Nalangu Maavu Tips for Babies: குழந்தைகளுக்கு என விதவிதமான சோப்புகளும், கிரீம்களும் போட்டி போட்டு உலா வரும் இக்காலத்தில் இவை யாவும் இல்லாமல் ஒரே ஒரு பொடியை உபயோகித்து நம் குழந்தைகளின் சருமத்தை நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக வைத்தனர்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
முக்கியமாக இதில் கடலை மாவு, பச்சைபயிறு மாவு மஞ்சள் போன்றவை இடம்பெற்றிருக்கும். ஆனால் சில வீடுகளுக்கு ஏற்ற வகையில் அவற்றுடன் சந்தன பவுடர், வெட்டிவேர், ரோஜா இதழ்கள் மற்றும் சில மூலிகை பொருட்களும் சேர்த்து தயாரிப்பவர்கள் உண்டு.
Nalangu Maavu Tips for Babies:
இவற்றின் பெயரும் நம் தமிழ்நாட்டில் நலங்கு மாவு என்று அழைக்கப்படுவது போன்று வடமாநிலங்களில் உப்தான் பவுடர் என்று அழைக்கப்படுகிறது.
எந்த விதமான கெமிக்கலும் சேர்க்கப்படாமல் இவை வீட்டிலேயே தயாரிக்கப்பட்டாலும் இதில் சில மூலிகை பொருட்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் சேர்க்கப்படுவதால் இவற்றினை குழந்தைகளுக்கு உபயோகிக்கலாமா ?என்ற சந்தேகம் பெரும்பாலான பெற்றோர்களுக்கு ஏற்படுகிறது. எனவே, அதற்கான தெளிவான விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் சருமமானது நம் சருமத்தை விட பல மடங்கு வெண்மையாக இருப்பதால் எதை தடவினாலும் அதை சீக்கிரம் தோல் ஆனது கிரகித்துக் கொள்ளும். அதனால் இயற்கையான மூலிகை பொருள்களாக இருந்தாலும் அவை எல்லாமே எல்லா குழந்தைகளுக்கும் ஏற்றுக்கொள்ளும் என்று நாம் கூறி விட முடியாது.
சில நேரங்களில் சில மூலிகை பொருட்களும் குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். எனவே இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு குழந்தைகளுக்கு உபயோகிக்கும் பொருளில் கவனம் செலுத்த வேண்டும்.
அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (AAP) மற்றும் இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (IAP) ஆகிய இரண்டும், குழந்தைகளின் சருமத்தில் எந்த பொருளாக இருந்தாலும் அவற்றை அழுத்தி தேய்க்கும் பொழுது அது குழந்தைகளின் தோளில் இயற்கையாகவே அமைந்திருக்கும் வெர்னிக்ஸ் கேசியோசா (Vernix Caseosa) எனப்படும் படலத்தை பாதிக்கும் என்று கூறுகின்றது.
எனவே குழந்தைகளுக்கு நலங்கு மாவினை பயன்படுத்தும் போது அழுத்தி கடுமையாக தேய்ப்பதை காட்டிலும் மிருதுவாக தேய்த்து எடுக்க வேண்டும் என்று கூறுகின்றது. மேலும் குழந்தைகளின் சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தாத மூலிகை பொருள்களை தேர்ந்தெடுத்து குழந்தைகளுக்கு வீட்டிலேயே பொடி செய்து கொடுப்பது சிறந்தது என்று கூறுகின்றது.
Nalangu Maavu Tips for Babies:
குழந்தைகளுக்கு நலங்கு மாவில் பயன்படுத்தும் சில பாதுகாப்பான பொருட்களை பற்றியும் அவற்றின் நன்மைகளைப் பற்றியும் பார்க்கலாம்:
Nalangu Maavu Tips for Babies:

கடலை மாவு:
நம் பாரம்பரியமாக பயன்படுத்தும் நலங்குமாவில் இந்த மாவு கட்டாயமாக இடம் பெற்று இருக்கும். சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய் படலங்களை அகற்றாமல் மென்மையாக சுத்தம் செய்ய உதவுகின்றது.
மஞ்சள்:
சருமத்தை பாதுகாக்க அந்த காலம் முதல் இந்த காலம் வரையிலும் நம் வீட்டுப் பெண்களால் தவறாமல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகின்றது.
சந்தனம்:
சருமத்தின் அழகை பராமரிப்பதில் சந்தனத்திற்கு முக்கிய இடம் உண்டு. இது சருமத்தை மென்மையாக வைத்திருப்பதோடு உடலுக்கு நல்ல நறுமணத்தையும் தருகின்றது.
பால் மற்றும் தயிர்:
இதை நலங்குமாவில் கலந்து தேய்க்கும் பொழுது இதில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தினை சுத்தம் செய்ய உதவுகின்றது.
கவனத்தில் கொள்ள வேண்டியது:
நலங்குமாவின் நோக்கம் சருமத்தில் நன்றாக அழுத்தி தேய்ப்பது அல்ல என்பதை உணர வேண்டும். சோப்பிற்கு பதிலாக உபயோகித்து சருமத்தில் உள்ள அழுக்கை வெளியேற்றுவதற்காகவும் மற்றும் சருமத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவும் மட்டுமே இதனை உபயோகிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு மட்டும் இதனை உபயோகித்தால் போதுமானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒருவேளை ஆறு மாதத்திற்கு உள்ளே உள்ள குழந்தைகளுக்கு உபயோகிக்கின்றீர்கள் என்றால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்ப்படுகின்றதா என்பதை கவனித்து ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வைத்திருந்து குளிப்பாட்டி விடலாம்.
பாரம்பரியமாக நாம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு நன்றாக உடம்பு முழுவதும் நல்லெண்ணையை தடவி மசாஜ் செய்தவுடன் நலங்கு மாவினை குழந்தைகளுக்கு பூசி இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் மட்டும் வைத்திருந்து வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டுவது வழக்கம். எனவே இவற்றை கடைபிடித்தாலே போதுமானது.
Nalangu Maavu Tips for Babies
ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

