kan mai for babies: குழந்தை பிறந்த உடனே அவர்களை அழகாய் குளிப்பாட்டி உடம்பெல்லாம் பவுடரால் நிரப்பி கண்மை வைக்க வேண்டும் என்பது நம் பாரம்பரியமாக பெரியோர்கள் கடைபிடிக்கும் நடைமுறைகளில் ஒன்றாகும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
கண்மை குழந்தைகளுக்கு அழகிற்காக வேண்டும் என்பதையும் தாண்டி கண் திருஷ்டி படாமல் இருக்க வைக்க வேண்டும் என்று நம்புபவர்கள் ஏராளம்.
நெற்றியில் கன்னத்தில் வைப்பதையும் தாண்டி குழந்தைகளின் கண்களைச் சுற்றி ஊசி விடும் பழக்கமும் சில ஊர்களில் உண்டு.
ஆனால் இப்பொழுது பெருகிவரும் விழிப்புணர்வின் காரணமாக குழந்தைகளுக்கு கண் மை வைக்கலாமா என்ற சந்தேகம் பெரும்பாலான அம்மாக்களுக்கு ஏற்படுகின்றது.
இந்த பழக்கம் எப்பொழுது ஆரம்பமானது?

குழந்தைகளுக்கு கண் மை வைக்கும் பழக்கமானது தெற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகின்றது. விளக்கு கரியுடன் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து குழந்தைகளின் கண்களுக்கு மற்றும் கன்னங்களில் மையிடும் பழக்கம் பழங்காலங்களில் இருந்து வந்தது.
இதனை செய்யும் பொழுது குழந்தைகளின் கண்களுக்கு குளிர்ச்சி தரும், குழந்தைகளுக்கு அழகு தரும் மற்றும் கண்ணேறு படாது என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால் அப்பொழுது இயற்கையாக கிடைக்கும் கரியினை பயன்படுத்தி வந்ததால் எவ்வித பிரச்சனையும் குழந்தைகளுக்கு ஏற்படவில்லை.
ஆனால் இப்பொழுது கடைகளில் கிடைக்கும் நன்மைகளில் என்னென்ன சேர்க்கின்றார்கள் என்று நினைத்தாலே நமக்கு கண் மை டப்பாவை தொடவே மனம் வராது.
அதில் சேர்க்கப்படும் லெட் எனப்படும் கெமிக்கல் குழந்தைகளின் நரம்புகளுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகும்.
மேலும் இதில் செயற்கை நிறங்கள் சேர்க்கப்படுவதால் குழந்தைகளின் தோலுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். இதில் சேர்க்கப்படும் ஒரு வகையான வாசனை திரவியங்கள் குழந்தைகள் கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம்.
இப்பொழுது சொல்லுங்கள் குழந்தைகளுக்கு காஜல் போடலாமா என்ற கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிவிடலாம். குறிப்பாக 3 வயது வரை குழந்தைகளுக்கு கண் மை போடவே கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இந்திய குழந்தைகள் நல மருத்துவர் அமைப்பின் பரிந்துரையின்படி குழந்தைகளின் கண்களுக்கு எந்தவித அழகு சாதன பொருட்களையும் பயன்படுத்த வேண்டாம் என்று பெற்றோரை கேட்டுக்கொள்கிறது. குழந்தையின் கண்கள் என்பது மிகவும் மென்மையான பகுதி என்பதால் அதில் கண்மை போன்ற கெமிக்கல் கலந்த பொருட்களை உபயோகப்படுத்தும் போது கண்களில் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
அப்படி என்றால் அதற்கான மாற்று வழி என்ன என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் அப்படித்தானே?
பாதுகாப்பான மாற்று வழிகள்:
- நீங்கள் உங்கள் முன்னோர்களின் அறிவுரையின்படி குழந்தைகளுக்கு கண்மை இடவேண்டும் என்று விரும்பினால் முகத்தில் வைப்பதற்கு பதிலாக காதுக்கு பின்னால் சிறிய கருப்பு பொட்டு வைக்கலாம். அதே போன்று காலில் வைக்கலாம்.
- கண்மையிடுவதற்கு பதிலாக கருப்பு கயிறை கட்டிவிடலாம்.
- ஒருவேளை நீங்கள் கண்மை வைத்து ஆக வேண்டும் என்று நினைத்தால் வீட்டிலேயே தயாரித்த மையை குழந்தைகளுக்கு உபயோகப்படுத்தலாம். அதுவும் கண்களுக்கு உபயோகப்படுத்தாமல் இருப்பதே சிறந்தது.
குழந்தைகளுக்கு இயற்கையாகவே வீட்டிலேயே தயாரிக்கப்படும் கண்மை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்…
kan mai for babies:

உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் :
குழந்தைகளுக்கு எந்த வயதில் கண்மை பயன்படுத்தலாம்?
குழந்தைகள் நல மருத்துவரின் அறிவுரையின்படி குழந்தைகளுக்கு மூன்று வயது வரை கண்மை உபயோகிக்காமல் இருப்பதே சிறந்தது. உங்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் மூன்று வயதிற்கு மேல் நீங்கள் வேண்டுமென்றால் கண்மை உபயோகப்படுத்தலாம்.
கண்மை போட்டால் குழந்தைகள் கண்கள் பெரிதாகுமா?
கண்மை போட்டால் குழந்தைகளின் கண்கள் பெரிதாகும் என்பதற்கு எந்தவித அறிவியல் ஆதாரங்களும் இல்லை.
கண்மை போட்டால் கண்களுக்கு தொற்று ஏற்படுமா?
கண்மை போட்டு அடிக்கடி கண்களை தேய்ப்பதால் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு.
வீட்டிலேயே தயாரிக்கும் கண்மை பாதுகாப்பானதா?
வீட்டிலேயே தயாரிக்கும் கண்மை முழுமையான பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது. சுத்தமின்மை காரணமாக அதுவும் சில சமயம் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடும்.











Leave a Reply