Baby Sleep
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கு எவ்வளவு தூக்கம் தேவை?
பிறந்து சில மாதங்கள் வரை குழந்தைகள் நிறைய நேரம் தூங்கி கொண்டே இருப்பார்கள். குழந்தையை பெற்றெடுத்த பெற்றோரோ எப்பவுமே குழந்தை தூங்கி கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவர். குழந்தைகளுக்கு எவ்வளவு தூக்கம் தேவைப்படும். குழந்தைகள் தூங்குவது, மீண்டும் எழுவது, பால் குடிப்பது, மீண்டும் தூங்கிவிடுவது போன்ற நடவடிக்கைகளைப் பார்க்க புதுமையாகத்தான் இருக்கும். இவ்வளவு நேரம் குழந்தைகள் தூங்குவதால் குழந்தையின் தாயோ தந்தையோ நன்றாகவே இருக்க முடியும்தானே. ஆனால், ஏன் அவர்கள் மிகவும் சோர்வாக காணப்படுகிறார்கள் தெரியுமா ?
இதோ இந்தக் கேள்விக்கான பதில். குழந்தையின் தூக்கம் நம்மைப் போல தொடர்ந்து தூங்கும் பழக்கம் இருக்காது. பிறந்த குழந்தைகள் பொதுவாக 16-17 மணி நேரம் வரை தூங்குவார்கள். ஆனால், அவர்கள் இரண்டு அல்லது நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து கொள்வார்கள். காலையில் இப்படி இருந்தால் பெற்றோரால் சமாளிக்க முடியும். ஆனால், இரவிலும் கூட இப்படி இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை குழந்தை எழுந்து கொண்டால் பெற்றோரால் சமாளிப்பது கடினம். அதனால் பல புதிய பெற்றோர்கள் குழந்தைப் பெற்றெடுத்ததும் தூக்கம் சரியாக இல்லாமல் சோர்வாக காணப்படுகிறார்கள்.
புதிய பெற்றோருக்கு குழந்தையின் தூக்கத்தைப் பற்றி பெரிதாக தெரியாது. அதற்கு சிறிய, எளிய வழிகாட்டியாக இப்போது சில டிப்ஸ்களைத் தருகிறேன். அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரி. எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி கிடையாது. ஆதலால், குழந்தையின் தூக்கம் தொடர்பான விஷயங்களைப் பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். ஆனால், தூக்கம் தொடர்பாக ஏதாவது பிரச்னை இருந்தால், நிச்சயம் நீங்கள் குழந்தைகள் நல மருத்துவரை அணுகுவது நல்லது.
குழந்தையின் தூக்கத்துக்கான காரணிகள்
குழந்தையின் தூக்கத்துக்கான விரிவுரைக்குப் போவதற்கு முன், எந்தெந்த விஷயங்கள் குழந்தையின் தூக்கத்தைப் பாதிக்கும் எனத் தெரிந்து கொள்வது முக்கியம்.
நல்ல மனநிலை தேவை
குழந்தைகள் தானே என்ன தெரிய போகிறது என நினைக்க வேண்டாம். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்கும் திறன் கொண்டவர்கள்தான் குழந்தைகள். உணர்வுகள் உணர்வுகளால் ஏற்படும் தொல்லைகள் போன்றவையால் குழந்தையின் தூக்கம் கெடலாம். அதாவது, நீங்கள் குழந்தையை தூங்க வைக்கும்போது நல்ல மனநிலையில் இல்லை என்றால் அது நிச்சயம் குழந்தையின் தூக்கத்தைக் கெடுக்கும். டென்ஷனோடு இருந்தால் குழந்தையின் தூக்கம் பாதிக்கும்.
சிறிய மாற்றங்கள் அவசியம்
குழந்தையை நீங்கள் தூங்க வைக்கும் முன், அறையில் உள்ள வெளிச்சத்தைக் குறைப்பது, அதிக ஒளி இல்லாத லைட் பயன்படுத்துவது, டிவி சத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்வது, தாலாட்டு பாடுவது, அறையில் மெல்ல தன் வேலைகளைச் செய்வது, குழந்தைக்கு தொந்தரவுகள் ஏற்படாதபடி அறையைச் சுத்தம் செய்வது, கதைகளைச் சொல்வது இப்படி பல விஷயங்களை நீங்கள் செய்தாக வேண்டும். அதுவும் கவனமாக அனைத்தையும் கையாள வேண்டும்.
