Can water be given to infants: குழந்தை பிறந்தவுடன் அனைத்து அம்மாக்களுக்கும் பொதுவாக எழும் கேள்வி குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கலாமா என்பதே?
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
10 மாத காலம் தன் குழந்தைகளை பொத்தி பொத்தி கருவில் வளர்த்த அம்மாவிற்கு குழந்தை வெளியே வந்ததும் மனதில் எழும் சந்தோசத்திற்கு அளவே இருக்காது.
அதே நேரம் பல்வேறு சந்தேகங்களும் குடிகொள்ளும்.தாய்ப்பால் அருந்தும் முறை, குழந்தை தூங்கும் முறை,குழந்தைகளின் சிறு சிறு அசைவுகள், குழந்தைகளின் அழுகை போன்ற எல்லாவற்றிலும் அம்மாவிற்கு சந்தேகங்கள் எழும்.
நம் உடன் இருந்து அறிவுரைகள் சொல்ல பெரியோர்கள் அருகில் இருந்தாலும் சில விஷயங்கள் அவர்களின் அறிவிற்கும் எட்டாக்கனியாக இருக்கும். அவற்றில் ஒன்றுதான் குழந்தைகளுக்கு தண்ணீர் அருந்த கொடுக்கலாமா அல்லது வேண்டாம் என்பதே.
Can water be given to infants:
இதற்கான விடையினை நாம் இப்பொழுது பார்க்கலாம். தண்ணீர் என்பது நம் உறுப்புகளின் ஆரோக்யமான வளர்ச்சிக்கும், சீரான இயக்கத்திற்கும் இன்றியமையாத ஒன்று என்று நாம் அனைவரும் அறிந்ததே.
ஆனால் மனிதனின் வயதுக்கு ஏற்றவாறு இந்த தேவையானது மாறுபடும். ஆறு மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கலாமா என்ற கேள்விக்கு உலக சுகாதார நிறுவனத்தின் தெளிவான பதில் தேவை இல்லை என்பதாகும்.
ஏனென்றால் நாம் குழந்தைகளுக்கு கொடுக்கும் தாய்ப்பாலானது 80 சதவீதம் தண்ணீரை கொண்டுள்ளது. இதுவே குழந்தைகளின் கோடை காலத்திற்கும் தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய போதும் என்பதால் குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் வரை தண்ணீர் கொடுக்க தேவை இல்லை.
தாய் பாலினை தவிர்த்து ஃபார்முலா மில்க் அருந்தும் குழந்தைகளுக்கும் தண்ணீரானது ஆறு மாத காலம் வரை தேவைப்படாது. வெயில் காலத்தில் தண்ணீரின் தேவை குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் தாய்ப்பாலை அடிக்கடி அருந்த கொடுக்கலாம் என்பதே அதற்கான பதில்.
குழந்தைகளுக்கு ஆறு மாத காலத்திற்குள்ளாக தண்ணீர் கொடுப்பதால் ஏற்படும் தொந்தரவுகள்: தண்ணீர் கொடுப்பதால் குழந்தைகளின் வயிறு சீக்கிரம் நிறைந்துவிடும்.
இது தாய்ப்பால் அருந்துவதை குறைத்து தாய்க்கும் தாய்ப்பால் சுரப்பும் குறைந்துவிடும். குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுப்பதினால் செரிமான பிரச்சனை ஏற்பட்டு வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடும்.குழந்தைகளுக்கு தாய்ப்பால் மூலம் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்தையும் இது குறைக்கும்.
ஆறு மாத காலத்திற்கு பிறகு குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கலாமா?
குழந்தைகளுக்கு 6 மாத காலத்திற்கு பின்பாக திட உணவு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும் என்பது உலக சுகாதார சுகாதார நிறுவனத்தின் கூற்றாகும்.
அவ்வாறு குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க ஆரம்பிக்கும் பொழுதே தேவையான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமாகும்.
ஆறு மாத காலத்திற்கு பின்பு குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் தண்ணீரானது குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உணவு செரிமானம் ஆவதற்கு மிகவும் முக்கியமானதாகும்.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தாலும் தாய்ப்பாலுடன் சேர்த்து தண்ணீர் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுத்து பழக்கும் பொழுது சிப்பரில் கொடுப்பதற்கு பதிலாக டம்ளரில் கொடுத்து பழகலாம்.
டம்ளரில் கொடுத்து பழகும்போது குழந்தைகள் தங்களுக்கு தேவையான தண்ணீரை உறிஞ்சிக் கொள்வர்.
மேலும் இது சுகாதாரம் ஆனதும் கூட. குழந்தைகளுக்கு முதலில் தண்ணீர் கொடுக்க ஆரம்பிக்கும் போது சிறிது சிறிதாக கொடுத்து பின்பு அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு தண்ணீர் அருந்த கொடுக்கலாம்.
குழந்தைகள் குறிப்பிட்ட இடைவெளியில் சீராக சிறுநீர் கழிக்கும் வரை நீங்கள் குடிக்கும் தண்ணீரின் அளவை பற்றி கவலை கொள்ள தேவையில்லை.
சிறுநீரின் நிறமானது மஞ்சள் நிறத்திலோ அல்லது அடர் மஞ்சள் நிறத்தில் இருப்பின் நீங்கள் கவனம் கொள்ள வேண்டும்.
Can water be given to infants:
சிறுவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் ஒரு நாளைக்கு அருந்த கொடுக்க வேண்டும்?
Can water be given to infants:
தாய்மார்களுக்கு பொதுவாக எழும் சந்தேகம் தான் இந்த கேள்வி. உண்மையில் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு இவ்வளவு தான் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பது எந்த அளவீடும் இல்லை. மாறாக இந்த அளவானது குழந்தைகளுக்கு குழந்தை வேறுபடும்.
குழந்தைகளின் செரிமான அளவு,விளையாடும் நேரம் தட்பவெட்பநிலை அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவு போன்ற சில காரணிகளை பொறுத்து தண்ணீரின் தேவை அமையும். பொதுவாக குழந்தைகளும் பெரியவர்களை போலவே தங்கள் தாகத்திற்கு ஏற்றவாறு தண்ணீரை எடுத்துக் கொள்வர்.
அதற்கு மேல் தண்ணீர் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். நாம் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியது குறிப்பிட்ட இடைவெளியில் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் அவ்வளவே.
நான் ஏற்கனவே சொன்னவாறு குழந்தைகளின் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இல்லாதவரை நாம் தண்ணீரின் அளவை பற்றி கவலை கொள்ள தேவை இல்லை.
குழந்தைகளுக்கு கொதிக்க வைத்த தண்ணீர் தான் கொடுக்க வேண்டுமா?
Can water be given to infants:
அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் என்ற நிறுவனத்தின் கூற்றுப்படி குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் சாதாரண தண்ணீரே சுத்தமானது என்று தான் நீங்கள் கருதினால் தண்ணீரை கொதிக்க வைக்க தேவையில்லை.
தண்ணீரில் மாசு இருக்கின்றது என்று நீங்கள் கருதினால் கண்டிப்பாக கொதிக்க வைத்து ஆறவைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
ஆனால் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் தண்ணீரினை ஒரு நிமிடத்திற்கு மேல் கொதிக்க வைக்கக் கூடாது.அதேபோன்று கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரை அரை மணி நேரத்திற்கு மேல் வைத்திருக்கக் கூடாது.
குழந்தைகளுக்கு ஒரு வயதிற்கு மேல் நாம் சாதாரணமாக வீட்டில் எல்லோரும் அருந்தும் தண்ணீரையே அருந்த கொடுக்கலாம்.
குழந்தைகள் சிறுநீர் மற்றும் மலத்தினை சிரமமில்லாமல் கழிக்கும் வரை குழந்தைகளின் தண்ணீரின் அளவை பற்றி நீங்கள் கவலை கொள்ள தேவை இல்லை என்பதே உண்மை.
Can water be given to infants:
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply