ABC Powder Recipe in Tamil: வெளிப்புற உடலை சுத்தமாக வைத்துக்கொள்ள எப்படி தினமும் குளித்து உடலில் உள்ள அழுக்கை போக்குகின்றோமோ அதே போல உள்ளுறுப்புகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு தற்பொழுது மக்கள் இடையே ‘டீடாக்சிங்’ என்ற பெயரில் பரவி வருகின்றது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்துவதற்கு தற்பொழுது ABC எனப்படும் பானம் பிரபலமாகி வருகின்றது. ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஆகிய மூன்றையும் அரைத்து ஜூஸாக உட்கொள்வதே ஏ பி சி பானம் எனப்படுகின்றது.
இந்த பானம் உடல் உறுப்புகளை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவது, உடலுக்கு தேவையான முக்கியமான வைட்டமின்களை அளிப்பது மற்றும் சருமத்தை பளிச்சென்று மாற்றுவது என்ற பல்வேறு நன்மைகள் புரிவதால் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றது.
ஆனால் இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் சிறுவயதிலிருந்தே இந்த பானத்தைக் கொடுக்கும் பொழுது ஏராளமான நன்மைகளை அளிக்கும். தினமும் ஆப்பிள் பீட்ரூட் கேரட் ஆகிய மூன்றையும் இணைத்து ஜூஸ் போடுவது கடினம் என்பதால் அவற்றை பொடியாக ரெடிமேடாக தயார் செய்து வைத்துக் கொண்டால் விரும்பும்பொழுது இந்த பானத்தை ரெடி செய்து விடலாம்.
ABC Powder Recipe in Tamil:
இந்த ரெசிபி பார்ப்பதற்கு முன்னால் இதில் அடங்கியுள்ள நன்மைகளை பார்க்கலாம்:
ஆப்பிளின் நன்மைகள்:
- ஆப்பிளில் இயற்கையாகவே நிறைந்திருக்கும் வைட்டமின் ஏ, இ, பி ஆகிய சத்துக்கள் உடலுக்கு நன்மை அளிக்கக் கூடியவை.
- இதில் ஜிங்க், காப்பர், மங்கனிசு மற்றும் பாஸ்பரஸ் போன்றவை இயற்கையாகவே நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது.
- இதில் இருக்கும் நார்ச்சத்துக்கள் உணவை எளிதில் செரிமானமாக செய்கின்றது.
- வைட்டமின் சி யும் இதில் அதிகமாக இருப்பதால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு திறன் மேம்படும். மேலும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் என்பதால் செல்கள் சிதைவடைவதில் இருந்து உடலை பாதுகாக்கின்றது.
பீட்ரூட்டின் நன்மைகள்:
- பீட்ரூட்டில் இயற்கையாகவே இருக்கும் வேதிப்பொருட்கள் கல்லீரலுக்கு நன்மை அளிக்கக் கூடியதாகும்.
- உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுவதில் பீட்ரூட் முக்கிய பங்கு வைக்கின்றது.
- மேலும் இதில் வைட்டமின்கள் ஏ, சி, பி, இரும்புசத்து, பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை அதிகம் காணப்படுகிறது.
- சருமத்தை பளபளக்க வைக்கும் தன்மை பீட்ரூட்டிற்கு உண்டு.
கேரட்டின் நன்மைகள்:
- கேரட்டில் இயற்கையாகவே காணப்படும் சத்துக்கள் கண்களுக்கு நன்மை அளிக்கக் கூடியவை என்பவை நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
- இதில் நிறைந்துள்ள மற்ற சத்துக்களான பீட்டா பரோட்டின், நியாசின், மெக்னீசியம் மற்றும் செலினியம் போன்றவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகின்றது.
- பித்தப்பைக்கு ஆரோக்கியம் அளிக்கும் தன்மை கேரட்டிற்கு உண்டு.
- கேரட்டில் இயற்கையாக இருக்கும் வைட்டமின் கே எலும்புகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகின்றது.
ABC Powder Recipe in Tamil:
- ஆப்பிள்- 250 கிராம்
- கேரட்- 250 கிராம்
- பீட்ரூட்- 250 கிராம்
- பாதாம்- 100 கிராம்
- பிஸ்தா- 100 கிராம்
- ஏலக்காய்-10 கிராம்
ABC Powder Recipe in Tamil:
செய்முறை
- ஆப்பிள் கேரட் மற்றும் பீட்ரூட் ஆகியவற்றை நன்றாக கழுவி தோலை நீக்க வேண்டும்.
- கேரட் மட்டும் பீட்ரூட் ஆகியவற்றை நன்றாக துருவி துணியால் அதில் இருக்கும் ஜூசை தனியாக பிழிய வேண்டும்.
- இந்த ஜூஸினை நாம் வேறு ஏதேனும் பலகாரங்கள் செய்யும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம்.
- துருவிய கேரட் மட்டும் பீட்ரூட்டினை இரண்டு நாட்களுக்கு காய வைக்க வேண்டும்.
- ஆப்பிளை தோல் நீக்கி மெலிதாக சீவி காய வைக்க வேண்டும்.
- இரண்டு நாட்களுக்குப் பின் ஆரிய கேரட், பீட்ரூட் மற்றும் ஆப்பிளை லேசாக கடாயில் எண்ணெய் சேர்க்காமல் வறுக்க வேண்டும்.
- பாதாம் மற்றும் பிஸ்தா ஆகியவற்றை லேசாக நறுமணம் வரும் வரை கடாயில் வறுத்து கடைசியில் ஏலக்காய் சேர்க்கவும்.
- கேரட் பீட்ரூட் மட்டும் மாப்பிள்ளை மிக்ஸியில் பவுடராக அரைக்க வேண்டும்.
- வறுத்து வைத்த நட்ஸ்களை தனியாக பவுடர் செய்ய வேண்டும்.
- இப்பொழுது இரண்டு பவுடர்களையும் ஒன்றாக கலக்க வேண்டும்.
- காற்று போகாத டப்பாவில் அடைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
நாம் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பொழுது இந்த பவுடரை கலந்து தினமும் கொடுக்கலாம்.
குழந்தைகள் மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள பெரியவர்களும் இந்த பவுடரை அடிக்கடி பாலிலோ அல்லது ஜூஸாகவோ கலக்கி கொடுத்துக் கொள்ளலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
ABC Powder Recipe in Tamil:
ABC Powder Recipe in Tamil:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இந்த ஏபிசி எல்லாரும் குடிக்கலாமா?
இதில் ஆப்பிள் பீட்ரூட் மற்றும் கேரட் போன்றவற்றின் நன்மை அடங்கியுள்ளதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் குடிக்கலாம்.
ஒரு நாளைக்கு எத்தனை முறை கொடுக்கலாம்?
ஒரு நாளைக்கு ஒருமுறை இதை குடித்தால் போதுமானது.
இதில் பால் சேர்த்து கொடுக்கலாமா?
பாலை காய்ச்சி இந்த பவுடருடன் சேர்த்து தாராளமாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ABC மால்ட்
Ingredients
- தேவையானவை
- ஆப்பிள்- 250 கிராம்
- கேரட்- 250 கிராம்
- பீட்ரூட்- 250 கிராம்
- பாதாம்- 100 கிராம்
- பிஸ்தா- 100 கிராம்
- ஏலக்காய்-10
Leave a Reply