- முதலில் ஒன்று முதல் இரண்டு டீஸ்பூன் நலங்குமாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் பால் தயிர் அல்லது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று கலக்கவும்.
- குழந்தைகளின் உடலில் மெதுவாக தேய்க்கவும். மிகவும் அழுத்தி தேய்க்க வேண்டாம்.
- வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே வைத்திருந்து பின்பு வெதுவெதுப்பான நீரில் குழந்தைகளை குளிப்பாட்டவும்.
- குழந்தைகளுக்கு முதல் முதலாக பயன்படுத்துகின்றீர்கள் என்றால் பேட்ச் டெஸ்ட் எடுத்துக் கொள்ளவும் அதாவது குழந்தைகளின் காதின் பின் பகுதியில் சிறிதளவு மாவிலை தடவி குழந்தைகளுக்கு ஏதேனும் அலர்ஜி உள்ளதா என்பதை உறுதி செய்வதை பேட்ச் டெஸ்ட் எனப்படும்.
- குழந்தைகளுக்கு எக்ஸிமா மற்றும் மிகவும் வருந்த சருமம் இருந்தால் இதனை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
பாதுகாப்பாக பயன்படுத்த சில குறிப்புகள்

- நலங்கு மாவினை நீண்ட நேரம் சருமத்தில் தேய்க்காமல் விரைவாக குழந்தைகளை குளிப்பாட்ட வேண்டும்.
- குழந்தைகளுக்கு தடிப்பு போன்றவை ஏற்பட்டால் உடனடியாக உபயோகிப்பதை நிறுத்த வேண்டும்.
- ஒருவேளை நலங்கு மாவு கலக்கும் பாத்திரத்திலோ அல்லது கைகளிலோ கிருமிகள் இருந்தால் அவை கிருமி தொற்றை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.
- தினமும் பயன்படுத்துவதை தவிர்த்து வாரத்திற்கு இருமுறை பயன்படுத்துவது சிறந்தது.
- மிகவும் வறண்ட சருமமாக இருந்தால் உபயோகிக்க வேண்டாம்.
- பேட்ச் டெஸ்ட் எடுக்கும் பொழுது ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உபயோகிக்க வேண்டாம்.
முக்கிய குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பெற்றோர்களின் பொதுவான ஆலோசனைக்கு மட்டுமே. எனவே குழந்தைகளுக்கு நீங்கள் ஏதேனும் சரும பராமரிப்பு பொருட்களை உபயோகிக்க விரும்பினால் குழந்தைகள் நல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதன் பின் உபயோகிப்பது அவசியம்.
உங்களுக்கு வீட்டில் நலங்கு மாவு தயாரிக்க நேரமில்லை என்றால் நாங்களே இயற்கையான முறையில் தயாரித்த நலங்குமாவினை உங்களுக்கு வழங்குகின்றோம். அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Nalangu Maavu Tips for Babies
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பிறந்த குழந்தைகளுக்கு நலங்கு மாவு பாதுகாப்பானதா?
குழந்தைகள் நல மருத்துவர்களின் ஆலோசனைப்படி பிறந்த குழந்தைகளின் சருமம் மிருதுவாக இருக்கும் என்பதால் ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இதனை பயன்படுத்துவதே பாதுகாப்பானது.
எந்த வயதில் குழந்தைகளுக்கு நலங்கு மாவினை பயன்படுத்துவது சிறந்தது?
பொதுவாக ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு மருத்துவரின் ஆலோசனை பெற்று நலங்கு மாவினை பயன்படுத்தலாம். ஆனால், அதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் எடுக்க வேண்டியது அவசியம்.
நலங்கு மாவு தயாரிக்கும் பொழுது எந்தெந்த பொருட்களை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்?
குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் அதிக வாசனை மிக்க பொருட்கள், அதிக அளவு மஞ்சள் மற்றும் சந்தனம் போன்றவற்றை உபயோகிப்பதை தவிர்க்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.











Leave a Reply