Carrot Potato Cutlet: குழந்தைகளுக்கு பள்ளி முடிந்து வந்ததும் ஏதேனும் வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் அவர்கள் முகமே மலர்ந்து விடும். பொதுவாக கடைகளில் மற்றும் பேக்கரிகளில் வாங்கிக் கொடுக்கும் பாக்கெட் ஸ்னாக்ஸினை காட்டிலும் வீட்டிலேயே நாம் செய்து கொடுக்கும் பொழுது நமக்கே மனதில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவினை செய்து கொடுத்தது போன்று திருப்தி ஏற்படும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அதிலும் குழந்தைகளுக்கு கொடுக்கும் ஸ்னாக்ஸில் காய்கறிகளும் சேர்த்து கொடுத்தால் அம்மாக்களுக்கும் டபுள் சந்தோஷம் தானே! அதற்கான ரெசிபி தான் கேரட் உருளைக்கிழங்கு கட்லெட். குழந்தைகளை காய்கறி சாப்பிட வைப்பதற்குள் வீட்டில் போராட வேண்டியது இருக்கும். ஆனால் ஸ்நாக்ஸ் மூலம் காய்கறிகள் சேர்த்துகொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு ஹெல்தியான ஸ்நாக்ஸ் மற்றும் காய்கறி ஆகிய இரண்டும் ஒருசேர கொடுத்தது போல் இருக்கும். இந்த வித்தியாசமான ஸ்னாக்ஸினை பார்ப்பதற்கு முன்பு இந்த காய்கறிகளில் இருக்கும் நன்மைகளை முதலில் பார்ப்போம்.
Carrot Potato Cutlet:
Carrot Potato Cutlet:
கேரட் மற்றும் உருளைக்கிழங்கின் நன்மைகள்
- கேரட் மற்றும் உருளைக்கிழங்கு ஆகிய இரண்டு காய்கறிகளும் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தினை அள்ளித் தருவன.மேலும் இதில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் ஆகியவை நிறைந்துள்ளன
- கேரட் மற்றும் உருளைக்கிழங்கு இரண்டிலும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு செரிமான பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் மற்றும் மலச்சிக்கலை அண்டாமல் தடுக்கக் கூடியது.
- உருளைக்கிழங்கில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் ரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க வல்லது. மேலும் உருளைக்கிழங்கு மற்றும் கேரட் ஆகிய இரண்டும் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க வல்லது.
- இரண்டு காய்கறிகளிலும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்களான விட்டமின் சி, பீட்டா கரோட்டின் ஆகியவை அதிகமாக உள்ளன. எனவே செல்கள் சிதைவடையாமல் தடுக்க வல்லவை.
- கேரட்டில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால் அவை குழந்தைகளுக்கு நல்ல பார்வை திறனை கொடுக்க வல்லது. எனவே கண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை வராமல் தடுக்கும்.
- உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட்கள் அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு நல்ல ஆற்றலை கொடுக்க வல்லது. குழந்தைகள் நாள் முழுவதும் இயங்குவதற்கு தேவையான ஆற்றலை கொடுக்கவல்லது.
- மேலும் கேரட் மற்றும் உருளைக்கிழங்கில் அடங்கியுள்ள வைட்டமின்கள் சருமத்தினை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது.
குழந்தைகளுக்கு தேவையான இந்த ஹெல்த்தியான ஸ்நாக்ஸினை செய்ய சிறிதளவு மெனக்கிட்டாலே போதும். குழந்தைகளுக்கான டேஸ்டியான ஹெல்தியான ஸ்நாக்ஸ் ரெடி.
Carrot Potato Cutlet:
- வேகவைத்து தோலை உரித்த உருளைக்கிழங்கு- 2
- வேக வைத்து தோலை உரித்த காரட்-2
- முட்டை- 1
- பிரட் தூள் – கால் கப்
- பொடியாக நறுக்கிய வெங்காயம்- கால் கப்
- நறுக்கிய கொத்தமல்லி இலைகள்- கால் கப்
- மிளகுத்தூள் -கால் டீஸ்பூன் (ஒரு வயதிற்கு உள்ள மேலே உள்ள குழந்தைகளுக்கு மட்டும்)
- எண்ணெய்- 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை
- கேரட் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். சிறிது நேரம் ஆற வைக்கவும். ஒரு பவுலில் உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டின் தோலை உரித்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.
- அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலைகள், தேவையான அளவுக்கு மிளகுத்தூள் சேர்த்து நன்றாக பிசையவும்.
- ஒரு பௌலில் தனியாக முட்டையை நன்றாக அடித்துக் கொண்டு ஏற்கனவே பிசைந்து வைத்த கேரட் மற்றும் உருளைக்கிழங்கு கலவையை போட்டு நன்றாக பிசையவும்.
- முட்டை உபயோகப்படுத்த வேண்டாம் என்று நினைத்தால் முட்டைக்கு பதிலாக கால் கப் தயிர் சேர்த்து பிசையலாம்.
- பிரட் தூளை அதனுடன் சேர்த்து கட்லெட் பிசைய தேவையான பதத்திற்கு வரும் அளவிற்கு பிசையவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
- கட்லட் வடிவத்திற்கு தட்டி எண்ணெயில் பொரிய விடவும்.
- ஒரு பக்கம் பொன் நிறமாக மாறியதும் மறுபக்கம் திருப்பி விடவும்.
குறிப்பு: குழந்தைகளுக்கு மேலும் ஆரோக்கியமாக கொடுக்க நினைத்தால் காய்கறிகளை குக்கரில் வேகவைப்பதற்கு பதிலாக ஆவியில் வேக வைத்து கொடுக்கலாம். ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது மிளகு சேர்க்க தேவையில்லை. உருளைக்கிழங்கிற்கு பதிலாக சர்க்கரை வழக்கில் இருந்து சேர்த்தும் கட்லெட் செய்து கொடுக்கலாம். பிரட் தூளிற்கு பதிலாக கடலை மாவு சேர்த்து பிசைந்து கட்லெட் செய்யலாம். இதனை நீங்கள் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் போன இடம் தெரியாது. மீண்டும் கேட்டு வாங்கி விரும்பி சாப்பிடுவார்கள்.
Carrot Potato Cutlet:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
குழந்தைகளுக்கு கேரட் மற்றும் உருளைக்கிழங்கு ஆகிய இரண்டும் சேர்த்து கொடுக்கலாமா?
குழந்தைகளுக்கு கேரட் மட்டும் உருளைக்கிழங்கு இரண்டும் ஆரோக்கியமானது என்பதால் நீங்கள் தாராளமாக கொடுக்கலாம்.
கேரட்டினை தினமும் கொடுக்கலாமா?
கேரட் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது என்பதால் தாராளமாக தினமும் கொடுக்கலாம்.
Leave a Reply