Broccoli Pasta: நம் வீட்டில் உள்ள குட்டி செல்லங்கள் எல்லாம் அம்மாக்களிடம் மறக்காமல் கேட்கும் கேள்வி இன்னைக்கு என்ன ஸ்பெஷல் என்பதுதான். அவர்களிடம் நாம் இட்லி, தோசை என்று சொன்னால், இன்னைக்கும் அதே தானா என்று சொல்பவர்கள் தான் அதிகம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
இதைத் தவிர நமக்கு இருக்கும் அடுத்த தேர்வு சப்பாத்தி மற்றும் பூரி தான். இவற்றைத் தாண்டியும் எதையும் யோசிக்க முடியாத அம்மாக்களுக்கு நான் தரும் வித்தியாசமான ரெசிபி தான் ப்ரோக்கோலி பாஸ்தா.
பொதுவாக பாஸ்தாவினை நாம் அடிக்கடி வீடுகளில் செய்ய மாட்டோம். அதில் மைதா செய்துள்ளதால் குழந்தைகளின் உடலுக்கு தீங்கு என்று நாம் தவிர்த்திருப்போம். ஆனால், மைதா சேர்க்காமல் கோதுமை பாஸ்தாவும் தற்பொழுது கடைகளில் கிடைப்பதால், கோதுமை பாஸ்தாவினை குழந்தைகளுக்கு பிடித்தவாறு செய்து கொடுக்கலாம்.
பாஸ்தாவுடன், ப்ரோக்கோலியும் சேர்த்து இருப்பதால் குழந்தைகளுக்கான சத்தான காலை உணவாக இது அமையும். பிரக்கோலியினை சாதாரணமாக செய்து கொடுத்தால் குழந்தைகள் உண்ண மாட்டார்கள்.
பாஸ்தாவுடன் செய்து கொடுக்கும் பொழுது உணவின் நிற முதல், அமைப்புவரை அனைத்து மாறுபடுவதால் குழந்தைகளுக்கு வித்தியாசமான உணவினை சாப்பிட்டது போன்ற திருப்தி ஏற்படும்.
Broccoli Pasta:
இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் ப்ரோக்கோலியில் நிறைந்துள்ள நன்மைகளைப் பற்றி பார்க்கலாம்:
- ப்ரோக்கோலியில் வைட்டமின் C,K மற்றும் வைட்டமின் A போன்றவை நிறைந்துள்ளன. இவை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கின்றன.
- ப்ரோக்கோலியில் நார்ச்சத்துக்கள் அதிகம் என்பதால் உணவினை நன்கு செரிமானமாக செய்து, மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது.
- இதில் கால்சியம் அதிகம் என்பதால் குழந்தைகளின் எலும்புகள் வளர்வதற்கு தேவையான சக்தியை அளிக்க வல்லது.
- ப்ரோக்கோலியில் நிறைந்துள்ள ப்ரோட்டீன் சத்துக்கள் தசைகளுக்கு வலிமை அளிக்க கூடியது.
- ப்ரோக்கோலியில் நிறைந்துள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.
- மேலும் இதில் ஆண்டி ஆக்சிடெண்ட் கள் அதிகமாக இருப்பதால் உடையாமல் பாதுகாக்க கூடியது.
- ப்ரோக்கோலியை தொடர்ந்து உட்கொண்டால் கண்களுக்கு ஆரோக்கியம் அளிக்கப்படும்.
- மூளை நன்றாக செயல்படுவதற்கு தேவையான சக்தியினை கொடுக்கின்றது.
Broccoli Pasta:
- பாஸ்தா
- ப்ரோக்கோலி இதழ்கள்- 2 கப்
- கடலை எண்ணெய்- தேவையான அளவு
- பூண்டு- 2 பல்
- சீஸ்( துருவியது) – கால் கப்
- உப்பு மற்றும் மிளகுத்தூள்.
Broccoli Pasta:
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு கொதிக்க விடவும். பாஸ்தாவினை அதில் போட்டு மூன்று நிமிடங்களுக்கு பிறகு ப்ரோக்கோலியை அதில் சேர்த்து, பாஸ்தா மென்மையானதும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
- ஏதேனும் சந்தேகம் இருந்தால் பாஸ்தா பாக்கெட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை பார்த்துக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பொடியாக நறுக்கிய பூண்டினை சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு நன்கு வாசனை வரும் அளவிற்கு வதக்கவும்.
- தண்ணீரில் வேக வைத்த ப்ரோக்கோலி மற்றும் பாஸ்தாவை சேர்க்கவும். கிளறி உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும்.
- துருவியச் சீசை மேலே தூவி விடவும். சீஸ் உருகும் வரை நன்றாக கிளறவும்.
ப்ரோக்கோலி பாஸ்தா குழந்தைகளுக்கு சுவையை மட்டுமல்லாமல் நார் சத்துக்கள், வைட்டமின்கள், மினரல்கள் ஆகியவற்றையும் அள்ளித்தரும் ஆரோக்கியமான உணவாகும்.
Broccoli Pasta:
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ப்ரோக்கோலி பாஸ்தாவை சிறுவர்களுக்கு கொடுக்கலாமா?
ப்ரோக்கோலி மற்றும் பாஸ்தா ஆகிய இரண்டுமே குழந்தைகளுக்கு நன்மை சேர்ப்பது. இவற்றை நன்கு மிருதுவாக வேக வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
வேறு காய்கறிகளை சேர்க்கலாமா?
கேரட், பச்சை பட்டாணி மற்றும் குடைமிளகாய் போன்றவற்றையும் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
பாஸ்தா குழந்தைகளுக்கு நன்மை அளிக்க கூடியதா?
மைதா பாஸ்தாவிற்கு பதிலாக கோதுமை பாஸ்தா அல்லது தானியங்கள் கலந்த பாஸ்தாவினை கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு நன்மை அளிக்கக் கூடியது.
ப்ரோக்கோலி பாஸ்தா
Ingredients
- பாஸ்தா
- ப்ரோக்கோலி இதழ்கள்- 2 கப்
- கடலை எண்ணெய்- தேவையான அளவு
- பூண்டு- 2 பல்
- சீஸ் துருவியது - கால் கப்
- உப்பு மற்றும் மிளகுத்தூள்
Notes
- ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு கொதிக்க விடவும். பாஸ்தாவினை அதில் போட்டு மூன்று நிமிடங்களுக்கு பிறகு ப்ரோக்கோலியை அதில் சேர்த்து, பாஸ்தா மென்மையானதும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
- ஏதேனும் சந்தேகம் இருந்தால் பாஸ்தா பாக்கெட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை பார்த்துக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பொடியாக நறுக்கிய பூண்டினை சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு நன்கு வாசனை வரும் அளவிற்கு வதக்கவும்.
- தண்ணீரில் வேக வைத்த ப்ரோக்கோலி மற்றும் பாஸ்தாவை சேர்க்கவும். கிளறி உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும்.
- துருவியச் சீசை மேலே தூவி விடவும். சீஸ் உருகும் வரை நன்றாக கிளறவும்.
Leave a Reply