Carrot Aval Payasam in Tamil: எட்டு மாத குழந்தை முதல் சாப்பிடக்கூடிய ஹெல்தியான ஸ்வீட் ரெசிபி.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கு ஸ்வீட் என்றல் அலாதி பிரியம்தான்.ஆனால் கொடுக்கும் ஸ்வீட் ஹெல்தியாகவும் இருக்க வேண்டும் அல்லவா! கடைகளில் விற்கப்படும் சர்க்கரை கலந்த ஸ்வீட்களை காட்டிலும் வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்து கொடுத்தால் நமக்கும் மனநிறைவான இருக்குமல்லவா!இதோ சர்க்கரை சேர்க்காத ஆரோக்கியமான கேரட் அவல் பாயாசம். குழந்தைகளுக்கு ஒரு வயதிற்கு கீழ் சர்க்கரை சேர்க்கக்கூடாது .அதற்கு பதிலாக டேட்ஸ் பவுடர் சேர்த்துள்ளேன்.நீங்கள் டேட்ஸ் சிரப் சேர்த்து கொள்ளலாம். நீங்கள் விருப்பப்பட்டால் நாட்டு சர்க்கரை,பனங்கற்கண்டு மற்றும் கருப்பட்டி போன்றவற்றை சேர்த்து கொடுக்கலாம். ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு பசும்பால் சேர்க்கக்கூடாது என்பதால் தேங்காய்ப்பால் சேர்த்துள்ளேன்.இது கூடுதல் ஆரோக்கியமளிக்கும்.
கேரட் அவல் பாயாசம்
தேவையானவை
- அவல்- 3 டே.ஸ்பூன்
- கேரட்- ½ கப்
- தேங்காய்ப்பால்- 1½ கப்
- டேட்ஸ் பவுடர் – 1/4 கப்
- நெய்- 2 டே.ஸ்பூன்
- ஏலக்காய்த்தூள்- ½ டீ.ஸ்பூன்.
Carrot Aval Payasam in Tamil:
செய்முறை
1.கடாயை சூடாக்கி நெய் ஊற்றவும்.
2.அவல் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வறுக்கவும்.
3.துருவிய கேரட் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும்.
4.தேங்காய்ப்பால் சிறிது சிறிதாக சேர்க்கவும்.
5.கலவை கெட்டியாகும் வரை நன்கு கலக்கவும்.
6.டேட்ஸ் பவுடர் சேர்க்கவும்.
7.ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.
8.பாயசம் பதத்திற்கு வருமாறு கலக்கவும்.
9.இதமாக பரிமாறவும்.
இன்னும் சற்று கெட்டியாக கிளறினால் அல்வா போன்று செய்யலாம்.பத்து நிமிடத்தில் செய்து முடிக்க கூடிய ஹெல்தியான ரெசிபி.வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே எளிதாக செய்யலாம்.பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸாகவும் கொடுக்கலாம். பண்டிகை காலங்களில் சிம்பிளான ஸ்வீட்டாகவும் வீட்டிலேயே செய்து அசத்தலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply