Broccoli Sadham: குழந்தைகளுக்கான மதிய உணவு ரெசிபியை பார்க்கும்பொழுது தயிர் சாதம், தக்காளி சாதம், கீரை சாதம் மற்றும் பருப்பு சாதம் என பல வகையான சாதங்களை நான் பார்த்து விட்டோம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அந்த வகையில் இன்று நாம் பார்க்க போகும் ரெசிபி ஆரோக்கியமான ப்ரோக்கோலி சாதம். பார்ப்பதற்கு பச்சை நிற காலிஃப்ளவர் போன்று தோற்றமளித்தாலும் ப்ரோக்கோலி எனப்படும் காய்கறி ஆனது எண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கியது ஆகும்.
இதனை வாரம் ஒரு முறை குழந்தைகளின் உணவு பட்டியலில் சேர்த்துக் கொண்டால் குழந்தைகளுக்கான விட்டமின்களும் உடலுக்கு கிடைக்கும். நாம் அடிக்கடி கடைகளில் இந்த காய்கறியை பார்த்தாலும், இதனை எப்படி குழந்தைகளுக்கு கொடுப்பது என்ற சந்தேகம் நம்மில் இருக்கும்.
எனவே தான் இந்த ஆரோக்கியமான சாதத்தை உங்களுக்கு ரெசிபியாக கொடுத்துள்ளேன். குழந்தைகளுக்கு முதல் உணவு கொடுக்க ஆரம்பித்தவுடன், அடிப்படையான காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை வேகவைத்து மசித்து கொடுக்க ஆரம்பித்த பின்பு இந்த ப்ரோக்கோலி சாதத்தை கொடுக்கலாம்.
Broccoli Sadham
ஒரு வயதிற்கு உள்ளே உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது உப்பு மற்றும் அதிகப்படியான மசாலாக்கள் சேர்க்காமல் சிம்பிளாக செய்து கொடுக்கலாம். ப்ரோக்கோலி சாதத்தை பற்றி பார்ப்பதற்கு முன்னால் ப்ரோக்கோலியை உண்பதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்:
Broccoli Sadham
- ப்ரோக்கோலியில் குழந்தைகளின் உடலுக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்களான வைட்டமின் சி, கே மற்றும் ஏ போன்றவையும் போலெட், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன.
- இந்த வைட்டமின்கள் நோய் எதிர்ப்பு சக்தி, குழந்தைகளின் எலும்பு வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- இது நார் சத்துக்கள் அதிகமாக உள்ளதால் குழந்தைகளுக்கு உணவினை எளிதில் செரிமானம் செய்கின்றது. இதனால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் தொந்தரவு ஏற்படாது.
- இதில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் இருப்பதால் பார்த்துக் கொள்கின்றது.
- இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றது.
- இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் கே எனப்படும் சத்து பற்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- ப்ரோக்கோலியில் காணப்படும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை ஆரோக்கியமான சருமத்திற்கு உதவுகின்றது.
- மேலும் இதில் காணப்படும் சத்துக்கள் குழந்தைகளின் மூளை திறனை அதிகரித்து ஞாபக சக்தியை அதிகரிக்க வல்லது.
- இதில் கேன்சரை எதிர்த்துப் போராடும் பண்புகள் அதிகம் உள்ளன.
- இதில் உள்ள நார் சத்துக்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் வைட்டமின்கள் போன்றவை இதயத்தில் உள்ள கொழுப்புகளை குறைத்து ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கின்றது.
- ப்ரோக்கோலியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்கின்றது மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றது.
Broccoli Sadham:
- சாதம்- அரை கப்
- துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பு- அரை கப்
- வெங்காயம்- 1
- தக்காளி- 1
- பச்சை மிளகாய்- 1
- பூண்டு- 4 பல்
- மஞ்சள் தூள்- இம்மியளவு
- ப்ரோக்கோலி- 1 கப்
- உருளைக்கிழங்கு-1
- கொத்தமல்லி இலைகள்- சிறிய அளவு
- தண்ணீர்-3.5 கப்
- உப்பு- தேவையான அளவு
தாளிப்பதற்கு,
- நெய்-2 டேபிள்ஸ்பூன்
- சீரகம்-1/2 டீஸ்பூன்
- பெருங்காயம்- இம்மியளவு
Broccoli Sadham:
செய்முறை
- ப்ரோக்கோலியை தண்ணீரில் நன்றாக கழுவி சிறுசிறு இதழ்களாக பிரித்து வைக்கவும்
- ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டு அதில் உப்பு மற்றும் மஞ்சள் போட்டு கொதிக்க விடவும். அடுப்பை அணைத்தவுடன், ப்ரோக்கோலி இதழ்களை அதில் போட்டு ஐந்து நிமிடங்களுக்கு தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.
- உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கவும்.
- அரிசி மற்றும் பருப்பினை நன்றாக கழுவி பத்து நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
- குக்கரில் ஊற வைத்த அரிசி மற்றும் பருப்பு, மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்க்கவும். நான்கு கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் நான்கு விசில் வரும் அளவிற்கு வேக வைக்கவும்.
- ஒரு கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி, அதில் சீராக மட்டும் பெருங்காயத்தூளை சேர்க்கவும்.
- அதில் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும். வெங்காயம் சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை விற்கவும்.
- இதற்கு பின்னர் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- ப்ரோக்கோலியை மிக்ஸியில் போட்டு ஒன்று இரண்டாக இரண்டு நிமிடத்திற்கு அரைத்து எடுக்கவும்.
- ப்ரோக்கோலியை கடாயில் போட்டு ஐந்து நிமிடங்களுக்கு மிதமான தீயில் ப்ரோக்கோலி நன்றாக வேகம் வரை அடுப்பை அணைக்கவும்.
- பிரஷர் குக்கரில் ஏற்கனவே வேக வைத்த சாதத்துடன் இந்த கலவையை போட்டு நன்றாக கலக்கவும்.
- கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.
- ஏற்கனவே கூறியது போல் ஒரு வயதிற்கும் கீழே உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கப் போகின்றோம் என்றால் உப்பு மற்றும் மிளகாய் போன்றவற்றை சேர்க்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.
Broccoli Sadham
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Broccoli Sadham:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பிரஷான பிரக்கோலிக்கு பதிலாக பதப்படுத்தப்பட்ட ப்ரோக்கோலி தரலாமா?
ஃபிரஷான காய்கறி கிடைக்காத பட்சத்தில் பதப்படுத்தப்பட்ட ப்ரோக்கோலியை பயன்படுத்தலாம்.
கிச்சடியில் மற்ற காய்கறிகளை சேர்க்கலாமா?
காரணமாக குழந்தைகளுக்கு பிடித்த காய்கறிகளான கேரட், பச்சை பட்டாணி மற்றும் கீரை போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
Leave a Reply