Carrot Beetroot Halwa: குழந்தைகளுக்கு நாம் வழக்கமாக காலை உணவு மற்றும் மதிய உணவிற்கு கொடுக்கக்கூடிய ஆரோக்கியமான பல ரெசிபிகளை கடந்து விட்டோம். ஆனால் இன்று நாம் பார்க்க இருப்பது சற்றே வித்தியாசமான ஒரு ஆரோக்கியமான ஸ்வீட் ரெசிபி.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆம் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய கேரட் மற்றும் பீட்ரூட்டை வைத்து ஆரோக்கியமாக ஸ்வீட் ரெசிபி எப்படி செய்யலாம் என்பது தான் இன்று நாம் பார்க்கவிருக்கின்றோம்.
இதனுடைய நிறமும் குழந்தைகளை கவரும் வகையில் இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பவர். இதனை டேட்ஸ் பவுடர் சேர்த்து எட்டு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ௧வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும்போது டேட்ஸ் பவுடருக்கு பதிலாக வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.
Carrot Beetroot Halwa:
கேரட் மற்றும் பீட்ரூட்டின் நன்மைகள்
- கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளதால் கண் பார்வைக்கு நன்மையளிக்க கூடியது .
- வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் சருமம் பொலிவுடன் இருக்க உதவுகின்றது.
- கேரட்டில் ஆன்டி ஆக்சிடண்டுகள் அதிகமாக இருப்பதால் புற்றுநோயினை உருவாக்கும் செல்கள் வளராமல் தடுக்கின்றது.
- இதயத்தில் உள்ள ரத்த செல்கள் மற்றும் இரத்த நாளங்கள் வலுவடைவதற்கு கேரட் உதவுகின்றது.
- கேரட்டில் நார்ச்சத்துக்கள், பொட்டாசியம் ,வைட்டமின் ஏ, டி, இ சத்துக்கள் நிறைந்துள்ளது.
- சிறுநீரகம், பித்தப்பை, கல்லீரல் போன்ற உள்ளுறுப்புகளில் இருக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த கழிவுகளை நீக்க பீட்ரூட் உதவுகின்றது.
- பீட்ரூட்டில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகின்றது.
- பீட்ரூட்டில் பீட்டாலைன் என்ற அலர்ஜி எதிர்ப்பு பண்பு இருப்பதால் நாள்பட்ட அலர்ஜிக்கு தீர்வு காண உதவுகின்றது.
- நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் செரிமான மண்டலத்தை இலகுவாக்கி உணவினை எளிதில் ஜீரணமாக செய்கின்றது.
- பெருங்குடலை சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றது.
Carrot Beetroot Halwa:
- பீட்ரூட்- 1 (தோல் நீக்கியது சிறியது )
- கேரட் -2 (தோல் நீக்கியது சிறியது)
- டேட்ஸ் பவுடர் -4 டேபிள் ஸ்பூன் (8 மாத குழந்தைகளுக்கு )
- வெல்லம் – 1 கப்
- நெய் – 4 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் தூள் -இம்மியளவு
- பொடியாக நறுக்கிய பாதாம் ,முந்திரி மற்றும் பிஸ்தா -2 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் -தேவையான அளவு
Carrot Beetroot Halwa:
செய்முறை
- பானை சூடாக்கி அதில் நெய் ஊற்றி துருவிய கேரட் மற்றும் பீட்ரூட் சேர்த்து ஐந்து முதல் ஆறு நிமிடங்களுக்கு மிருதுவாகும் வரை வதக்கவும்.
- அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வைத்து இடைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
- கேரட் மற்றும் பீட்ரூட் நன்கு வேகும் வரை கிளறவும் .
- அதனுடன் பாதாம் பவுடர் வெல்லத்தூள் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
- கலவையினை அல்வா பதத்திற்கு வரும் வரை நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.
- பொடியாக நறுக்கிய நட்ஸினை மேலே தூவி பரிமாறவும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
குழந்தைகளுக்கு பீட்ரூட் கொடுக்கலாமா?
பீட்ரூட்டில் இயற்கையாகவே ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளதால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கக் கூடியது எனவே குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு கேரட் கொடுக்கலாமா ?
கேரட்டில் இயற்கையாகவே பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு கண் பார்வை திறனை அதிகரிக்க கூடியது. எனவே கேரட்டை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
கேரட் மற்றும் பீட்ரூட்டினை குழந்தைகளுக்கு எப்பொழுது அறிமுகப்படுத்தலாம்?
கேரட் மற்றும் பீட்ரூட்டை குக்கரில் ஆவியில் வேகவைத்து நன்கு மசித்து ஆறு மாத காலம் முதல் குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பிக்கலாம்.
பீட்ரூட் கேரட் அல்வா
Ingredients
- · பீட்ரூட்-1 (தோல் நீக்கியது சிறியது )
- · கேரட்-2 (தோல் நீக்கியது சிறியது)
- · டேட்ஸ்பவுடர் -4 டேபிள் ஸ்பூன் (8 மாத குழந்தைகளுக்கு )
- · வெல்லம் – 1 கப்
- · நெய்- 4 டேபிள் ஸ்பூன்
- · ஏலக்காய்தூள் -இம்மியளவு
- · பொடியாகநறுக்கிய பாதாம் ,முந்திரி மற்றும் பிஸ்தா -2 டேபிள் ஸ்பூன்
- · தண்ணீர்-தேவையான அளவு
Notes
- பானை சூடாக்கி அதில் நெய் ஊற்றி துருவிய கேரட் மற்றும் பீட்ரூட் சேர்த்து ஐந்து முதல் ஆறு நிமிடங்களுக்கு மிருதுவாகும் வரை வதக்கவும்.
- அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வைத்து இடைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
- கேரட் மற்றும் பீட்ரூட் நன்கு வேகும் வரை கிளறவும் .
- அதனுடன் பாதாம் பவுடர் வெல்லத்தூள் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
- கலவையினை அல்வா பதத்திற்கு வரும் வரை நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.
- பொடியாக நறுக்கிய நட்ஸினை மேலே தூவி பரிமாறவும்.
Leave a Reply