Arisi kanji for babies: ஆறு மாத குழந்தைகளுக்கு முதன் முதலாக திட உணவுகள் கொடுக்க ஆரம்பித்தவுடன் காய்கறி மற்றும் பழக்கூழ்களுக்கு அடுத்தபடியாக நம் அம்மாக்களின் தேர்வு அரிசிக்கஞ்சியாகவே இருக்கும். குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுப்பதற்கு எளிமையானது அரிசிக்கஞ்சி.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆனால் ஒவ்வொரு முறையும் சாதத்தை வடித்து கஞ்சியாக செய்வது என்பது சிரமமாக இருக்கும். அதற்கு பதிலாக இன்ஸ்டன்ட் கஞ்சி பொடியினை நாம் தயார் செய்து வைத்துக்கொண்டால் 5 நிமிடத்தில் எளிதாக குழந்தைகளுக்கான கஞ்சியை தயார் செய்து விடலாம்.
குழந்தைகளுக்கு கஞ்சி தயார் செய்யும் பொழுது நாம் வீட்டில் உபயோகிக்கும் அரிசியினை முதல் முதலாக கொடுக்கலாம். குழந்தை தாயின் வயிற்றுக்குள் இருக்கும் பொழுதே நாம் உபயோகிக்கும் அரிசியானது குழந்தைக்கு பழக்கப்பட்டிருப்பதால் குழந்தைகளுக்கு உபாதைகள் எதுவும் ஏற்படாது.
குழந்தைகளுக்கு அடுத்த கட்டமாக சிவப்பு அரிசி, கைக்குத்தல் அரிசி, கவுனி அரிசி போன்ற அரிசி வகைகளை கஞ்சியாக தயார் செய்து கொடுக்கலாம்.
Arisi kanji for babies:
குழந்தைகளுக்கான அரிசி கஞ்சி பொடி
1.அரிசியை நன்றாக கழுவி, வடிகட்டி 2 முதல் 3 மணி நேரங்களுக்கு வெயிலில் அல்லது நிழலில் ஆறவிடவும்.
2.பானில் எண்ணெய் சேர்க்காமல் 4 முதல் 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் அரிசியை வறுத்து எடுக்கவும்.
3.ஆறவிடவும்.
4.மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
5.இதனை காற்றுப்புகாத டப்பாவில் வைத்து மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
அரிசி கஞ்சி செய்வது எப்படி?
1. 2 டே.ஸ்பூன் கஞ்சி பொடி எடுத்துக் கொள்ளவும்.
2. தண்ணீரில் நன்றாக கலக்கவும்.
3. கலவையினை மிதமான தீயில் 7 நிமிடங்களுக்கு வைக்கவும்.
4.சிறிது கெட்டியாகும் வரை நன்றாக கலக்கிக் கொண்டே இருக்கவும்.
5.குழந்தைகளுக்கு வெதுவெதுப்பாக பரிமாறவும்
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply