Oats Paniyaram: வீடுகளில் நாம் செய்யும் வழக்கமான ஸ்நாக்ஸ்களை சாப்பிட்டு பழகிய குழந்தைகளுக்கு இந்த ஓட்ஸ் கீரை பணியாரம் சற்று வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கலாம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
பணியாரம் என்றாலே நாம் வழக்கமாக அரிசி மாவு அல்லது கோதுமை மாவில் தான் செய்து பழக்கம். அதிலும் விதவிதமாக கார பணியாரம் மற்றும் இனிப்பு பணியாரம் என்று வீட்டில் செய்து சாப்பிட்டு இருப்போம்.
ஆனால் இன்று நாம் பார்க்க போகும் ரெசிபி ஆனது இவை எல்லாவற்றிலும் இருந்து முற்றிலும் வித்தியாசமான ஓட்ஸ் கீரை பணியாரம்.
இவற்றை செய்வதற்கு அரிசி மாவு மற்றும் கோதுமை மாவு போன்ற எதையும் கலக்கி புளிக்க வைக்க தேவையில்லை. மாறாக அப்பொழுதே எளிதாக செய்து முடிக்கலாம்.
மேலும் ஓட்ஸ் உடலுக்கு மிகவும் நன்மை சேர்ப்பது என்பதால் அதிலுள்ள நார் சத்துக்கள் குழந்தைகளுக்கு நன்மை அளிக்கும். அது மட்டுமல்லாமல் இதில் கீரையின் நற்குணங்களும் சேர்த்து இருப்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் அளிக்கும் ரெசிபியாக இது இருக்கும்.
Oats Paniyaram
இந்த ஆரோக்கியமான ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் இதில் அடங்கி இருக்கும் நன்மைகளை பார்க்கலாம்:

- ஓட்சில் நார்ச்சத்துக்கள் அதிகம் என்பதால் இது உணவினை எளிதில் செரிமானமாக செய்து குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது.
- இதில் நிறைந்திருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் குழந்தைகளுக்கு தேவையான ஆற்றலை மெதுவாக அளித்து அவர்கள் நாள் முழுவதும் விளையாடுவதற்கு தேவையான சக்தியை அளிக்கின்றது.
- ஓட்சில் முக்கியமான சத்துக்களான இரும்புச்சத்து, மெக்னீசியம், ஜிங்க் மற்றும் வைட்டமின் பி போன்றவை நிறைந்துள்ளன. இவை குழந்தைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன.
- ஒட்ஸ் தானியத்தை சிறிதளவு சாப்பிட்டாலே குழந்தைகளுக்கு நீண்ட நேரம் வயிறு நிரம்பிய திருப்தி ஏற்படும். விரைவில் பசி எடுக்காது. எனவே குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது.
- ஓட்ஸ் மற்றும் கீரை ஆகிய இரண்டிலும் ஆன்டி ஆக்சிடென்ட் அதிகம் என்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.
Oats Paniyaram
- இன்ஸ்டன்ட் ஓட்ஸ்- 1 கப்
- பொட்டுக்கடலை -அரை கப்
- அரிசி மாவு -கால் கப்
- தயிர்- கால் கப்
- சீரகம்- 1 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் -காரத்திற்கு ஏற்றவாறு
- கீரை- ஒரு கைப்பிடி
- கொத்தமல்லி இலைகள்- ஒரு கைப்பிடி
- இஞ்சி- சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு (ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு மட்டும்)
- தண்ணீர் -தேவையான அளவு
சேர்க்க வேண்டிய காய்கறிகள்
- வெங்காயம்-1 (நன்றாக நறுக்கியது)
- ஸ்வீட் கார்ன்- கால் கப்
- துருவிய கேரட்-கால் கப்
- பச்சை பட்டாணி-கால் கப்
தாளிப்பதற்கு
- நெய்- 1 டேபிள் ஸ்பூன்
- கடுகு- அரை டீ.ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு- 1 டீ.ஸ்பூன்
- கடலைப்பருப்பு- 1 டீ.ஸ்பூன்
Oats Paniyaram
செய்முறை
- ஓட்ஸ், பொட்டுக்கடலை, அரிசி மாவு, தயிர், சீரகம், கொத்தமல்லி இலைகள், இஞ்சி, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு வரும் அளவிற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- நறுக்கிய வெங்காயம், ஸ்வீட் கார்ன், பச்சை பட்டாணி மற்றும் கேரட் ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும். காய்கறிகளை தனியாக வேக வைக்க தேவையில்லை. பணியாரம் வேகும் பொழுதே காய்கறிகளும் சேர்த்து வெந்துவிடும். எனவே, இதை தவிர உங்களுக்கு விருப்பமான காய்கறிகளும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.
- கடாயில் நெய்யை ஊற்றி சூடாக்கி அதில் கடுகு, உளுந்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு போன்றவற்றை சேர்த்து பொன்னிறம் வரும் அளவிற்கு தாளிக்கவும். இதனை மாவில் ஊற்றி கிளறவும்.
- பணியார கல்லை சூடாக்கி அதில் நெய்யை தடவவும். பின்பு குழியில் மாவை உற்றவும்.
- பொன்னிறமாகும் வரை காத்திருந்து திருப்பி போடவும்.
- குழந்தைகளுக்கு காலை உணவாகவோ அல்லது ஸ்னாக்ஸாகவோ பரிமாறலாம்.

இவற்றில் ஓட்சின் நற்குணங்கள் மட்டுமல்லாமல் கீரை மற்றும் காய்கறிகள் போன்றவையும் சேர்ந்துள்ளதால் குழந்தைகளுக்கு காலை உணவாக கொடுப்பதற்கு மிகவும் ஏற்ற ஆரோக்கியமான ரெசிபி ஆகும்.
மேலும் உங்கள் குழந்தைகளின் ருசிக்கு ஏற்றவாறு காய்கறிகளை சேர்த்து அவர்களுக்கு விருப்பமான ஸ்னாக்ஸாக செய்து கொடுக்கலாம்.
இதனுடன் தொட்டுக் கொள்வதற்கு கிரேவி போன்றவற்றை செய்து கொடுத்தால் லஞ்ச் பாக்ஸ இருக்கும் நீங்கள் வித்தியாசமான ரெசிபியாக கொடுத்து அனுப்பலாம்.
Oats Paniyaram
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
குழந்தைகளுக்கு எத்தனை மாதத்தில் இருந்து இந்த ஒட்ஸ் பணியாரத்தை கொடுக்கலாம்?
குழந்தைகளுக்கு உப்பு போன்றவை சேர்க்கவில்லை எனில் 8 மாதத்திற்கு மேலே இந்த பணியாரத்தை கொடுக்கலாம்.
தயிர் சேர்க்காமல் செய்யலாமா?
தயிர் சேர்க்கும் பொழுது பணியாரம் நன்கு மென்மையாக உப்பி வரும். தயிர் சேர்க்காமலும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து செய்யலாம்.
வேறு ஏதேனும் காய்கறிகள் சேர்க்கலாமா?
இதில் துருவிய பிட்ரூட், பீன்ஸ் போன்ற வேறு ஏதேனும் காய்கறிகளையும் துருவி நீங்கள் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்



![குழந்தைகளுக்கான ஓட்ஸ் கஞ்சி [oats kanji recipe] feature](https://tamilcdn.mylittlemoppet.com/wp-content/uploads/2023/06/28131545/feature-1-150x150.jpg)







Leave a Reply