Arisi maavu kanji for babies
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அரிசிமாவு கஞ்சி
குழந்தை 6 வது மாதத்திலிருந்து கொடுக்கலாம்
- வீட்டில் தயாரித்த அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – அரை கப்
செய்முறை:
- தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும்.
- இத்துடன் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கொண்டு வரவும்.
- கட்டிகள் வராமல் இருக்கும்படி கிளறவும்.
- கெட்டியான பதம் வந்தபிறகு இறக்கி இத்துடன் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் கலந்து குழந்தைக்கு தரலாம்.
“இத்துடன் மசித்த பழக்கூழ், காய்கறி கூழ் சேர்த்து கொடுத்தால் ருசியாக இருக்கும்”
அரிசி மாவு தயாரிப்பது உங்களுக்கு சிரமமாக இருக்கிறதா? கவலை வேண்டாம்… சுத்தமான முறையில் நாங்கள் தயாரித்த அரிசி மாவை உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தருகிறோம்…
தெரிந்து கொள்ள வேண்டியது:
முதலில் சாதாரண அரிசியை பயன்படுத்துங்கள். இது குழந்தைக்கு ஒத்துக் கொண்ட பிறகு ப்ரெளன் ரைஸை பயன்படுத்துங்கள்.
சாதாரண அரிசியுடன் ஒப்பிடும் போது ப்ரெளன் ரைஸ் குழந்தைகளின் வயிற்றுக்கு ஒருவித மந்தமான சூழலை உருவாக்கும்.
அரிசி உணவுகள் குழந்தைகளுக்கு சில நேரம் மலச்சிக்கலை உருவாக்கலாம். ஒருவேளை மலச்சிக்கல் ஏற்பட்டால் உடனே அதனை நிறுத்திவிடுங்கள். சில மாத இடைவெளிக்கு பிறகு நீங்கள் அரிசி உணவை கொடுக்கலாம்..
ப்ரெளன் ரைஸில் செலினியம், மெக்னீசியம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் உள்ளிட்ட சத்துகள் அதிகம் இருக்கிறது.
இங்கு குழந்தைக்கான அரிசி கஞ்சி பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply