வேகவைத்து மசித்த கேரட், உருளைக்கிழங்கு
கேரட் உருளைக்கிழங்கு கூழ்
(குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்)
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
Carrot Urulai kilangu kool for babies in tamil
- கேரட் – 1 (நடுத்தர அளவிலானது)
- உருளைக்கிழங்கு – 1 (நடுத்தர அளவிலானது)
- ஓமம் அல்லது சீரகப்பொடி – சிறிது
செய்முறை :
- கேரட், உருளைக்கிழங்கை நன்றாக கழுவி தோல் சீவிக் கொள்ளவும்.
- இதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.
- ஒரு பாத்திரத்தில் இதனை வைத்து பிரஷர் குக்கரில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு
- அதற்குள் இதை வைத்து 2 முதல் 3 விசில் வரை வேகவிடவும்.
- நன்றாக வெந்த இதனை கைகளால் மசித்தோ மிக்ஸியில் அரைத்தோ கொடுக்கலாம்.
- சுவைக்காக ஓமம் அல்லது சீரகப்பொடி சேர்த்துக் கொள்ளலாம்.
- குழந்தை எளிதாக சாப்பிட தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் சேர்த்துக் கொள்ளலாம்.
தெரிந்து கொள்ள வேண்டியது:
- உங்கள் குழந்தைக்கு ஏற்ற உணவு கேரட் என்பதால் இதனை 6 வது மாதத்தில் இருந்து கொடுக்கலாம்.
- கடைகளில் கேரட்டை வாங்கும்போது கறைகள், கீறல்கள் இல்லாமல் பார்த்து வாங்குங்கள்.
- குழந்தைகளின் உடலில் வைட்டமின் ஏ சத்துகளை உருவாக்கும் பீட்டா கரோட்டீன் என்ற சத்து நிறைந்து கேரட்டில் இருக்கிறது
- குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் தன்மை கேரட்டிற்கு உண்டு
- உருளைக்கிழங்கை வாங்கும்போது எந்த வித கீறலோ, கறைகளோ இல்லாமல் வாங்குங்கள். முளைத்து வரும் கிழங்குகளையும் வாங்க வேண்டாம்.
- உருளைக்கிழங்கில் அதிகமான கார்போஹைட்ரேட் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு ஏற்றது. நடுத்தர சைஸில் உள்ள உருளைக்கிழங்கில் 26 கிராம் கார்போஹைட்ரேட் சத்து உள்ளது.
- உருளைக்கிழங்கு சில குழந்தைகளுக்கு வாயுத் தொல்லையை ஏற்படுத்தும் என்றும் சொல்கிறார்கள். எனவே இதையும் கருத்தில் கொள்ளுங்கள்.
- “உருளைக்கிழங்கு சில குழந்தைகளுக்கு வாயுத் தொல்லையை ஏற்படுத்தும் என்றும் சொல்கிறார்கள். எனவே குழந்தைக்கு இதனை கொடுக்கும் போது எச்சரிக்கையாக இருங்கள்”
கூடுதலாக ரெசிபிகள் தேவையா? கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்…
குழந்தைகளின் உணவில் எப்போது எப்படி மசாலாவை சேர்க்கலாம்? என்பதை இங்கு க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்
ரெசிபிகளை காண வேண்டுமா? இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply