிப்பும் சேர்க்கவில்லை என்பதால் இயற்கையான இனிப்பு சுவையில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பிஸ்கட்களை கொடுக்க இது ஏற்ற ரெசிப்பியாக இருக்கும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
sweet potato recipe in tamil
sweet potato recipe in tamil
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. இந்த குக்கீஸ்களை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு இதனை தாராளமாக கொடுக்கலாம்.
2.இதில் தேவைப்பட்டால் இனிப்பு சுவையினை சேர்த்துக் கொள்ளலாமா?
தேவைப்பட்டால் குழந்தைகளுக்கு ஆனா ஆரோக்கியமான இனிப்பு சுவையான டேட்ஸ் பவுடர் மற்றும் நாட்டு சக்கரை போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
3. இதில் பேக்கிங் சோடா சேர்க்கப்பட்டுள்ளதா?
இதில் பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா போன்றவை சேர்க்கப்படவில்லை என்பதால் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான குக்கீஸாக இவை இருக்கும்
4. எவ்வளவு நாட்கள் வரை இதனை வைத்து இருக்கலாம்?
காற்று புகார் டப்பாவில் 5 நாட்கள் வரை அடைத்து வைத்திருக்கலாம். இரண்டு வாரங்கள் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம்.
சக்கரை வள்ளி கிழங்கு குக்கீஸ்
Ingredients
- வேகவைத்து மசித்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு- அரை கப்
- கோதுமை மாவு-1 கப்
- நாட்டு சர்க்கரை அல்லது டேட்ஸ் பவுடர்- கால் கப்
- நெய் அல்லது தேங்காய் எண்ணெய்- 2 டேபிள்ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- கால் டீஸ்பூன்
Leave a Reply