kids reading habits in tamil: குழந்தைகளின் கைகளில் மொபைல் ஃபோனை கொடுத்துவிட்டு இப்பொழுது ஏன் கொடுத்தோம் என்று யோசித்து நொந்து கொள்ளும் பெற்றோர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகள் காலை எழுந்தது முதல் சாப்பிடும் வரை மொபைல் போன் கொடுத்தே பழகிய நாம் இன்று குழந்தைகளை அந்த பழக்கத்திலிருந்து மாற்றுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றோம்.
அதனால் தான் பெரும்பாலான மருத்துவர்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பும் கூட குழந்தைகளுக்கு வாசித்தலை கட்டாயம் ஆக்க வேண்டும் என்கின்ற எளிய வழிமுறையை முன்வைக்கின்றன.
குழந்தைகளுக்கு புத்தக வாசித்து காண்பிப்பது என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டும் தான் என்று நான் நினைத்திருப்போம். மேலும் சிலர் குழந்தைகளுக்கு இரவு நேரம் தூக்கம் வரவேண்டும் என்பதற்காக புத்தகம் வாசித்துக் காண்பிக்கும் பழக்கமும் உண்டு.
இவை எல்லாவற்றையும் தாண்டி குழந்தைகளுக்கு புத்தகத்தினை சத்தமாக வாசித்து காட்டும் பொழுது அவர்களின் மூளை வளர்ச்சி, மொழி வளர்ச்சி திறன், உணர்வுகளின் வளர்ச்சி, கவனம் போன்றவை அதிகரித்து கல்வியில் நன்கு வளர உதவுகின்றது.
kids reading habits in tamil:
kids reading habits in tamil
குழந்தைகளுக்கு சத்தமாக புத்தகம் வாசித்து காண்பிப்பதன் மூலம் ஏற்படும் பத்து நன்மைகளை நாம் பார்க்கலாம்:
மொழித்திறன்:
குழந்தைகள் பேச ஆரம்பிப்பதற்கு முன்பாகவே மொழியை கற்றுக்கொள்ள ஆரம்பிக்கின்றார்கள். எனவே நாம் சத்தமாக குழந்தைகளின் முன்பாக வாசித்துக் காண்பதன் மூலம் மொழியின் உச்சரிப்பு மொழியின் தன்மை ஆகியவற்றை கிரகித்துக் கொள்கிறார்கள்.
கல்வி வளர்ச்சி:
குழந்தைகளுக்கு சிறு வயது முதலே புத்தகம் வாசித்து காண்பிப்பதன் மூலம் அவர்களின் மனம் ஒருமுகப்படுத்தும் தன்மையை அது அதிகரிக்கிறது மேலும் ஞாபக சக்தியை மேம்படுத்தோம் குழந்தைகளுக்கு கற்றலின் மீதான ஆர்வத்தை தூண்டுகின்றது.
kids reading habits in tamil:
வார்த்தைகளை கற்றுக் கொள்ளுதல்:
புத்தகம் வாசிக்கும் பொழுது குழந்தைகள் பல புதிய வார்த்தைகளை கற்றுக் கொள்கிறார்கள் எனவே புத்தகம் வாசிக்காத குழந்தைகளைவிட புத்தகம் வாசிக்கும் குழந்தைகள் 1.4 million அதிக வார்த்தைகளை அறிந்திருப்பார்கள்.
புரிந்து கொள்ளும் திறன் :
புத்தகங்களை கேட்கும் பொழுது பல்வேறு விதமான கதாபாத்திரங்கள் மற்றும் சம்பவங்களை அவர்கள் கேட்பதன் மூலம் குழந்தைகளின் புரிதல் திறன் மேம்படுகின்றது.
உணர்வுகளை புரிந்து கொள்ளுதல்: புத்தகத்தின் வரும் கதாபாத்திரங்களை குழந்தைகள் கேட்டு உணர்ந்து கொள்வதன் மூலமாக பிறரின் உணர்வுகளை குழந்தைகள் மதிக்க கற்றுக் கொள்கிறார்கள்.
மனதை ஒருமைப்படுத்துதல்: இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு பெரும் சவாலாக இருப்பது மன ஒருமைப்பாடு ஆகும் குழந்தைகள் குறிப்பிட்ட கதைகளை கேட்கும் பொழுது அதில் வரும் கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளை குழந்தைகள் ஞாபகம் வைத்திருக்க வேண்டும் எனவே இது குழந்தைகளின் மனதை ஒருமுகப்படுத்தும் திறனை அதிகரிக்கிறது.
மொபைல் போன் பயன்பாடு குறைதல்:
குழந்தைகளிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகமானால் குழந்தைகளின் ஈடுபாடு மொபைல் மற்றும் தொலைக்காட்சியில் செல்லாது. எனவே இது குழந்தைகளுக்கு மிகவும் நன்மை வாய்ந்தது ஆகும்.
பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இடையே உள்ள உறவு:
புத்தகம் வாசிக்கும் பொழுது குழந்தைகளுக்கு பெற்றோருடன் பாதுகாப்பு உணர்வு உருவாகி குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கிடையவேயான உறவு மேலும் வலுப்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
நல்ல உரையாடல்கள்:

சிலநேரம் நாம் புத்தகம் வாசிக்கும் பொழுது அதில் ஏற்படும் சந்தேகம் காரணமாக குழந்தைகள் நம்மிடம் ஆரோக்கியமான உரையாடலை மேற்கொள்வார்கள். இது பிற்காலத்தில் குழந்தைகள் சிறந்த உரையாடலை மேற்கொள்வதற்கான தூண்டுதலை அளிக்கும்.
சிறந்த பழக்கவழக்கம்:
புத்தகத்தை குழந்தைகள் தொடர்ந்து வாசிக்கும் பொழுது அது ஒரு நல்ல பழக்கமாக குழந்தைகளுக்கு மாறும். வாழ்நாள் முழுவதும் இந்த பழக்கம் அவர்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உதவும்.
kids reading habits in tamil
புத்தகம் வாசிக்கும் நேரத்தை மேலும் சுவாரசியமாக மாற்ற உங்களுக்கான சில அறிவுரைகள்:
- சிறு குழந்தைகளுக்கு அவர்களின் வயதிற்கு ஏற்றார் போல் புத்தகங்களையே தேர்வு செய்ய வேண்டும்.
- நாம் குழந்தைகளுக்கு வாசித்துக் காண்பிக்கும் பொழுது முக பாவனைகளுடன் வாசித்துக் காண்பித்தால் அவர்களை மேலும் ஈர்க்கும்.
- இடையிடையே குழந்தைகளுக்கு கேள்விகள் கேட்க வேண்டும் மற்றும் குழந்தைகளை கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டும்.
- புத்தகங்களில் உள்ள விதவிதமான படங்களை குழந்தைகளுக்கு காட்ட வேண்டும்.
- குழந்தைகளுக்கு விருப்பமான புத்தகங்களை அவர்களாகவே வாங்க அனுமதியுங்கள்.
- உங்கள் வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை புத்தகங்களில் கேட்கும் கதைகளுடன் ஒப்பிட்டு காண்பிக்கும் பொழுது மேலும் சுவாரசியம் கூறும்.
kids reading habits in tamil:

உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.











Leave a Reply