Oats Adai Dosai:குழந்தைகளுக்கு சட்டுன்னு ஆரோக்கியமான பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி செய்ய வேண்டுமென்றால் இந்த ஆரோக்கியமான ஓட்ஸ் அடையை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். வழக்கமான தோசை சாப்பிட்டு பழகிய குழந்தைகளுக்கு இவ்வாறாக வித்தியாசமாக செய்து கொடுத்தால் குழந்தைகள் கட்டாயமாக விரும்புவார்கள்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
தோசையாக மட்டுமல்லாமல் மாலை நேர ஸ்நாக்ஸ் போன்று இதனுடன் தக்காளி சாஸ் மற்றும் தயிர் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.
Oats Adai Dosai:
இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் ஓட்ஸ் தானியத்தில் அடங்கியிருக்கும் நன்மைகளை பார்க்கலாம்:
Oats Adai Dosai

- ஓட்ஸில் நார்ச்சத்துக்கள் அதிகம் என்பதால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் தடுப்பதற்கு உதவுகின்றது.
- குறிப்பாக இதில் பீட்டா-குளுக்கன் எனப்படும் நார்சத்து காணப்படுவதால் இது செரிமானத்தை சீராக வைத்திருக்க உதவுகின்றது.
- ஓட்ஸில் நிறைந்திருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் உணவு மெதுவாக செரிமானம் ஆவதற்கு உதவுவதால் குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு தேவையான ஆற்றலை சீராக சிறிது சிறிதாக வழங்குவதற்கு வல்லது.
- மேலும் ஓட்ஸில் நிறைந்திருக்கும் மக்னீசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி போன்றவை குழந்தைகளின் ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
- இதில் காணப்படும் பீட்டா-குளுக்கன் எனப்படும் நார்ச்சத்து கொழுப்பு சத்தின் அளவை சரியாக பராமரிக்க உதவுகின்றது.
- ஓட்ஸில் நிறைந்திருக்கும் நார்ச்சத்தின் காரணமாக சிறிதளவு ஓட்ஸ் எடுத்துக் கொண்டாலே குழந்தைகளுக்கு வயிறு நிரம்பிய உணர்வினை தரும்.
- விதவிதமான ரெசிபிகளான கஞ்சி, அடை தோசை, பேன் கேக் போன்றவற்றை செய்வதற்கு ஏற்ற தானியம் ஓட்ஸ் ஆகும்.
தேவையான பொருட்கள்
- ஓட்ஸ் – 1 கப்
- கடலை மாவு – ½ கப்
- பொடியாக நறுக்கிய அல்லது துருவிய காய்கறிகள் – ½ கப்
- சீரகம் – ½ டீ.ஸ்பூன்
- மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
- நெய் அல்லது எண்ணெய் – 1–2 டீ.ஸ்பூன் (சமைக்க)
செய்முறை
- ஓட்ஸை மிக்ஸியில் போட்டு நன்றாக பொடியாக அல்லது சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் மாவு, கடலை மாவு, நறுக்கிய காய்கறிகள், சீரகம், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- தேவையான அளவு தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி, கட்டிகள் இல்லாமல் மென்மையான பதத்தில் ஊற்றக்கூடிய மாவாக கலக்கவும். இதை 5–10 நிமிடங்கள் ஊறவிடவும்.
- தோசைக்கல்லை சூடாக்கி, சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் தடவவும்.
- ஒரு கரண்டி மாவை தோசைக்கல்லில் ஊற்றி, சிறிய அளவில் சற்று தடிமனாக அடை போல் மெதுவாக பரப்பவும்.
- அடையின் ஓரங்களில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் அடிப்பகுதி
- பொன்னிறமாகவும் காய்கறிகள் நன்றாக வேகும் வரை சமைக்கவும்.
- பின்னர் கவனமாக திருப்பிப் போட்டு, மறுபுறமும் நன்றாக வேகும் வரை சமைக்கவும்.
- சூடாக தயிர், தேங்காய் சட்னி அல்லது காரம் குறைவான காய்கறி சட்னியுடன் பரிமாறவும்.
தினம் தினம் குழந்தைகளுக்கு காலையில் என்ன டிபன் செய்வது மற்றும் மாலை நேரத்தில் என்ன சிற்றுண்டி செய்வது என்று யோசிப்பதற்கு பதிலாக இந்த ஓட்ஸ் தோசையை நாம் எளிதாக செய்து முடித்து விடலாம்.
மேலும் இதில் ஓட்ஸ் மட்டுமல்லாமல் கடலைமாவு மற்றும் காய்கறிகளின் சத்துக்கள் நிறைந்து இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். நீங்கள் வீட்டிலேயே செய்த சட்னி, சாஸ் அல்லது தயிர் வைத்து பரிமாறும் பொழுது கூடுதல் சுவையுடன் குழந்தைகள் கேட்டு வாங்கி விரும்பி சாப்பிடுவார்கள்.
Oats Adai Dosai

உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1.ஓட்ஸ் அடை குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதா?
ஆம். இதில் ஓட்ஸ் கடலை மாவு மற்றும் காய்கறிகள் போன்றவை சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு தேவையான நார் சத்துக்கள், புரோட்டின், கார்போஹைட்ரேட் மற்றும் மற்ற ஊட்டச்சத்துக்கள் பெறுவதற்கு உதவுகின்றது.
2.வேறு ஏதேனும் காய்கறிகள் சேர்க்கலாமா?
உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான காய்கறிகளையும் மேலும் நறுக்கிய கேரட், கீரை, குடைமிளகாய் போன்றவை சேர்த்தும் செய்து கொடுக்கலாம்.
3.கடலை மாவு இல்லாமல் இதனை செய்யலாமா?
ஆம். செய்யலாம் ஆனால் கடலை மாவு இதில் சேர்க்கப்பட்டிருக்கும் உட்பொருள்கள் கெட்டியாக பிடித்துக் கொள்வதற்கு மட்டுமல்லாமல் சுவையை கூட்டுவதற்கும் கடலை மாவு உதவுகின்றது.
சிம்பிளான ஓட்ஸ் அடை தோசை
Ingredients
- ஓட்ஸ் – 1 கப்
- கடலை மாவு – ½ கப்
- பொடியாக நறுக்கிய அல்லது துருவிய காய்கறிகள் – ½ கப்
- சீரகம் – ½ டீ.ஸ்பூன்
- மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
- நெய் அல்லது எண்ணெய் – 1–2 டீ.ஸ்பூன் சமைக்க






![குழந்தைகளுக்கான ஓட்ஸ் கஞ்சி [oats kanji recipe] feature](https://tamilcdn.mylittlemoppet.com/wp-content/uploads/2023/06/28131545/feature-1-150x150.jpg)




Leave a Reply