Solam Ragi kanji for babies: குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய ஆரோக்கியமான கஞ்சி வகைகள் பலவற்றை நாம் பார்த்துவிட்டோம். அவற்றின் வரிசையில் இன்று நாம் பார்க்க இருக்கும் இந்த சோளம் ராகி டேட்ஸ் கஞ்சியானது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியினை அள்ளித்தரும் ஒரு அபரிமிதமான உணவாகும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
இந்த ரெசிபியில் நிறைந்திருக்கும் இரும்புச்சத்து,கால்சியம், புரோட்டீன்,வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் போன்றவை குழந்தைகளுக்கு தேவையான சக்தியினை அள்ளித் தருகின்றன.
மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள கம்பு,ராகி மற்றும் டேட்ஸ் ஆகிய மூன்றுமே குழந்தைகளுக்கு நார்ச்சத்தினை அள்ளி தருவதுடன் குழந்தைகளின் உணவினை எளிதில் செரிமானம் அடையச் செய்கின்றது.மேலும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க செய்து குழந்தைகள் நாள் முழுவதும் விளையாடுவதற்கு தேவையான எனர்ஜியை அளிக்கவல்லது.

குழந்தைகளுக்கான சோளம் கம்பு டேட்ஸ் கஞ்சி
தேவையானவை
- சோளம் -2 டே.ஸ்பூன்
- ராகி- 2 டே.ஸ்பூன்
- டேட்ஸ் பவுடர்(மை லிட்டில் மொப்பெட்) – 1 டே.ஸ்பூன்.
Solam Ragi kanji for babies:
செய்முறை
1.சோளம் மற்றும் ராகி போன்றவற்றை நன்றாக கழுவி 5 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.
2.குக்கரில் கம்பு மற்றும் சோளம் ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
3. 2 முதல் 3 விசில் வரும் அளவிற்கு குக்கரில் வேக வைக்கவும்.
4.சிறிது நேரம் ஆற விடவும்.
5.மிக்சியில் நன்றாக அரைக்கவும்.
6.கடாயில் அரைத்த விழுதை ஊற்றி டேட்ஸ் பவுடர் சேர்க்கவும்.
7.நன்றாக கலக்கவும்.
8.மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் கிளறவும்.
9.குழந்தைகளுக்கான ஆரோக்கியமான சோளம் கம்பு டேட்ஸ் கஞ்சி ரெடி.
இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு ரத்தசோகை வராமல் தடுக்க கூடியது.இந்த உணவினை 8 மாதங்களுக்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.மேலும் இதில் மை லிட்டில் மொப்பெட்டின் டேட்ஸ் பவுடர் கலந்துள்ளேன்.இது ப்ரெசெர்வேட்டிவ்ஸ் மற்றும் செயற்கை ரசாயனங்கள் கலக்காத உணவாகும்.நீங்கள் டேட்ஸ் பவுடருக்கு பதிலாக நாட்டுச்சக்கரை, பனங்கற்கண்டு,கருப்பட்டி போன்றவை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
குழந்தைகளுக்கான சோளம் கம்பு டேட்ஸ் கஞ்சி (இரும்புச்சத்து நிறைந்த எளிதான ரெசிபி)
Ingredients
- 2 டே.ஸ்பூன் சோளம்
- 2 டே.ஸ்பூன் ராகி
- 1 ஓட்ஸ் பவுடர் ஓட்ஸ் பவுடர்
Notes
- சோளம் மற்றும் ராகி போன்றவற்றை நன்றாக கழுவி 5 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.
- குக்கரில் கம்பு மற்றும் சோளம் ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
- 2 முதல் 3 விசில் வரும் அளவிற்கு குக்கரில் வேக வைக்கவும்.
- சிறிது நேரம் ஆற விடவும்.
- மிக்சியில் நன்றாக அரைக்கவும்.
- கடாயில் அரைத்த விழுதை ஊற்றி டேட்ஸ் பவுடர் சேர்க்கவும்.
- நன்றாக கலக்கவும்.
- மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் கிளறவும்.
- குழந்தைகளுக்கான ஆரோக்கியமான சோளம் கம்பு டேட்ஸ் கஞ்சி ரெடி.
Leave a Reply