கம்ஃபர்ட் முக்கியம்
குழந்தை தூங்குவதற்கான மெத்தை அதற்கு சௌகரியமாக இருக்க வேண்டும். குழந்தையை சுற்றியிருக்கும் பொருட்களும் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். அதுபோல் குழந்தை வசதியாக திரும்பி படுக்க, நகர தேவையான இடமும் இருக்க வேண்டும்.
தொடர் கவனிப்பு தேவை
குழந்தைகளை எப்போதும் தொடர்ந்து கவனிக்க வேண்டும். ஆனால், இப்போது நிறைய பெற்றோர்கள் நன்றாகவே கவனித்துக் கொள்கிறார்கள். குட்…
குழந்தைக்கு எவ்வளவு மணி நேர தூக்கம் அவசியம்?
குழந்தைகள் வளர வளர அவர்களது தூக்கத்துக்கான நேரமும் மாறிக் கொண்டே இருக்கும். குழந்தை பிறந்த பிறகும் தவழுவதற்கு முன்னரும் ஓரளவுக்கு தூக்க நேரம் ஒன்றாகவே இருக்கும்.
முதல் 3 மாதங்கள்
குழந்தை பிறந்து முதல் வாரத்தில் அவர்களுக்கு காலையும் தெரியாது இரவும் தெரியாது. தூங்கி கொண்டே இருப்பார்கள். ஒரு நாளைக்கு 16-18 மணி நேரம் தூங்குவார்கள். இரண்டு மாதம் வரை 17 மணி நேர தூக்கம் அவர்களுக்கு இருக்கும்.
மூன்றாவது மாதத்திலிருந்து 15 மணி நேரத்துக்கு கொஞ்சம் குறைவாகவே தூங்குவார்கள். குழந்தைகளை சுற்றி எல்லாமே சரியாக இருந்தால், நடந்தால் இரவில்கூட நன்றாகவே தூங்குவார்கள்.
4-6 மாதங்கள்
வல்லுநர்களின் கருத்துப்படி, இந்தக் காலத்தில் 8-12 மணி நேரம் வரை இரவில் குழந்தைகள் தூங்குவார்கள். ஆனால், இப்படி நீண்ட நேரம் இரவில் தூங்குவது ஐந்தாவது மாதத்தில்தான் தொடங்கும். ஆனால், சில குழந்தைகள் 4-வது மாதத்தில் இப்படி நீண்ட நேரம் இரவில் தூங்கினால் அதைப் பார்த்து பயப்பட வேண்டாம்.
18 மாதங்கள் வரை
6-18 மாத குழந்தைகள், ஒரு நாளைக்கு 13-14 மணி நேரம் வரை தூங்குவார்கள். இரவில் மட்டுமே 11 மணி நேரம் தூங்குவார்கள். பகலில், இரண்டு முறை சின்ன தூக்கம் போடுவார்கள். ஆனால், அவர்கள் தவழும் பருவத்தை எட்டியதும் பகலில் நீங்கள் தூங்க வைப்பதற்குள் பெரிய கச்சேரியே நடந்துவிடும். அதுபோல, இரவில் குறைந்தது 10 மணி நேர தூக்கமாவது தேவை.
மேற்சொன்ன பட்டியல், தூக்கம் நேரம் இதைப் பார்த்து உங்கள் குழந்தையின் தூக்கத்தைக் கவனியுங்கள். ஆனால், இந்தத் தகவலோடு உங்கள் குழந்தையின் தூக்கத்தை ஒப்பிட்டு பார்த்து குறைவாகவோ அதிகமாகவோ இருந்தால் பயப்பட வேண்டாம். ஏனெனில் நான் முன்னரே சொன்னதுபோல ஒவ்வொரு குழந்தைகளும் ஒவ்வொரு மாதிரி; எல்லோருமே ஒன்றாகிவிட முடியாது. உங்கள் குழந்தையின் தூக்கத்தில் ஏதாவது சிக்கல் இருப்பதாகத் தோன்றினால், குழந்தைகள் நல மருத்துவரை அணுகுங்கள்.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply