குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
வேகவைத்து மசித்த ஆப்பிள், பேரிக்காய் பட்டைத் தூள் சேர்த்தது
குழந்தைக்கு 6 வது மாதத்திலிருந்து கொடுக்கலாம்
- நறுக்கிய ஆப்பிள் – பாதியளவு
- நறுக்கிய பேரிக்காய் – பாதியளவு
செய்முறை:
- சதைப்பற்றுள்ள ஆப்பிள் மற்றும் ப்ரெஷ்ஷான பேரிக்காயை வாங்கி அதனை நன்றாக கழுவி தோல் உரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.
- அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதனுள் ஒரு கிண்ணத்தை வைத்து அதில் ஆப்பிள் மற்றும் பேரிக்காயை வைத்து மூடி போட்டு வேக விடவும்.
- இத்துடன் பட்டை தூளையும் சேர்க்கவும்.
- நன்றாக வெந்த பிறகு இதனை மசித்தோ அல்லது அரைத்தோ கொடுக்கலாம்.
- குழந்தைகள் எளிதில் விழுங்குவதற்கு ஏற்ற வகையில் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் தரலாம். ஆனால் தண்ணீரை இதில் சேர்க்க கூடாது.
இந்த கலவையை நன்றாக கழுவிய பாத்திரத்தில் வைத்து குழந்தைக்கு ஊட்டுங்கள். - எந்த ஒரு உணவை கொடுப்பதாக இருந்தாலும், 3 நாள் விதிமுறையை மறக்க வேண்டாம்
- குழந்தைகளின் உணவில் எப்போது எப்படி மசாலாவை சேர்க்கலாம்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். குழந்தையின் உணவில் ருசியை கூட்டுங்கள்…
தெரிந்து கொள்ள வேண்டியது:
- கடைகளில் வாங்கும் போது ப்ரெஷ்ஷான பேரிக்காய்களை வாங்குங்கள்.
- இது மலச்சிக்கலை விரட்டும் தன்மை கொண்டது.
- குடல் தொடர்பான பிரச்சினைகளை இது சரிசெய்யும்.
- பேரிக்காயை அப்படியே கொடுக்கலாம். வேகவைத்தோ, மசித்தோ கொடுத்தால் ருசியாக இருக்கும்.
- இதில் நார்ச்சத்தும், வைட்டமின் சி சத்தும் இருக்கிறது.
- ஆப்பிளை வேகவைத்தும், மசித்தும் அல்லது அப்படியே அரைத்தும் தரலாம்.
மசித்த ஆப்பிள் அல்லது ஆப்பிள் கூழ் மலச்சிக்கலை ஏற்படுத்தும். - ஆனால் ஆப்பிள் ஜூஸ் மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்கும்.
“ஆப்பிளில் செரிமானத்துக்கு உதவும் நார்ச்சத்தும், வைட்டமின் சி சத்தும் உள்ளது”
பேரிக்காய் கூழ் பற்றி தெரிந்து கொள்ள விரும்பிகிறிீர்களா, இங்கு க்ளிக் செய்யவும்.
மற்ற கூழ் வகைகளுக்கு இங்கு க்ளிக் செய்யுங்கள்…
ரெசிபிகளை காண வேண்டுமா? இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply