Aval Kolukattai Recipe: விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டை இல்லாமல் முழுமையாகுமா? எல்லோர் வீட்டிலும் விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து அன்றைய விழாவினை சிறப்பாக்குவது வழக்கம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
கொழுக்கட்டை என்றால் விநாயகருக்கு மட்டுமா பிடிக்கும்? அந்த சாக்கில் நம் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் ஒரு பலகாரம் தான் கொழுக்கட்டை.
பொதுவாக கொழுக்கட்டை என்றாலே அரிசி மாவு கொழுக்கட்டை தான் நாம் செய்வோம். ஆனால் இந்த விநாயகர் சதுர்த்தியில் சற்று வித்தியாசமான அவல் கொழுக்கட்டை ரெசிபியை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.
குழந்தைகளுக்கு பிடித்தமான இனிப்பு கொழுக்கட்டையை சீனி இல்லாமல் நாட்டுச்சர்க்கரை வைத்து எப்படி ஆரோக்கியமாக செய்வது என்பதை தான் இப்பொழுது நாம் பார்க்கப் போகின்றோம்.
Aval Kolukattai Recipe:

அரிசி அவல் இயற்கையிலேயே குழந்தைகளுக்கு எளிதாக செரிமானமாக கூடியது என்பதால் குழந்தைகளுக்கு தாராளமாக வீட்டில் நீங்கள் சட்டென்று இதை செய்து கொடுக்கலாம். இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் அவலில் நிறைந்துள்ள நன்மைகளை பார்க்கலாம்:
Aval Kolukattai Recipe:
- அவல் எளிதில் செரிமானமாக கூடிய உணவு வகை என்பதால் குழந்தைகளுக்கு தின்பண்டமாக செய்து கொடுப்பதற்கு ஏற்றதாகும்.
- மேலும் இதில் இரும்பு சத்து நிறைந்திருப்பதால் ரத்த சோகை வராமல் தடுக்கக்கூடியது.
- கார்போஹைட்ரேடுகள் நிறைந்துள்ளதால் குழந்தைகள் நாள் முழுவதும் விளையாடுவதற்கு தேவையான எனர்ஜியை அளிக்கின்றது.
- க்ளூட்டன் இல்லாத உணவு வகை என்பதால் க்ளூட்டன் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு இதனை கொடுக்கலாம்.
- இதில் நார் சத்துக்கள் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது.
- அரிசி அவுலை வைத்து பல்வேறு வகையான உணவு வகைகளான உப்புமா, ஸ்வீட், கட்லட் மற்றும் கஞ்சி போன்றவற்றினை செய்யலாம் என்பதால் பலவகையான உணவு வகைகள் செய்வதற்கு ஏற்ற உணவுப்பொருள் இது.
- கலோரிகள் குறைவு என்பதால் சிறிதளவு சாப்பிட்டாலே அதிக கலோரிகள் சேர்க்காமல் பார்த்துக் கொள்ளும்.
- இதனுடன் காய்கறிகள் பழங்கள் மற்றும் நட்ஸ் போன்றவை சேர்த்து சாப்பிடும் பொழுது உடலுக்கு கூடுதலான நன்றியைத் தரும்.
- அரிசி அவலுடன் தண்ணீரை சேர்த்து ஊற வைக்கும் பொழுது அதிகபட்சமான தண்ணீரை அவல் உறிஞ்சி கொள்ளும் என்பதால் குழந்தைகளுக்கு தேவையான நீர்ச்சத்தினை கொடுப்பதற்கு வல்லது.
- இதனுடன் மஞ்சள் தூள் கருவேப்பிலை மற்றும் காய்கறிகள் சேர்த்து உப்புமாவாக செய்து சாப்பிடும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்க வல்லது.
Aval Kolukattai Recipe:
தேவையானவை
- அரிசி அவல்- 1 கப்
- நாட்டுச்சர்க்கரை- 1/2 கப்
- துருவிய தேங்காய்- 1/4 கப்
- ஏலக்காய் தூள்- 1/4 டீஸ்பூன்
- நெய் – 1 டேபிள் ஸ்பூன்.
Aval Kolukattai Recipe:
செய்முறை
- அரிசி அவலினை நன்றாக கழுவி தண்ணீர் வடியும் அளவிற்கு வடிகட்டவும். தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
- அவலினை கையினால் நன்றாக மென்மையாக உதிர்த்து விடவும். கட்டிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் நெய்யை உருக்கி துருவிய தேங்காயை நறுமணம் வரும் அளவிற்கு வறுக்கவும்.
- நாட்டுச்சர்க்கரை சேர்த்து தேங்காயுடன் நன்கு சேரும் அளவிற்கு கிளறவும்.
- மசித்து வைத்த அவல் மற்றும் ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு வைத்து கிளறவும்.
- நன்கு ஆறவிட்டு கைகளால் கொழுக்கட்டை பிடிக்கவும் அல்லது கொழுக்கட்டை மோல்டினை கொண்டு தேவையான வடிவத்திற்கு செய்து கொள்ளவும்.
- 8-10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் இட்லி குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Aval Kolukattai Recipe:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
அவுல் கொழுக்கட்டையில் குழந்தைகளுக்கு பிடித்த வேறு ஏதேனும் பொருட்கள் சேர்த்துக் கொள்ளலாமா?
இந்த கொழுக்கட்டையில் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான நட்ஸ் வகைகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை நறுக்கி சேர்த்து கொடுக்கலாம்.
நாட்டு சக்கரைக்கு பதிலாக வேறு இனிப்பு பொருட்கள் சேர்க்கலாமா?
குழந்தைகள் விருப்பப்பட்டால் நாட்டு சக்கரைக்கு பதிலாக வெல்லப்பாகு மற்றும் கருப்பட்டி பால் ஆகியவற்றை சேர்த்தும் செய்து கொடுக்கலாம்.
சாதாரணமாக வீட்டில் செய்யும் அரிசி மாவு கொழுக்கட்டையை காட்டிலும் இது சத்தானதா?
ஆம் இதில் அரிசி அவல், தேங்காய் துருவல்கள் மற்றும் நட்ஸ் சேர்த்துள்ளதால் சாதாரணமாக செய்யும் கொழுக்கட்டையை காட்டிலும் இது ஆரோக்கியமானது தான்.
சுவையான இன்ஸ்டன்ட் கொழுக்கட்டை ரெசிபி
Ingredients
- தேவையானவை
- அரிசி அவல்- 1 கப்
- நாட்டுச்சர்க்கரை- 1/2 கப்
- துருவிய தேங்காய்- 1/4 கப்
- ஏலக்காய் தூள்- 1/4 டீஸ்பூன்
- நெய் - 1 டேபிள் ஸ்பூன்.
Notes
செய்முறை
- அரிசி அவலினை நன்றாக கழுவி தண்ணீர் வடியும் அளவிற்கு வடிகட்டவும். தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
- அவலினை கையினால் நன்றாக மென்மையாக உதிர்த்து விடவும். கட்டிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் நெய்யை உருக்கி துருவிய தேங்காயை நறுமணம் வரும் அளவிற்கு வறுக்கவும்.
- நாட்டுச்சர்க்கரை சேர்த்து தேங்காயுடன் நன்கு சேரும் அளவிற்கு கிளறவும்.
- மசித்து வைத்த அவல் மற்றும் ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு வைத்து கிளறவும்.
- நன்கு ஆறவிட்டு கைகளால் கொழுக்கட்டை பிடிக்கவும் அல்லது கொழுக்கட்டை மோல்டினை கொண்டு தேவையான வடிவத்திற்கு செய்து கொள்ளவும்.
- 8-10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் இட்லி குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.
Leave a Reply