Banana for Babies in Tamil: குழந்தைகள் திட உணவு சாப்பிட ஆரம்பித்த உடனே நம் வீடுகளில் குழந்தைகளுக்கு முதலில் கொடுக்கும் பழம் என்றால் அது வாழைப்பழம் தான்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
பசிக்காக்க சாப்பிடுவதில் தொடங்கி தமிழர்களின் வீட்டு விசேஷம் வரை முன்னணி வகிப்பது வாழைப்பழம்.அந்த அளவிற்கு தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்தது வாழைப்பழம் .
மேலும் வாழைப்பழம் ஒன்று தான் எல்லா இடங்களிலும் எப்பொழுதும் கிடைக்கக்கூடியது. இதனை சுத்தம் செய்வதற்கும் அதிகமாக மெனக்கிட தேவையில்லை. குழந்தைகளுக்கு எளிதில் செரிமானம் ஆகக்கூடியது.விலைக்கு கையடக்கமானது.எல்லாவற்றிற்கும் மேலாக சுவைக்கும் பஞ்சமில்லை.
இப்படி வாழைபழத்தை நான் விரும்புவதற்கான காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். எனவே வாழைப்பழத்தினை எல்லா வேலைகளிலும் குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்று கேள்வி அம்மாக்களின் மனதில் தோன்றுவது இயற்கையான ஒன்று தான்.
குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுக்கலாமா என்ற கேள்வியை விட குழந்தைகளுக்கு எந்த வாழைப்பழம் கொடுக்கலாம்? சளி பிடித்திருக்கும்போது வாழைப்பழம் கொடுக்கலாமா? மேலும் குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுத்தால் வயிற்றுப்போக்கு ஏற்படுமா? என்ற கேள்விகளை கேட்கும் அம்மாக்கள் எங்களிடம் அதிகம்.அதற்கான விடைகளை ஒவ்வொன்றாக நாம் பார்க்கலாம்.
Banana for Babies in Tamil:
வாழைப்பழத்தின் நன்மைகள்:
- இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கிறது.
- இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றது.
- செரிமானத்திற்கு உதவுகிறது.
- சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- இரத்த சோகையை எதிர்த்துப் போராட உதவுகிறது.
- ஆற்றலை அதிகரிக்கிறது மற்றும் சோர்வை போக்க உதவுகிறது.
- மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகின்றது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக தாய்ப்பாலை மட்டுமே ஆறு மாத காலம் வரை அருந்திய குழந்தைகளின் செரிமான மணடலத்திற்கு ஏற்ற பழம்தான் வாழைப்பழம்.எனவே குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முதல் வாழைப்பழத்தினை தாராளமாக கொடுக்கலாம்.
Banana for Babies in Tamil:
குழந்தைகளுக்கு எந்த வாழைப்பழம் கொடுக்கலாம் ?
வாழைப்பழமானது உலகளவில் நிறைந்து காணப்பட்டாலும் தென்னிந்தியாவில் அதன் வகைகள் அதிகம். அதனால் இந்த கேள்வி நம்முள் ஏற்படுவது இயல்புதான். நம் சுற்றுவட்டாரங்களில் விளையும் வாழைப்பழங்களை நம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்பதே இந்த கேள்விக்கான பதில். குழந்தைகளுக்கு உகந்த வாழைப் பழங்களையும் அதன் சத்துக்களை பார்க்கலாம்.
மலை வாழைப்பழம்
அளவில் சிறியதாக இருந்தாலும் சுவை அதிகமாக இருக்கும் இந்த வாழைப்பழத்தை தான் நம் வீடுகளில் முதன்முதலில் குழந்தைகளுக்கு கொடுப்பது வழக்கம். இந்த பழத்தில் தண்ணீர் சத்துக்கள் அதிகமென்பதால் குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளும் . மேலும் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினின் அளவினை அதிகரிக்க வல்லது.இந்த பழத்தினை வேகவைக்க கூட தேவையில்லை.நேரடியாக ஆறு மாதத்திலிருந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
நேந்திரம் பழம்
பழங்களின் அரசன் என அழைக்கப்படும் இப்பழமானது கேரளாவில் அதிகம் விளைவதால் இது கேரளா வாழைப்பழம் எனவும் அழைக்கப்படுகின்றது. குழந்தைகளுக்கு கேரளா வாழைப்பழத்தினை வட்டமாக நறுக்கி,ஆவியில் வேகவைத்து மசித்துக் கொடுக்கலாம். இந்த வாழைப்பழம் எல்லா சீசனிலும் கிடைக்காது என்பதால் இதனை உலரவைத்து பொடியாக செய்து வைத்துக்கொண்டால் குழந்தைகளுக்கு தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
கால்சியம், இரும்புச்சத்து,நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை மற்ற பழத்தினை காட்டிலும் இதில் அதிகம் என்பதால் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியமான எடை அதிகரிப்பிற்கு இந்த வாழைப்பழம் உறுதுணையாக இருக்கும்.
நேந்திரம் பழ பொடியினை வீட்டிலேயே செய்ய நேரம் இல்லாத அம்மாக்களா நீங்கள்? கவலை வேண்டாம்.நாங்களே பிரெஷ்ஷாக தயாரித்து உங்களுக்கு கொடுக்கின்றோம்.
செவ்வாழை
அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அதேசமயம் கொழுப்பு சத்துக்கள் இல்லாத பழமாகும். இனிப்பு சுவை அதிகம் நிறைந்த செவ்வாழைப்பழமானது பீட்டா கரோட்டின்,பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றை உள்ளடக்கியது. எனவே இது கண் பார்வைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.இதை வேகவைக்காமல் நேரடியாக குழந்தைகளுக்கு மசித்துக் கொடுக்கலாம்.
குறிப்பு :அதிகம் பழுத்த பழத்தில் பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்கும் என்பதால் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது.
நாட்டு வாழைப்பழம்
இரத்த சோகை,இரத்த கொதிப்பு,வயிற்றுப்புண் ஆகியவற்றுக்கெல்லாம் சிறந்த மருந்தாகும். நாட்டு வாழைப்பழம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால் கோடை காலத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.ஆனால் இது மற்ற வாழைப்பழத்தைப் போல செரிமானம் ஆவதில் சிறிது கடினம் என்பதால் ஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு இந்த வாழைப்பழத்தினை கொடுக்கலாம்.
சளி பிடித்திருக்கும் பொழுது வாழைப்பழம் கொடுக்கலாமா?
அம்மாக்கள் என்னிடம் அதிகமாக கேட்கும் கேள்வி குழந்தைகளுக்கு சளி பிடித்திருக்கும் போது வாழைப்பழம் கொடுக்கலாம் என்பதே. அளவாக கொடுத்தால் எதுவும் ஆகாது என்பதே இதற்கான பதில். மேலும் வாழைப்பழத்தில் வைட்டமின் சி இருப்பதால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் எனவே சளி பிடித்திருக்கும் போது அதிலிருந்து குணமாவதற்கு வாழைப்பழம் உதவியாக இருக்கும் என்பதே உண்மை. ஆனால் இரவு நேரத்தில் கொடுக்காமல் குழந்தைகளுக்கு பகல் நேரத்தில் கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு வாழைப்பழத்தினை எப்படி கொடுக்கலாம்?
குழந்தைகளுக்கு ஆறு மாத காலத்தில் முதல் முதலாக வாழைப்பழம் கொடுக்கும் போது அதனை மசித்து கொடுப்பதே சிறந்தது.மேலும் முதன்முதலாக கொடுக்கும்போது மூன்று நாள் விதியினை பின்பற்றுவது நலம்.உங்கள் குழந்தைகள் மற்ற பழங்களை சிரமப்படாமல் சாப்பிட ஆரம்பித்து விட்டால் அந்த பழங்களுடன் சுவைக்காக வாழைப்பழத்தினை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
ஒரு வயதிற்கு கீழ் சர்க்கரை சேர்க்க கூடாது என்பதால் சர்க்கரைக்கு பதிலாக வாழைப்பழத்தினை உணவுகளில் சேர்த்துக் கொடுக்கலாம்.மேலும் எட்டு மாத குழந்தைக்கு பிங்கர் புட்டாகவும் கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply