Banana Wheat kanji for 7 months baby: குழந்தைகளுக்கு முதல் முதலாக உணவு கொடுப்பது என்பது அம்மாக்களுக்கு மிகவும் பிடித்தமான மற்றும் சவாலான விஷயமாகும். ஏனென்றால் அதுவரை உணவின் சுவையை அறியாத குழந்தைகள் நீங்கள் முதன்முதலாக உணவினை கொடுக்கும் பொழுது மிகவும் ஆர்வமுடன் உணவினை வாங்கி நாக்கினை சப்பி சப்பி சாப்பிடும் அழகை பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அதற்காகவே குழந்தைகளுக்கு எப்படி எல்லாம் உணவு ஊட்ட வேண்டும், என்னென்னவெல்லாம் ஆரோக்கியமாக செய்து ஊட்ட வேண்டும் என்று ஆர்வமாக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து கொடுப்போம். ஆனால் இந்த கதை எல்லாம் ஒரு மாதத்திற்கு தான்.
அதற்குப் பிறகு உணவினை சுவைக்க ஆரம்பித்த குழந்தைகள் மறுபடியும் அதே உணவினை கொடுக்கும் பொழுது ஆர்வமின்மை காரணமாக சுவைக்க மறுப்பார்கள் அப்பொழுதுதான் அம்மாக்களுக்கு பெரும் சவால் ஆரம்பமாகும். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவினை கொடுக்க வேண்டும் அதே நேரம் குழந்தைகளின் நாவிற்கு சுவையாகவும் இருக்க வேண்டும் இந்த இரண்டும் சேர்ந்து எந்த வகையான உணவை கொடுப்பது என்பதில்தான் அம்மாக்களுக்கு சிரமம் ஏற்படும்.
அதற்காக தான் நாங்கள் ஒவ்வொரு ரெசிபியையும் பார்த்து பார்த்து குழந்தைகளுக்காக எது ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் சுவையாக இருக்கும் என்பதை தேர்ந்தெடுத்து உங்களுக்கு தருகின்றோம். அதே வரிசையில் குழந்தைகளுக்கு ஏழு மாதத்தில் இருந்து கொடுக்கக்கூடிய ஆரோக்கியமான மற்றும் சுவையான ரெசிபி தான் வாழைப்பழ கோதுமை கஞ்சி.
அதுமட்டுமல்லாமல் குழந்தைகளின் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்க செய்யவும் இந்த ரெசிபி மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த ரெசிபியினை குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது தானியத்தின் நன்மை மற்றும் பழங்களின் சத்து என இரண்டும் ஒரு சேர கிடைப்பதால் குழந்தைகளுக்கு கண்டிப்பாக எனர்ஜி நிறைந்த உணவாக இருக்கும்.
Banana Wheat kanji for 7 months baby:
Banana Wheat kanji for 7 months baby
இந்த ரெசிபியினை பார்ப்பதற்கு முன்னால் இதில் ஒளிந்துள்ள நன்மைகளை பார்க்கலாம்.
- கோதுமை மற்றும் வாழைப்பழம் ஆகிய இரண்டும் குழந்தைகளுக்கு ஏராளமான ஊட்டச்சத்துக்களை கொடுக்க கூடியவை.
- இதில் உள்ள கோதுமையானது கார்போஹைட்ரேட்டுகள், நார் சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
- மேலும் வாழைப்பழமானது குழந்தைகளின் உணவில் இயற்கையான இனிப்புசுவையை கொடுக்க வல்லதால் குழந்தைகள் விரும்பி வாங்கி உண்பர்.
- மேலும் வாழைப்பழத்தில் பொட்டாசியம்,வைட்டமின் சி, வைட்டமின் பி6 ஆகிய சத்துக்கள் உள்ளன. கோதுமை மற்றும் வாழைப்பழம் ஆகிய இரண்டிலும் இரண்டிலும் கார்போஹைட்ரேடுகள் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கான எனர்ஜியை தரக்கூடியவை.
- மேலும் இயற்கையிலேயே இதில் இனிப்பு சுவையை நிறைந்துள்ளதால் குழந்தைகள் வேகமாக தேவையான ஆற்றலை வழங்குகின்றது.
- அது மட்டுமல்லாமல் குழந்தைகளின் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கவும் செய்கின்றது.வாழைப்பழம் மற்றும் கோதுமையில் உள்ள நார்ச்சத்துக்கள் குழந்தைகளின் உணவினை எளிதாக செரிக்க வைக்க உதவுகின்றது.
- இந்த உணவினில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம் போன்றவை குழந்தைகளின் நோய் எதிர்ப்புமண்டலத்தை வலுவாக்கக் கூடியவை.
- குழந்தைகளின் நாவில் சுவைத்து உண்பதற்கு ஏற்ப இந்த கஞ்சியானது மிகவும் வளவளப்பாக மென்மையாக இருப்பதால் குழந்தைகள் எளிதாக உண்பதற்கு வசதியாக இருக்கும்.
- கோதுமை மற்றும் வாழைப்பழம் இரண்டுமே குழந்தைக்கு அலர்ஜி ஏற்படுத்தாத உணவாகும். எனவே தாராளமாக கொடுக்கலாம்.
Banana Wheat kanji for 7 months baby:
- வாழைப்பழம் -1
- கோதுமை மாவு -2 டேபிள் ஸ்பூன்
- நெய்- 1 டேபிள் ஸ்பூன்
- பால் -2 டேபிள் ஸ்பூன் (ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு மட்டும்)
Banana Wheat kanji for 7 months baby:
செய்முறை
- வாழைப்பழத்தை வட்ட வட்டமாக வெட்டவும்.
- மிக்ஸி ஜாரில் வாழைப்பழத்தை போட்டு நன்கு நைசாக அரைக்கவும்.
- கடாயில் நெய்யினை ஊற்றி சூடாக்கி அதில் கோதுமை மாவினை போட்டு நறுமணம் வரும் வரை லேசாக மிதமான சூட்டில் வறுக்கவும்.
- மெதுவாக தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறவும்.
- பின்பு அரைத்து வைத்த வாழைப்பழத்தை சேர்த்து நன்றாக கிளறவும்.
- கஞ்சி பதத்திற்கு வரும் வரை இரண்டு நிமிடங்களுக்கு இடைவிடாமல் கிளறவும். குறிப்பு: ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு இரண்டு முதல் மூன்று டேபிள் ஸ்பூன் தாய்ப்பால் அல்லது ஃபார்முலா மில்க் சேர்க்கலாம்.
- ஒரு வயதிற்கு மேலே ள்ள குழந்தைகளுக்கு இரண்டு முதல் மூன்று டேபிள் ஸ்பூன் பசும்பாலை சேர்க்கலாம்.
- கடைசியாக பாலை சேர்த்து நன்றாக கிளறவும்.
- குழந்தைகளுக்கு பரிமாறவும்.
இந்த ரெசிபியானது 7 மாத குழந்தைகளிலிருந்து கொடுப்பதற்கு ஏற்றதாகும் மேலும் வாழைப்பழம் மற்றும் கோதுமை மாவு இரண்டுமே வீட்டில் எப்பொழுதும் அன்றாடம் இருக்கக்கூடிய உணவுகள் என்பதால் நீங்கள் சட்டென்று குழந்தைகளுக்கு ஏதேனும் ஆரோக்கியமாக கஞ்சி செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் இதனை ஈசியாக செய்து கொடுக்கலாம். மேலும் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் போன்றவை குழந்தைகளின் உடலுக்கு நன்மை அளிக்கும். எனவே நீங்கள் தாராளமாக இந்த ரெசிபியினை தயங்காமல் கொடுக்கலாம்.
Banana Wheat kanji for 7 months baby:
Banana Wheat kanji for 7 months baby
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை அறிய 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
கோதுமை வாழைப்பழ கஞ்சியை குழந்தைகளுக்கு எப்பொழுது கொடுக்க ஆரம்பிக்கலாம்?
குழந்தைகளுக்கு ஏழாவது மாதம் முதல் இந்த கோதுமை வாழைப்பழக் கஞ்சியை நீங்கள் தாராளமாக கொடுக்கலாம். ஆனால் ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது பசும்பால் சேர்க்கக்கூடாது.
குழந்தைகளுக்கு இந்த கஞ்சியினை எப்பொழுது கொடுக்கலாம்?
பொதுவாக குழந்தைகளுக்கு முதல் முதலாக உணவு கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது காலை அல்லது மதிய வேளையில் கொடுப்பது சிறந்தது. எனவே நீங்கள் முதலில் கொடுக்க ஆரம்பித்தால் காலை மற்றும் மதிய உணவாக கொடுக்க ஆரம்பிக்கலாம். குழந்தைகளுக்கு நன்கு செரிமானமாக பழகிய பின்னர் இரவு உணவாக கொடுத்துப் பார்க்கலாம்.
Leave a Reply