homemade shawarma in tamil: ஷவர்மா என்றாலே பொதுவாக எல்லா குழந்தைகளுக்கும் பிடிக்கும். நாகரிக கலாச்சாரத்தின் காரணமாக விதவிதமான வகைகளில் சிக்கன் ஷவர்மா கடைகள் பெருகி வர ஆரம்பித்துள்ளன. ஆனால், அவற்றையெல்லாம் சாப்பிடும் பொழுது அதில் சேர்க்கப்பட்டிருக்கும் உட்பொருட்களின் காரணமாக குழந்தைகளுக்கு பல்வேறு விதமான உடல் உபாதைகள் வருகின்றன என தற்பொழுது வரும் செய்திகள் கூறுகின்றன.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அதனால் தான் குழந்தைகளுக்கு ஹோட்டலில் விற்கப்படும் இது போன்ற ரெசிபிகளை வாங்கி தருவது என்பது அம்மாக்களுக்கு பயம் மிகுந்த ஒன்றாகவே இருந்து வருகின்றது. ஆனால், இவற்றையெல்லாம் நம் குழந்தைகளுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது.
homemade shawarma in tamil
எனவே அதே சுவையில் வீட்டில் செய்து கொடுத்தால் அவர்கள் சமாதானமாகி சாப்பிடாமலா இருக்க போகின்றார்கள். எனவே குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ஷவர்மா ரெசிபியை வீட்டிலேயே எப்படி செய்து கொடுக்கலாம் என்பதை நாம் பார்க்கலாம்.
சோயா, காய்கறிகள் மற்றும் கோதுமை கொண்டு தயாரிக்கப்பட்ட ரோலில் இந்த சவர்மா செய்யப்படுவதால் குழந்தைகளுக்கு நார்ச்சத்து மிகுந்த ஆரோக்கியமான ரெசிபியாக இது இருக்கும். வெளியே ஹோட்டல்களில் விற்கப்படும் சவர்மா போல இதில் எந்தவிதமான பிரசர்வேட்டிவ்ஸ் போன்றவை சேர்க்கப்படாமல் வீட்டிலேயே உள்ள எளிய பொருட்களை வைத்து தயாரிக்கலாம்.
சோயா குழந்தைகளுக்கு தேவையான புரதச்சத்தினை வழங்குகின்றது. மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள காய்கறிகள் வைட்டமின்கள் மற்றும் நார் சத்துக்களை குழந்தைகளுக்கு வழங்குவதால் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் கொடுக்க ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ஆக இது இருக்கும்.
இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் சோயா வெஜ் ஷவர்மாவில் நிறைந்திருக்கும் நன்மைகளை பார்க்கலாம்:
homemade shawarma in tamil

- சோயாவில் அமினோமிலங்கள் நிறைந்து இருப்பதால் மிகுதியான புரதச்சத்தினை கொண்டுள்ளது. இது குழந்தைகளின் தசை நன்கு வளர்ச்சி அடைய உதவி புரிகின்றது.
- மேலும் இந்த ரெசிபியில் புரதம் மட்டுமல்லாமல் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் போன்றவையும் நிறைந்துள்ளதால் குழந்தைகளின் ஊட்டச்சத்தினை பூர்த்தி செய்கின்றது.
- சோயா மற்றும் காய்கறிகளில் நார் சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் வயிறு நீண்ட நேரம் பசிக்காமல் இருப்பதற்கும் உதவுகின்றது.
- சோயாவில் நிறைந்துள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன.
- இதில் நிறைந்துள்ள மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
homemade shawarma in tamil
🥣 சோயா ஃபில்லிங்கிற்கு தேவையானவை
- சோயா துண்டுகள்- 1 கப்
- எண்ணெய்-1 டேபிள்ஸ்பூன்
- 1 சிறிய வெங்காயம் – மெல்லியதாக நறுக்கியது
- 1 சிறிய குடைமிளகாய் – மெல்லியதாக நறுக்கியது
- 1 சிறிய கேரட் – துருவியது
- சீரகப் பொடி-½ டீஸ்பூன்
- மிளகாய்த்தூள்-½ டீஸ்பூன்
- மிளகுத்தூள்-½ டீஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எலுமிச்சைச் சாறு-1 டீஸ்பூன்
- நறுக்கிய கொத்தமல்லி-1 டேபிள்ஸ்பூன்
- கோதுமை ரொட்டி- 4
- லெட்டூஸ் இலைகள்
🥛 பனீர் சாஸிற்கு
- பனீர்-100 கிராம்
- பூண்டு- 1 பல்
- எலுமிச்சைச் சாறு-1 டீஸ்பூன்
- உப்பு-தேவையான அளவு
- தண்ணீர்-தேவைக்கேற்ப
homemade shawarma in tamil
👩🍳 செய்முறை
- சோயா துண்டுகளை 5–7 நிமிடங்கள் கொதிக்க வைத்து, தண்ணீரை வடித்து குளிர்ந்த நீரில் அலசி, நன்றாகப் பிழிந்து அதிகப்படியான தண்ணீரை நீக்கவும். பின்னர் மிக்ஸியில் லேசாக அரைக்கவும் அல்லது சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை மென்மையாகும் வரை வதக்கவும். பின்னர் துருவிய கேரட் மற்றும் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து 2–3 நிமிடங்கள் வதக்கவும்.
- மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- தயாராக வைத்துள்ள சோயா துண்டுகளைச் சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக சமைக்கவும். இறுதியாக எலுமிச்சைச் சாறு மற்றும் கொத்தமல்லி சேர்க்கவும்.
- பனீர், பூண்டு, எலுமிச்சைச் சாறு, உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மென்மையான, கிரீமியான சாஸாக அரைக்கவும்.
- முழுக் கோதுமை ரொட்டிகளைத் தோசைக்கல்லில் லேசாக சூடாக்கவும். அதன் மீது பனீர் சாஸை சமமாகத் தடவவும்.
- லெட்டூஸ் இலைகள் மற்றும் தயாரித்த சோயா ஃபில்லிங்கை வைத்து ராப் போல இறுக்கமாகச் சுருட்டவும்.
- சூடான கடாயில் வைத்து இருபுறமும் 1–2 நிமிடங்கள் லேசாக மொறுமொறுப்பாகும் வரை டோஸ்ட் செய்யவும்.
பாதியாக வெட்டி சூடாகப் பரிமாறவும்.
இந்த சவர்மாவை பள்ளி முடித்து வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சிற்றுண்டியாக கொடுக்கலாம். ஒருவேளை நீங்கள் குழந்தைகளுக்கு வித்யாசமான லஞ்ச் கொடுத்து விட வேண்டும் என்று நினைத்தால் லஞ்ச் பாக்ஸிலும் கொடுத்து விடலாம்.
சோயா உடன் காய்கறிகளும் சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு வித்தியாசமான மற்றும் ஆரோக்கியமான ரெசிபியை கொடுத்த திருப்தி நமக்கு இருக்கும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
homemade shawarma in tamil

homemade shawarma in tamil
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. சோயா வெஜ் ஷவர்மாவை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த வெஜ் ஷவர்மாவை 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஆனால் காரம் மற்றும் மசாலா போன்றவற்றை குழந்தைகளின் சுவைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம்.
2. பனீர் இல்லாமல் தயாரிக்கலாமா?
உங்கள் குழந்தைகளுக்கு பனீர் பிடிக்கவில்லை என்றால் பனீருக்குப் பதிலாக கெட்டியான தயிர் அல்லது கிரீக் யோகர்ட் பயன்படுத்தலாம்.
3. சோயா துண்டுகளை மென்மையாக எப்படி செய்வது?
சோயா துண்டுகளை 5–7 நிமிடங்கள் கொதிக்க வைத்து, குளிர்ந்த நீரில் அலசி நன்றாகப் பிழியவும். இதனால் அதன் பச்சை வாசனை குறைந்து, மென்மையான பதம் கிடைக்கும்.
4. ஷவர்மாவில் வேறு என்ன காய்கறிகளை சேர்க்கலாம்?
உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தவாறு பீட்ரூட், முட்டைக்கோஸ், ஸ்வீட் கார்ன், வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் பல்வேறு நிற குடைமிளகாய் போன்றவற்றை சேர்த்து செய்து கொடுக்கலாம்.
ஹோம்மேட் வெஜ் ஷவர்மா ரெசிபி
Ingredients
- 🥣 சோயா ஃபில்லிங்கிற்கு தேவையானவை
- சோயா துண்டுகள்- 1 கப்
- எண்ணெய்-1 டேபிள்ஸ்பூன்
- 1 சிறிய வெங்காயம் – மெல்லியதாக நறுக்கியது
- 1 சிறிய குடைமிளகாய் – மெல்லியதாக நறுக்கியது
- 1 சிறிய கேரட் – துருவியது
- சீரகப் பொடி-½ டீஸ்பூன்
- மிளகாய்த்தூள்-½ டீஸ்பூன்
- மிளகுத்தூள்-½ டீஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எலுமிச்சைச் சாறு-1 டீஸ்பூன்
- நறுக்கிய கொத்தமல்லி-1 டேபிள்ஸ்பூன்
- கோதுமை ரொட்டி- 4
- லெட்டூஸ் இலைகள்
- பனீர் சாஸிற்கு
- பனீர்-100 கிராம்
- பூண்டு- 1 பல்
- எலுமிச்சைச் சாறு-1 டீஸ்பூன்
- உப்பு-தேவையான அளவு
- தண்ணீர்-தேவைக்கேற்ப











Leave a Reply