Karuppu Ulundhu Puttu : புட்டு,கொழுக்கட்டை போன்றவை எல்லாம் நம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு தின்பண்டமாக செய்து கொடுத்த ஆரோக்கியமான உணவு வகை ஆகும். ஆனால் இன்று அவற்றின் பெயர்கள் கூட பல குழந்தைகளுக்கு தெரியாது என்பதை உண்மை.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
கலர்கலரான பேக்கரி உணவுகளில் மயங்கி கிடக்கும் குழந்தைகளுக்கு நம் பாரம்பரிய உணவுகளை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இப்பொழுது இருக்கின்றோம்.
அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போகும் ரெசிபி கருப்பு உளுந்து புட்டு. கருப்பு உளுந்தை வைத்து களி செய்வதை நாம் இதற்கு முன்பு பார்த்துள்ளோம்.
ஆனால் அதை வைத்து புட்டு செய்வது என்பது நம்மில் பலரும் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். குழந்தைகளின் உடலுக்கு பல்வேறு ஆரோக்கியமான நன்மைகளை அள்ளித் தரும் கருப்பு உளுந்தை வைத்து புட்டு எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
Karuppu Ulundhu Puttu:
இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் கருப்பு உளுந்தில் நிறைந்துள்ள நன்மைகளை பார்க்கலாம்:

- கருப்பு உளுந்தில் புரதச்சத்து நிறைந்துள்ளதால் குழந்தைகளின் ஆரோக்கியமான தசை வளர்ச்சிக்கு மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- உளுந்தில் இரும்பு சத்து அதிக அளவு நிறைந்துள்ளதால் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவுகின்றது.
- இதில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் என்பதால் குழந்தைகளுக்கு வலுவான எலும்பு மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- இதில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள் குடலின் எளிதான செரிமானத்திற்கு உதவுகின்றது.
- இதில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேடுகள் நிறைந்துள்ளதால் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றது.
- குறிப்பாக நம் தென்னிந்திய பாரம்பரிய உணவுகளில் பிரசவத்திற்கு பிறகு தாய்மார்களுக்கு கொடுக்கக்கூடிய உணவுகளின் பட்டியலில் கருப்பு உளுந்து முக்கிய இடம் பிடிக்கின்றது.
- அது மட்டுமல்லாமல் பூப்படையும் குழந்தைகளுக்கும் உளுந்து சத்தான உணவாக கொடுக்கப்படுகின்றது.
Karuppu Ulundhu Puttu
தேவையான பொருட்கள்
- கருப்பு உளுந்து-1 கப்
- துருவிய தேங்காய்-½ கப்
- பொடித்த வெல்லம் – ¼–½ கப்
- ஏலக்காய்(பொடித்தது)-2–3
- நெய்-1–2 டீஸ்பூன்
- உப்பு-ஒரு சிட்டிகை
- தண்ணீர்-தேவையான அளவு
Karuppu Ulundhu Puttu
செய்முறை
- 1 கப் கருப்பு உளுந்தை நன்றாகக் கழுவி, 4–6 மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஊறிய உளுந்தில் உள்ள தண்ணீரை முழுமையாக வடித்து, சுத்தமான துணியில் பரப்பி, பெரும்பாலான ஈரப்பதம் நீங்கும் வரை உலர வைக்கவும்.
- உளுந்தை கடாயில் சேர்த்து, குறைந்த தீயில் நன்கு மணம் வரும் வரை மற்றும் சற்று மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்.
- வறுத்த உளுந்தை முழுமையாக ஆறவிட்டு, சற்று கொரகொரப்பான பொடியாக அரைக்கவும்.
- அரைத்த உளுந்துப் பொடியில் சிறிதளவு தண்ணீர் தெளித்து, ஈரமான துகள்கள் போன்ற பதம் வரும் வரை நன்றாகக் கலக்கவும்.
- இந்தக் கலவையை 10–12 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும்.
- வெந்த உளுந்துப் புட்டை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
- அதனுடன் பொடித்த வெல்லம், ½ கப் துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் 1–2 டீஸ்பூன் நெய் சேர்க்கவும்.
- அனைத்தையும் மெதுவாக நன்றாகக் கலக்கவும்.
- சுவையான கருப்பு உளுந்து புட்டு தயார்!
Karuppu Ulundhu Puttu

கருப்பு உளுந்து மட்டுமல்லாமல் தேங்காய் மற்றும் நாட்டு சக்கரை போன்றவை சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் கொடுக்கக்கூடிய சத்தான உணவாக இந்த புட்டு இருக்கும்.
பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு மாலை நேரம் மட்டுமல்லாமல் அவர்களுக்கு சத்தான காலை உணவு செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த கருப்பு உளுந்து புட்டை செய்து கொடுக்கலாம்.
குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு இடுப்பு எலும்பு பலம் பெறுவதற்கு பெரும்பாலான கிராமப்புறங்களில் இன்றளவும் உளுந்து நிறைந்த உணவுப் பொருட்கள் செய்து கொடுக்கப்படுகின்றன எனவே குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள பெரியோர்களும் இதனை சாப்பிடும் பொழுது இடுப்பு வலி போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
கருப்பு உளுந்து புட்டு
Ingredients
- கருப்பு உளுந்து-1 கப்
- துருவிய தேங்காய்-½ கப்
- பொடித்த வெல்லம் – ¼–½ கப்
- ஏலக்காய் பொடித்தது-2–3
- நெய்-1–2 டீஸ்பூன்
- உப்பு-ஒரு சிட்டிகை
- தண்ணீர்-தேவையான அளவு
Notes
வெந்த உளுந்துப் புட்டை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும். அதனுடன் பொடித்த வெல்லம், ½ கப் துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் 1–2 டீஸ்பூன் நெய் சேர்க்கவும். அனைத்தையும் மெதுவாக நன்றாகக் கலக்கவும். சுவையான கருப்பு உளுந்து புட்டு தயார்!











Leave a Reply