Banana Rava Halwa for Babies: குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய சிம்பிளான ஸ்வீட் ரெசிபி தான் இந்த வாழைப்பழ ரவா அல்வா.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஸ்வீட் என்றாலே அனைவருக்கும் பிடித்த விஷயம் தான். ஆனால் இன்று பெருகி வரும் நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் குறித்த பயத்தின் காரணமாக குழந்தைகளுக்கும் ஸ்வீட் கொடுப்பதற்கு பயமாக தான் இருக்கின்றது.மேலும் ஒரு வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு சர்க்கரை கொடுக்கக்கூடாது என்பது நாம் அறிந்த விஷயமே.
இன்று கிடைக்கும் எல்லா வகையான ஸ்வீட்களிலும் சீனி தான் சேர்க்கப்படுகின்றது.ஆனால் எட்டு மாதத்திற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு நாட்டு சர்க்கரை போன்றவையும் சேர்க்கக்கூடாது. அப்படி என்றால் குழந்தைகளுக்கு ஸ்வீட் எவ்வாறு கொடுப்பது என்று தானே யோசிக்கிறீர்கள்.கவலை வேண்டாம்.
குழந்தைகளுக்கு இந்த வாழைப்பழ ரவா அல்வாவினை செய்து கொடுங்கள். வாழைப்பழத்தில் உள்ள இனிப்பு சுவையை போதுமானதே தனியாக சர்க்கரை எதுவும் செய்யத் தேவையில்லை. ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு விருப்பப்பட்டால் நாட்டு சக்கரை சேர்த்துக் கொள்ளலாம்.
Banana Rava Halwa for Babies:
இதையும் படிங்க:குழந்தைகளுக்கான பால் சாதம்
Banana Rava Halwa for Babies:
- நெய்- 1 டே.ஸ்பூன்
- ரவை -2 டீ.ஸ்பூன்
- தண்ணீர் -1 கப்
- வாழைப்பழம்- 1
Banana Rava Halwa for Babies:
செய்முறை
1..வாழைப்பழத்தை நன்றாக மசித்து வைக்கவும்.
2.கடாயில் நெய்யை ஊற்றி சூடாக்கவும்.
3.ரவையினை சேர்த்து நறுமணம் வருமளவிற்கு வறுக்கவும்.
4.தண்ணீர் சேர்த்து கலவை கெட்டியாக வருமளவிற்கு கிளறவும்.
5.மசித்து வைத்த வாழைப்பழத்தை சேர்த்து 1 முதல் 2 நிமிடங்கள் சமைக்கவும்.
6.வாழைப்பழ ரவா அல்வா ரெடி.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமலைப் போக்கும் 3 வைத்தியங்கள்
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
குழந்தைகளுக்கு எந்த மாதத்தில் இருந்து வாழைப்பழம் ரவா அல்வாவை கொடுக்கலாம்?
குழந்தைகளுக்கு நீங்கள் ஆறு மாத காலத்திற்கு பின்னர் முதல் உணவு கொடுக்க ஆரம்பித்த பின்பு இந்த ரவா அல்வாவை செய்து கொடுக்கலாம்.
குழந்தைங்களுக்கு ஆரோக்கியமானதா?
இதில் சர்க்கரை எதுவும் சேர்க்காமல் வாழைப்பழம் மற்றும் ரவை சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது.
ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு எப்படி கொடுக்கலாம்?
ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு இனிப்பு சுவைக்காக நாட்டுச் சர்க்கரை, டேட்ஸ் பவுடர் போன்றவற்றை சேர்த்துக் கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கான வாழைப்பழ ரவா அல்வா
Ingredients
- 1 டே.ஸ்பூன் நெய்
- 2 டீ.ஸ்பூன் ரவை
- 1 கப் தண்ணீர்
- 1 வாழைப்பழம்
Notes
- வாழைப்பழத்தை நன்றாக மசித்து வைக்கவும்.
- கடாயில் நெய்யை ஊற்றி சூடாக்கவும்.
- ரவையினை சேர்த்து நறுமணம் வருமளவிற்கு வறுக்கவும்.
- தண்ணீர் சேர்த்து கலவை கெட்டியாக வருமளவிற்கு கிளறவும்.
- மசித்து வைத்த வாழைப்பழத்தை சேர்த்து 1 முதல் 2 நிமிடங்கள் சமைக்கவும்.
- வாழைப்பழ ரவா அல்வா ரெடி.
Leave a Reply