Aval Vadai in Tamil: குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசித்து அலுத்து விட்டீர்களா? இதோ உங்களுக்கான ஹெல்தியான அவல் வடை ரெசிபி.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
பொதுவாக அவல் என்றாலே நம் நினைவுக்கு வருவது கேசரி மற்றும் பாயாசம் நான் தான்.இப்பொழுது இந்த ஹெல்த்தியான அவல் வடை ரெசிபியையும் நீங்கள் செய்து அசத்துங்கள். ஆரோக்கியமான காய்கறிகளான கேரட் மற்றும் பட்டாணி சேர்ந்துள்ளதால் குழந்தைகளுக்கு எனர்ஜியை தரக்கூடியது. அதுவும் மழைக்காலத்தில் குடும்பத்துடன் சேர்ந்து சுடச்சுட சூடாக சாப்பிட இதமாக இருக்கும் ஸ்நாக்ஸ் தான் இந்த அவல் வடை ரெசிபி.
Aval Vadai in Tamil
- உருளைக்கிழங்கு -2
- அவல்-5 கப்
- வெங்காயம் நறுக்கியது- 1
- பச்சைப் பட்டாணி- 2 டே.ஸ்பூன்
- துருவிய கேரட்- 1
- சீரகத்தூள்- ½ டீ ஸ்பூன்
- மல்லித் தூள்-1 டீ.ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது-1 டே.ஸ்பூன்
- உப்பு-1 டீ.ஸ்பூன்.
Aval Vadai in Tamil
செய்முறை
இதையும் படிங்க: சளி மற்றும் இருமலை நீக்கும் பூண்டு பால்
1.அவலை மூன்று நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.
2.நன்றாக அலசி தண்ணீரை வடிகட்டவும்.
3.குக்கரில் 2-3 விசில் வரும் வரை உருளைக் கிழங்கினை நன்றாக வேகவிடவும்.
4.நன்றாக மசிக்கவும்.
5.அவல்,வெங்காயம், பட்டாணி, கேரட் மற்றும் மல்லித்தூள் சேர்க்கவும்.
6.இஞ்சி பூண்டு சேர்க்கவும்.
7.தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
8.மாவு பதத்திற்கு வரும் அளவிற்கு நன்றாக பிசையவும்.
9.சிறிதளவு மாவு எடுத்து வடை போல் தட்டவும்.
10.பானில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
11.பொன்னிறமாக வருமளவிற்கு வடையை பொரித்தெடுக்கவும்.
12.சூடாக பரிமாறவும்.
இதையும் படிங்க: பனானா சியா புட்டிங்
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply