Badam pisin laddu : லட்டுவை பிடிக்காத குழந்தைகளே இருக்காது என்று சொல்லலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பு என்றால் அது லட்டு தான்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
லட்டு என்றாலே கடைகள் மற்றும் பேக்கரிகளில் வாங்கி சாப்பிடுவது தான் வழக்கம். இன்று நாம் பார்க்க போகும் லட்டு ரெசிபி சற்றே வித்தியாசமான இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிராத லட்டுவாக இருக்கும்.
ருசியிலும் அதே சமயம் ஆரோக்கியத்திலும் சற்றும் குறைவில்லாத பாதாம் பிசின் லட்டுவை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். பிசினை வைத்து எப்படி லட்டு செய்வது என்று தானே நீங்கள் யோசிக்கின்றீர்கள்?
இதில் பாதாம் பிசின் மட்டுமல்லாமல் பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா மற்றும் துருவியை தேங்காய் போன்றவை சேர்த்துள்ளதால் குழந்தைகள் விரும்பும் அதே சுவையுடன் அதே சமயம் அனைத்து விதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாய் இந்த லட்டு இருக்கும்.
Badam pisin laddu:
Badam pisin laddu

இந்த லட்டுவை பார்ப்பதற்கு முன்னால் பாதாம் லட்டில் நிறைந்துள்ள நன்மைகளை பார்க்கலாம்:
- பாதாம் பிசினில் இயற்கையாகவே எனர்ஜி நிறைந்துள்ளதால் குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான ஆற்றலை இது அளிக்கின்றது.
- இதில் கால்சியம் மற்றும் புரோட்டின் நிறைந்துள்ளதால் சிறு வயது முதல் குழந்தைகளின் எலும்புகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு இது உதவுகின்றது.
- பாதாம் பிசினில் இயற்கையாகவே நிறைந்திருக்கும் மூலப்பொருட்கள் உடலை குளிர்ச்சியாக வைப்பதோடு மட்டுமல்லாமல் செரிமானம் நன்கு ஆவதற்கும் உதவுகின்றது.
- மேலும் இதில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கின்றது. குழந்தைகள் அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மேன்மேடைவதற்கு இதில் உள்ள மூலப்பொருட்கள் உதவியாக இருக்கும்.
- இந்த லட்டினை கோடைகாலத்தில் செய்து தரும்பொழுது பாதாம் பிசின் இயற்கையாகவே இருக்கும் நீர் சத்துக்கள் குழந்தைகளின் உடலில் நீர் சத்துக்கள் குறையாமல் பார்த்துக் கொள்ளும்.
- மேலும் இந்த உலர் பழங்களில் உள்ள நல்ல கொழுப்புகள் குழந்தைகளின் உடல் எடை ஆரோக்கியமாக அதிகரிப்பதற்கு உதவுகின்றது.
Badam pisin laddu
- பாதாம் பிசின்- அரை கப்
- நெய்- அரை கப்
- நாட்டு சக்கரை- ஒரு கப்
- பாதாம்- கால் கப்
- முந்திரி- கால் கப்
- வால்நட் -கால் கப்
- பிஸ்தா-2 டேபிள் ஸ்பூன்
- துருவிய தேங்காய் -கால் கப்
- ஏலக்காய் தூள்- அரை டீ.ஸ்பூன்
Badam pisin laddu
செய்முறை
- இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் கனமான பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கவும்.
- பாதாம் பிசினை அதில் போட்டு லேசான தீயில் சிறிது மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்.
- அடுப்பில் இருந்து எடுத்து ஆறியவுடன் நன்கு நுணுக்கவும்.
- அதே பாத்திரத்தில் மேலே குறிப்பிட்டுள்ள பாதாம், முந்திரி, வால்நட் மற்றும் பிஸ்தா ஆகியவற்றை நன்கு நறுக்கி பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- அவற்றை ஒரு ஓரமாக ஆறவிடவும்.
- துருவிய தேங்காயை லேசாக நறுமணம் வரும் வரை வறுக்கவும்
- மற்றொரு கடாயில் நாட்டு சர்க்கரையை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைக்கவும்.
- சிறிது நுரை வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
- பாகினை வடிகட்டி அதில் வருத்தனர் பாதாம் பிசின் தேங்காய் மற்றும் ஏலக்காய் தூள் ஆகிவிட்டாய் சேர்க்கவும்.
- எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
- வெதுவெதுப்பாக இருக்கும் பொழுதே கையில் நெய் தடவி உருண்டை உருண்டையாக பிடிக்கவும்.
மாலை நேரம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு கடைகளில் விற்கும் கொடுப்பதை விட இப்படி வீட்டிலேயே செய்த நட்ஸ் கலந்த ஸ்னாக்ஸ் கொடுத்தால் ஆரோக்கியமாக இருக்கும்.
அது மட்டுமல்லாமல் பண்டிகை காலங்களில் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு சிறந்த ஸ்நாக்ஸ் ஆகவும் இது இருக்கும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பாதாம் பிசின் லட்டில் வேறு ஏதேனும் ஆரோக்கியமான பொருட்கள் சேர்க்கலாமா?
இதில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான நட்ஸ்கள் சேர்க்கப்பட்டுள்ளது. நீங்கள் விருப்பப்பட்டால் ஆரோக்கியமான விதைகளான பூசணி விதைகள், எள்ளு, ஆளி விதைகள் ஆகியவற்றை வறுத்து இதனுடன் சேர்த்தும் கொடுக்கலாம்.
ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு இதனை கொடுக்கலாமா?
ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்றால் நட்ஸ் இல்லாமல் நன்கு மசித்து கொடுக்கலாம்.
நாட்டு சக்கரைக்கு பதிலாக பனைவெல்லம் சேர்த்துக் கொள்ளலாமா?
தாராளமாக நீங்கள் விருப்பப்பட்ட சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலாம்.











Leave a Reply